நரம்பு மண்டலத்தை வலுப்படுத்தும் உளுந்தம்பால்.
செய்முறை-
அரை கப் உளுந்தை நன்றாக கழுவி, குழைய வேகவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
இதை ஆற வைத்து, மிக்ஸியில் விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
அடுப்பில் கடாய் வைத்து அரைத்த விழுதை ஊற்றி ,வெல்லம் சேர்த்து கொதிக்க விடவும்.
நன்கு வெந்தவுடன் 1 கப் தேங்காய் பால் சேர்த்து இறக்கவும். தேங்காய் துருவல், சுக்குத்தூள் கலந்து பருகலாம்
புரதம் நிறைந்த இந்த பால், நரம்பு மண்டலத்தை வலுப்படுத்தும். உடலுக்கு குளிர்ச்சி தரும். உடலை இரும்பு போல் மாற்றும்.
0
Leave a Reply