நோய் எ திர்ப்பு சக்தி அதிகரிக்கும்வெற்றிலை கஷாயம்.
இருமல்,சளி போன்றவற்றிற்கு வெற்றிலை ஒரு சிறந்த மருந்தாக பயன்படுகிறது ஐந்து மிளகுடன் வெற்றிலையை மென்று சாப்பிட்டால் சளி நீங்கும். கடுகு எண்ணெயில் சூடு படுத்திய வெற்றிலையை மார்பில் தடவினால் சளி குறையும், ஏலக்காய் கிராம்பு மற்றும் லவங்கப் பட்டையுடன் வெற்றிலையை சேர்த்துகொதிக்க வைத்த வெற்றிலை கஷாயம் மார்பு சளியை வெளியேற்ற உதவும்.
வெற்றிலை,துளசி,கற்பூரவள்ளி இலைகளை நன்றாக கழுவி தண்ணீரில் போட்டு மஞ்சள் தூள்,மிளகு தூள்,பனங்கற்கண்டு சேர்த்து கொதிக்க விட்டு வெதுவெதுப்பான சூட்டில் குடித்தால் நல்ல நோய் எ திர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
குழந்தைகளுக்கு வரும் காய்ச்சல், ஜன்னிக்கு, வெற்றிலைச் சாற்றில் , கஸ்தூரி, கோரோசனை, சஞ்சீவி ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை மசித்து தேனுடன் கொடுக்க குணமாகும். சளி, இருமல், மாந்தம், இழுப்பும் குணமாகும். சிறுவர்களுக்கு அஜீரணத்தைப் போக்கி பசியைத் தூண்ட வெற்றிலையோடு மிளகு சேர்த்து கஷாயம் செய்து கொடுத்து வரலாம்.
0
Leave a Reply