தேங்காய் எண்ணெயும், அரிசி சாதமும்...!
அமெரிக்க வேதியியல் சங்கம் சில ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டது. அதில், கொதிக்கும் நீரில் ஒரு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் விட்டு அரிசியை சமைத்தால் அது உடலில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பதை கட்டுப்படுத்த உதவும். உடலால் உறிஞ்சப்படும் கலோரிகள் எண்ணிக்கையை குறைக்கும் என ஆராய்ந்து கூறினர்.
மேலும், இந்த செயல்முறை காரணமாக அரிசியில் உள்ள மாவுச்சத்து உடலால் உறிஞ்சப்படுவது கணிசமாக தடுக்கப்படுகிறது. தேங்காய் எண்ணெயை சேர்த்து அரிசியை சூடு படுத்துவதால் உடலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது, உண்பதற்கு சுவையாகவும், ஏராளமான நன்மைகளை கொண்டுள்ளதாகவும் இருக்கும் எனவும் அந்த ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
0
Leave a Reply