முடக்கத்தான் கீரையைத் தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடமூட்டு வலி குணமாகும்.
முடக்கத்தான் கீரையைத் தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் மூட்டுவலி குணமாகும். தோசை மாவிலும் முடக்கத்தான் கீரையைக் கலந்து தோசை செய்து சாப்பிடலாம்.
குப்பைமேனி இலையுடன் சதகுப்பை விதையை அவித்துச் சிறிதளவு சுண்ணாம்பு சேர்த்து அரைத்துப் பத்துப் போடலாம். வெங்காயத்தை, கடுகு எண்ணெய் உடன் சேர்த்து அரைத்துப் பத்துப் போடலாம்.
கைப்பிடி அளவு கருப்பு கவுணி அரிசியை, கஞ்சியாக காய்ச்சி வாரத்தில்3 முறை குடித்து வந்தால் மூட்டு வலி பறந்து ஓடி விடும்.
ஒரு கைப்பிடி அளவு முருங்கை இலை, சீரகம் பூண்டு மஞ்சள் சேர்த்து அரைத்து கஞ்சியாக காய்ச்சி குடித்து வந்தால் மூட்டு வலி காணாமல் போகும்.
ஊமத்தை இலை, நொச்சி இலை, சிற்றாமணக்கு இலையை விளக்கெண்ணெய் விட்டு வதக்கிக் கட்டலாம். பிரண்டையின் வேர்ப் பொடி, முடக்கத்தான் இலைப் பொடி, தழுதாழை இலைப் பொடி, இவற்றைச் சம அளவு கலந்து, அரை ஸ்பூன் மிளகுத் தூளுடன் பாலில் சேர்த்து அருந்தலாம்.
0
Leave a Reply