25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


16ம் நூற்றாண்டின் இறுதியில் கலீலியோவால் கண்டுபிடிக்கப்பட்டவெப்பத்தை அளக்கும் கருவி,  தெர்மாமீட்டர்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

16ம் நூற்றாண்டின் இறுதியில் கலீலியோவால் கண்டுபிடிக்கப்பட்டவெப்பத்தை அளக்கும் கருவி,  தெர்மாமீட்டர்.

 16ம் நூற்றாண்டின் இறுதியில் கலீலியோவால், வெப்பத்தை அளக்கும் கருவி, கண்டுபிடிக்கப்பட்டது. தெர்மாமீட்டர் என்று பெயர் கொண்ட இதில், முதலில்காற்று பயன்படுத்தப்பட்டது. வெப்பநிலையைப் பற்றி சுமாரான அளவுகளையே இதுதெரிவித்தது. பின் இதன் திறனை அதிகரிக்க, காற்றிற்கு பதில் ஆல்கஹால் உபயோகிக்கப்பட்டது.

உடல் வெப்பத்தை கண்டறிய முதன்முதலில் தெர்மாமீட்டரைப் பயன்படுத்தியவர், சாங்டோரியல் என்பவர். அவரது தெர்மாமீட்டர், நீண்ட நெளிவுள்ள குழாய் வடிவில் இருந்தது. அதன் மேல்முனையில் முட்டை வடிவமுள்ள ஒரு குமிழ்  மறுமுனை திறந்திருக்கும். அதன் குமிழை நோயாளி வாயில் வைத்துக் கொள்ள,மறுமுனை தண்ணீரில் வைக்கப்பட்டிருக்கும்..

குழாயில் உள்ள காற்று வெப்பமாகி விரிவடையும். அந்தக் குமிழை வாயிலிருந்து எடுத்து குளிர வைத்தால், அதிலுள்ள காற்று சுருங்குகிறது. அந்த இடத்தில் தண்ணீர் ஏறுகிறது. எவ்வளவு உயரம் நீர் ஏறுகிறதோ,அதுவே நோயாளியின் உடல் வெப்ப அளவு.தெர்மாமீட்டரில் பயன்படுத்தப்படும் ஆவியோ, திரவமோ, வெளி வெப்ப நிலைக்கு ஏற்ப அது சுருங்கி விரியும் தன்மையை அடிப்படையாகக் கொண்டே வேலை செய்கிறது.

ஆல்கஹால் தெர்மாமீட்டர் இப்போதும் சில நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ரெனி டிருயுமர் எனும் பிரெஞ்சுக்காரர், 1731ம் ஆண்டு இதை உருவாக்கினார். இதைத் தொடர்ந்து, 11 ஆண்டுகளுக்கு பின், ஸ்வீடனை சேர்ந்தஆண்டர்ஸ் செல்ஷியஸ் எனும் வானியலாளர், இதில் சென்டி கிரேட் முறையை முதல் முதலில் அறிமுகப்படுத்தினார். இம்முறையில், உறைநிலை 0 டிகிரி சென்டிகிரேட்; கொதிநிலை - 100 டிகிரி சென்டிகிரேட்.

தெர்மாமீட்டரில், 1714ம் ஆண்டில் முதல் முதலில் பாதரசத்தை பயன்படுத்தியவர் ஜெர்மன் விஞ்ஞானி டேனியல் கேப்ரியல் பாரன்ஹீட்.இவரது தெர்மாமீட்டரின் அளவைக்கு, பாரன்ஹீட் என்று, இவரது பெயரே சூட்டப்பட்டது. இந்த அளவையின் படி, தண்ணீரின் உறைநிலை - 32 டிகிரி பாரன்ஹீட், கொதிநிலை -212 டிகிரி பாரன்ஹீட்.

பாதரசத்திற்கு மிக அதிக கொதி நிலையும், தாழ்வான உறைநிலையும் இருப்பதால் தெர்மாமீட்டரில் பெருமளவு இதையே உபயோகிக்கின்றனர். இதை விட அதிக வெப்ப நிலையை அளக்க உதவும் தெர்மாமீட்டர்களில், காலியம் என்ற உலோகத்தைப் பயன்படுத்துகின்றனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News