25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


உலகக் கோப்பை ஹாக்கி: அரையிறுதி வாய்ப்பை தக்கவைக்க இந்தியாவுக்கு வெற்றி அவசியம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

உலகக் கோப்பை ஹாக்கி: அரையிறுதி வாய்ப்பை தக்கவைக்க இந்தியாவுக்கு வெற்றி அவசியம்.

உலகக் கோப்பை ஹாக்கி தொடரில் இன்று இந்திய அணி, அர்ஜென்டினாவை எதிர்கொள்கிறது. அரையிறுதி வாய்ப்பைத் தக்கவைக்க, இந்திய அணி அதிக கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

பெல்ஜியத்தின் வேவ்ரே மற்றும் நெதர்லாந்தின் ஆம்ஸ்டல்வீன் நகரங்களில் உலகக் கோப்பை ஹாக்கியின் 16-வது சீசன் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளில் நடைபெற்று வருகிறது. முதல் சுற்றில் ‘டி’ பிரிவில் இடம் பெற்ற இந்திய அணி, வேல்ஸ் மற்றும் பாகிஸ்தானை வீழ்த்தியது. இங்கிலாந்திடம் தோல்வியடைந்த இந்தியா, தனது பிரிவில் 2-வது இடம் பிடித்தது.

அரையிறுதிக்கான 2-வது சுற்றில் ‘இ’ பிரிவில் இடம் பெற்ற இந்திய அணி, முதல் போட்டியில் நெதர்லாந்திடம் தோல்வியடைந்தது. மற்றொரு ஆட்டத்தில் அர்ஜென்டினா அணி, இங்கிலாந்தை வீழ்த்தியது. இதன் மூலம் நெதர்லாந்து அணி 6 புள்ளிகளுடன் அரையிறுதிக்கு முன்னேறியது.

மீதமுள்ள ஒரு அரையிறுதி இடத்துக்கு இங்கிலாந்து, அர்ஜென்டினா மற்றும் இந்தியா அணிகள் போட்டியிடுகின்றன. இங்கிலாந்து மற்றும் அர்ஜென்டினா தலா 3 புள்ளிகளுடன் உள்ள நிலையில், இந்தியாவுக்கு இன்னும் புள்ளிகள் கிடைக்கவில்லை.

இன்று ‘இ’ பிரிவில் நடைபெறும் போட்டிகளில் இந்தியா–அர்ஜென்டினா அணிகளும், நெதர்லாந்து–இங்கிலாந்து அணிகளும் மோதுகின்றன. அர்ஜென்டினாவுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா அதிக கோல் வித்தியாசத்தில் வெற்றி பெறுவதுடன், மற்ற போட்டியின் முடிவும் சாதகமாக அமைய வேண்டும். அப்போதுதான் இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்பு நீடிக்கும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *