25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


இந்துக்களின் ஆன்மீக நம்பிக்கை

Jan 02, 2026

வீட்டில் நல்லது நடக்க ..

முகம் பார்க்கும் கண்ணாடி வட்ட வடிவில் இருந்தால் பணவரவு அதிகரிக்கும். வீட்டை கழுவும் போது சிறிது கல் உப்பு போட்டு துடைத்தால் வாஸ்து பிரச்சனைகள் வராது. வலம்புரி சங்கில் தண்ணீர், துளசி சேர்ந்து வீட்டை சுற்றி தெளித்தால் கண் திருஷ்டி நீங்கும். வாஸ்து குறையுள்ள வீட்டிற்கு குற்றாலம், பிள்ளையார்பட்டி சென்று வந்தால் வாஸ்து பிரச்சனைகள் தீரும். திருச்சியில் உள்ள திருப்பைஞ்ஞீலி ஸ்ரீலிவனேசுவரர் கோவிலுக்கு சென்றால் திருமண தடை நீங்கும். நவக்கிரக கோயில்களுக்கு ஒரே நாளில் சென்று வந்தால் அனைத்து நவகிரக தோஷங்களும் நீங்கும்.

Dec 26, 2025

மார்கழியில் கட்டாயம் பெண்கள் செய்ய வேண்டியவை.

 பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து, குளிக்க வேண்டும்.வாசலில் சாணம் / மஞ்சள் கலந்த நீரை தெளிக்க வேண்டும்.வாசலில் கோலமிட்டு, விளக்கேற்ற வேண்டும்.பகவானுக்கு பூஜை மற்றும் நெய்வேத்தியங்களை செய்ய வேண்டும்.மாதம் முழுவதும் தினமும் காலையில் ஆலயம் சென்று வழிபட வேண்டும்.தினமும் திருப்பாவை, திருவெம்பாவை பாசுரங்களை பாட/ படிக்க/கேட்க வேண்டும்.திருமணம் ஆகாத பெண்கள் ஆண்டாள் பாசுரத்தில் கூறியபடி விரதம் இருக்க வேண்டும்.இதனை பாவை நோன்பு என்று கூறுவார்கள்.மாலையிலும் தீபம் ஏற்ற வேண்டும்.ஆலடத்திற்கு கைங்கரியம் செய்ய வேண்டும்.தான தருமங்களை மேற்கொள்ள வேண்டும்.

Dec 19, 2025

தீபம் ஏற்றும் போது…..

சுவாமிக்கு வலது பக்கம் தீபம் ஏற்ற வேண்டும்.சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது காமாட்சி அம்மன் விளக்கைக் அணைக்கக் கூடாது.காமாட்சி அம்மனுக்கு துணை விளக்காய் மண் விளக்கு ஏற்றலாம்.தீபம் ஏற்றிவிட்டு உச்சரிக்க வேண்டிய மந்திரம், "ஓம் தீப லக்ஷ்மியே நமோ நமஹ”தீபம் ஏற்றும் நேரம் அரை மணி நேரம் கழித்து மலையேறலாம். அரை மணி நேரத்துக்கு மேல் எரிவது அவரவர்கள் விருப்பம், வசதியைப் பொறுத்தது.தீபம் எப்போதும் கிழக்கு அல்லது வடக்கு நோக்கி ஏற்ற வேண்டும். 

Dec 12, 2025

பூஜை அறை கோவிலாக...

ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் சோம்பு -2 ஸ்பூன், ஏலக்காய்-10, சந்தனம் -3, பச்சை கற்பூரம் 1 சின்ன துண்டு, ஜவ்வாது - 4 ஸ்பூன், விரலிமஞ்சள்-2 இந்த பொருட்களை எல்லாம் போட்டு நைசாக பொடியாக அரைத்துக் கொள்ளுங்கள். இந்த பொடியை அரைக்கும் போதே நமக்கு இந்த பொடியின் வாசம் மனதை மயக்கும். இதை நீங்கள் ஒரு சின்ன கிண்ணத்தில் ஒரு ஸ்பூன் கலந்து வைத்தால் பூஜை அறையில் நாள் முழுவதும் வாசனையாக இருக்கும் ஒரு நேர்மறை எண்ணத்தையும் தரும் நம் வீட்டிற்கு

Dec 12, 2025

சமையல் அறையில் எந்த திசையில்  உப்பை வைக்க வேண்டும் ?

 அடுப்பின் முன் நின்று சமைக்கும் பொழுது உங்களுடைய வலது கை பக்கத்தில் உப்பு ஜாடியை வைக்க வேண்டும். உப்பை எட்டி எடுக்குமாறு வைக்காமல், கையெட்டும் தூரத்தில் வைக்க வேண்டும். உயரத்தில் இருக்குமாறு உப்பு ஜாடியைவைக்கக் கூடாது மண் மற்றும் பீங்கான் பாத்திரத்தில்  உப்பை வைப்பது சிறந்தது பிளாஸ்டிக் மற்றும் எவர்சில்வர் பாத்திரத்தை தவிர்ப்பது நல்லது.

Dec 05, 2025

. கருட தரிசனம் கோடி புண்ணியம்.

1. போட்ட அழுக்கு துணியே, மீண்டும் மீண்டும் போடுவது வறுமையை உண்டாக்கும். 2. பெண்கள் மாதவிலக்கு நேரத்தில் மஞ்சள்  உரைத்து பூசி குளித்து, கருப்பு மையில் பொட்டு வைத்து கொண்டால் காத்து கருப்பு அண்டாது. 3.அதிகமாக கிழிந்த துணிகளை, உபயோகிக்க கூடாது. இவை தரிதரத்தை உண்டாக்கும். 4. தரையில் கை ஊன்றி சாப்பிடக்கூடாது, இவை நம் சக்தி அனைத்தும் கீழே பூமாதேவி இழுத்து கொள்வாள். 5. கருட தரிசனம் கோடி புண்ணியம். நாம் கருடனை வானத்தில் அண்ணாந்து பார்ப்பது மிகவும் புண்ணியத்தை தரும். 6. பெண்கள் கைகளில் வளைகள் இல்லாமல் சாப்பாடு பரிமாறக்கூடாது .மற்றும் பூஜை அறையில் பூஜை செய்யக்கூடாது, இவை வறுமை உண்டாக்கும்.

Nov 28, 2025

நாம் இறந்த பிறகும் புண்ணியம் தரும் தானம் எது தெரியுமா?.

தாம் உயிரோடு இருக்கும் பொழுது மட்டுமல்லாமல், நாம் இறந்த பிறகும் புண்ணியத்தை தரும் தானம் பசு தானம் மட்டும்தான்.பசுவை தானமாக செய்பவர்கள் இறந்த பிறகு சொர்க்கத்துக்கு செல்வார்கள் என்பது ஐதிகம்.முக்கியமாக கர்ப்பினியான பசுவை தானமாக கொடுத்தால் வைகுண்டத்தில் வாசம் செய்ய அனுமதி கிடைக்கும் ,என்று சாஸ்திரம் கூறுகிறது.நாம் தானம் கொடுக்கும் பொழுது மன தூய்மையுடன், ஒழுக்கத்துடன், முழு மனதுடன் கொடுக்க வேண்டும்.அப்போது தான் நாம் கொடுத்த தானம் நமக்கு நல்ல பலனை பெற்றுத் தரும்.

Nov 21, 2025

சிவபெருமானின் மிகவும் சக்தி வாய்ந்த மந்திரம் .

எவர் ஒருவர் தொடர்ந்து ருத்ர காயத்திரி மந்திரம் சொல்லி வருகிறாரோ அவர்கள் மனதில் நினைத்த காரியம் நிச்சயம் நிறைவேறும்.ருத்ர காயத்ரி மந்திரம்:நமஸ்தே அஸ்து பகவன் விச்வேஸ்வராய மஹாதேவாய த்ரயம்பகாய த்ரிபுராந்தகாய த்ரிகாக்னி காலாய காலாக்னீ ருத்ராயநீலகண்டாய ம்ருத்யுஞ்ஜாய ஸர்வேஸ்வராய ஸதா சிவாய ஸ்ரீமன் மஹாதேவாய நம

Nov 14, 2025

தானம் 

1. அன்ன தானம் - தரித்திரமும் கடனும் நீங்கும். 2 வஸ்திர தானம் ஆயுளை விருத்தி செய்யும். 3. பூமி தானம் - பிரமலோகத்தையும், ஈஸ்வர தரிசனத்தையும் கொடுக்கும். 4 கோதுமை தானம் - ரிஷிக்கடன், தேவகடன், பிதுர்கடன் ஆகியவற்றை அகற்றும். 5. தீப தானம் - கண்பார்வை தீர்க்கமாகும். 6 நெய், எண்ணை தானம் - நோய் தீர்க்கும். 7.தங்கம் தானம் - குடும்ப தோஷம் நீங்கும். & வெள்ளி தானம் - மனக்கவலை நீங்கும். 9.தேன்தானம்-புத்திர பாக்கியம் உண்டாகும். 10 நெல்லிக்கனி தானம் - ஞானம் உண்டாகும். 11.அரிசி தானம்-பாவங்களைப் போக்கும். 12 பால் தானம்- துக்கம் நீங்கும்.. 13. தயிர் தானம் இந்திரிய விருத்தி ஏற்படும். 14 தேங்காய் தானம் நினைத்த காரியம் நிறைவேறும். 15.பழங்கள் தானம் புத்தியும் சித்தியும்கிட்டும்.

Nov 07, 2025

புண்ணியத்தின் பலன் எத்தனை தலைமுறையை காக்கும்.

கங்கை போன்ற புனித நதியில் நீராடுவது-3 தலைமுறை. பாழடைந்த கோவிலில் தீபம் ஏற்றுவது- 5 தலைமுறை. கோவில் திருப்பணிக்கு உதவுவது-7 தலைமுறை. ஏழை பெண்ணுக்கு திருமணம் செய்வது - 9 தலைமுறை. அனாதை பிணத்திற்கு அந்திம கிரியை - 11 தலைமுறை கோசாலைக்கு உதவுவது, பசு பராமரிப்பு - 13 தலைமுறை. காசி, கயாவில் செய்யப்படும் தர்ப்பணம் -16 தலைமுறை. பசிக்கு உணவு அளிப்பது அன்னதானம் 27 தலைமுறை.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12

AD's



More News