25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


உலகம் முழுவதும் விரும்பக்கூடிய பறவை மயில்கள்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

உலகம் முழுவதும் விரும்பக்கூடிய பறவை மயில்கள்.

பறவைகளில் மிக அழகானது மயில். முருகப்பெருமானின் வாகனமாக போற்றப்படுகிறது. பொதுவாக, பறவைகளில் பெண் இனங்கள்தான் அழகாக தோன்றும். ஆனால், மயில் இனத்தில் ஆண் மயில்கள்தான் அழகாக தோன்றுகிறது. மயில்கள் தெற்காசிய நாடுகளில் பரவி காணப்படும் மிகப்பெரிய பறவை இனம். இவற்றின் அழகை கண்டு, ஐரோப்பிய செல்வந்தர்கள் வளர்ப்பு பறவைகளாக தங்கள் நாடுகளுக்கு கொண்டு சென்றதாக வரலாறுகள் கூறுகின்றன. 

பின்னர் அமெரிக்கா போன்ற நாடுகளிலும் மயில்கள், வளர்ப்பு பறவைகளாக மாறின. எகிப்து நாட்டுக்கு கொண்டு செல்லப்பட்ட மயில்களின் அழகில் மயங்கிய எகிப்தியர்கள் அதனை மாயப் பறவை என்று புகழ்ந்தனர். மயில்கள் நல்ல நல்ல அதிர்ஷ்டங்களை கொண்டு வரும் என்று நம்பினர். மயில்கள் தோகையை விரிக்கும் அழகிய நிகழ்வை வெளிநாடுகளில் வியந்து ரசிக்கிற மக்கள் ஏராளம். மயில்கள் கோழி இனத்தை சேர்ந்த பறவைகள் என்றாலும், கோழிகளை விட புத்திசாலித்தனமும், மனிதர்களோடு எளிதாக பழகும் தன்மையும் கொண்டிருக்கின்றன.

ஒரு காலத்தில், மயில் இறைச்சியை அதிக அளவில் உணவாக சாப்பிட்ட ஐரோப்பியர்கள், மயில்களை பாதுகாக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு பெற்று, மயில் இறைச்சியை விட்டுவிட்டு ,வான்கோழி இறைச்சிக்கு மாறியதாக கூறப்படுகிறது. இந்தியாவின் பெருமைமிகு பறவை இனமான மயில்கள், உலகம் முழுவதும் விரும்பக்கூடிய பறவைகள் என்பதில் சந்தேகமில்லை. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News