அரிசியை விட 8 மடங்கு இரும்புச் சத்து உள்ள கம்பு
அரிசியை விட 8 மடங்கு இரும்புச் சத்து உள்ள கம்பு.பெண்களுக்கு இந்த உணவு முக்கியம்
கம்பு பருவமடைந்த பெண்களுக்கு சிறந்த உணவாக உள்ளது. மாதத்தில் நான்குமுறையாவது கம்பை உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
மாதவிடாய் சமயங்களில் அடி வயிற்று வலியும், ரத்தபோக்கும் உண்டாகும் நேரங்களில் சூடாக கம்பு கூழ் அல்லது கம்பு சூப் வைத்துகொடுப்பதன் மூலம் இவை குறையலாம். அதே நேரம் கம்பு உடன் மோர் மற்றும் சாம்பார் வெங்காயம் சேர்த்தும் சாப்பிடலாம்.
பிரசவித்த பெண்கள் கம்பு உணவு எடுத்துகொள்ளும் போது தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்.அதோடு ஆற்றல் மிகுந்த சத்துகளை கொண்டிருப்பதால் அவர்கள் சோர்வு, இல்லாமலும் இருப்பார்கள். நோய் எதிர்ப்பு சக்தி அளிக்கக்கூடியது.
0
Leave a Reply