பம்ப்ளிமாஸ் பழம்.
பம்பளிமாஸ் பழம் சாத்துக்குடி, ஆரஞ்சு வகையைச் சேர்ந்தது. இந்தப் பழம் பச்சை நிறத்தில் பெரிய பந்து போல இருக்கும். முற்றின காயின் மேல் இளம் மஞ்சள் நிறத்தில் மாறும் அதுதான் பழம். இதன் தோல் அழுத்தமாக காணப்படும். உள்ளே சாத்துக்குடிபோல சுளைகள் இருக்கும்.
சிலவகை வெள்ளைச் சுளைகளைக் கொண்டிருக்கும். சிலவற்றின் சுளைகள் ரோஸ் நிறத்தில் காணப்படும். இந்த இரண்டு வகைப் பழங்களின் குணமும் ஒன்றுதான். இதில் புளிப்பு, இனிப்பு என இரண்டுவகை உண்டு.
இதில் புளிப்புவகையை விட இனிப்பு வகையே சிறந்தது. இது அனைத்து காலங்களிலும் கிடைக்காது அதற்கென உள்ள சீசனில் மட்டுமே கிடைக்கும். இது குளிர்ச்சி நிறைந்தது எனவே சளி, சீதாள தேகம் உள்ளவர்கள் இதனை சாப்பிடக்கூடாது.
புரதம்,கார்போஹைட்ரேட்,வைட்டமின் C ,வைட்டமின் A ,தாமிரம்,பொட்டாசியம்,கால்சியம் சத்து உடலுக்கு தேவையான ஆரோக்கியத்தை அளிப்பதோடு, கோடைகால சோர்வினை போக்குகிறது.
பம்ப்ளிமாஸ் பழம் மஞ்சள் காமாலை நோயின் தாக்கத்தை குறைக்கிறது. இரத்தசோகையைப் போக்கும் குணம் பம்பளிமாஸ் பழத்திற்கு உண்டு.
இந்தப் பழத்தின் சுளைகளை மதிய உணவுக்குப்பின் தினமும் சாப்பிடுவது நல்லது.
வைட்டமின் A சத்துக்குறைவால் ஏற்படும் மாலைக்கண் நோயை தடுக்க பம்ப்ளிமாஸ் பழம் சிறந்தது.
0
Leave a Reply