எதிர்வரும் 2026- தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனைத்தும் 11.12.2025 முதல் முதல்நிலை சரிபார்ப்பு பணி (First Level Checking) நடைபெறவுள்ளது .
எதிர்வரும் 2026- தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைகளின்படி, தேர்தலுக்கு முன்னதாக, தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தையும் சரிபார்க்கும் பணிகள் நிறைவு செய்யப்பட வேண்டுமென்பதால், விருதுநகர் மாவட்டம், பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலக இரண்டாம். தளத்தில் (பழைய DRDA அலுவலகம்) வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பறை கிட்டங்கியில் வைக்கப்பட்டுள்ள வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனைத்தும் 11.12.2025 முதல் முதல்நிலை சரிபார்ப்பு பணி நடைபெறவுள்ளது.
மேற்படி, 11.12.2025 முதல் விருதுநகர் மாவட்டம், பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலக இரண்டாம் தளத்தில் (பழைய DRDA அலுவலகம்) வைப்பறை கிட்டங்கி, மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சியர் தலைமையில், சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர்(LA) மேற்பார்வையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் கிட்டங்கி திறக்கப்பட்டு, வாக்குப்பதிவு இயந்திரங்கள், பெல் நிறுவன பொறியாளர்களால் சரிபார்க்கப்படும்.
மேலும், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் அல்லது அவர்களால் நியமிக்கப்படும் முகவர்கள் காலை 09.00 மணி முதல் மாலை 07.00 வரை நடைபெறும் வாக்குப்பதிவு இயந்திரங்களின் முதல்நிலை சரிபார்ப்பு பணிகளை நேரில் பார்வையிடலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply