சிறுநீரக கற்கள் விரைவில் கரைய வாழைத்தண்டு ஜூஸ்
சிறுநீரக கற்கள் வராமல் இருக்கவும், இருக்கும் சிறுநீரக கற்கள் விரைவில் கரையவும், குறைந்தது வாரத்திற்கு ஒரு முறையாவது வாழைத்தண்டு ஜூஸ் குடிக்க வேண்டும்.வாழைத்தண்டில் நார்ச்சத்து அளவுக்கு அதிகமாக இருப்பதால், எடையைக் குறைக்க நினைப்போர் வாழைத்தண்டு ஜூஸை காலையில் தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால், நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருப்பதோடு, உடல் எடையையும் விரைவில் குறையும்.இரைப்பையில் அளவுக்கு அதிகமாக அமிலம் சுரக்க நேர்ந்தால், நெஞ்செரிச்சல் ஏற்படும். இத்தகைய பிரச்சனைக்கு உடனடி தீர்வு காண, காலையில் வெறும் வயிற்றில் வாழைத்தண்டு ஜூஸ் குடிக்கவேண்டும்.நீரிழிவு நோயாளிகள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுடன் வைக்க, தினமும் வாழைத்தண்டு ஜூஸ் குடிப்பது நல்லது. இப்படி தினமும் குடித்தால், நீரிழிவிற்கான மருந்துகளை எடுக்க வேண்டிய அவசியமே இருக்காது.
வாழைத்தண்டு ஜூஸ் சிறுநீரக பாதையில் ஏதேனும் நோய்த்தொற்று ஏற்பட்டிருந்தால், அதனை குணப்படுத்தவும் பெரியும் உதவியாக இருக்கும்.வாழைத்தண்டில் நிறைந்துள்ள வைட்டமின்B6 மற்றும் இரும்பு சத்துக்கள் இரத்தத்தில் ஹிமோகுளோபின் அளவுகளை அதிகரிக்க உதவுகின்றன. அதேசமயம் வாழைத்தண்டில் காணப்படும் பொட்டாசியம் சத்துக்கள் கொலஸ்ட்ராலை நீக்கவும் உயிர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும் உதவுகின்றன. இது இதயம் மற்றும் உடலின் தசைகளை வலுப்படுத்துகிறது. வாழைத்தண்டு சாறு சிறுநீரக கற்களைத் தடுப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வாழைத்தண்டில் உள்ள பொட்டாசியம் சிறுநீரகத்தில் கால்சியம் படிகங்கள் அல்லது கால்சியம் கட்டிகள் உருவாவதை தடுக்கிறது. அதிகப் பலன்களைப் பெற ஏலக்காய் பொடியுடன் சேர்த்து இந்த ஜூஸை பருகலாம்.
0
Leave a Reply