உலகக் கோப்பை ஹாக்கி: இந்தியாவுக்கு ஏமாற்றம்.
ஆண்கள் போட்டி
பெல்ஜியத்தின் வேவ்ரே, நெதர்லாந்தின் ஆம்ஸ்டல்வீன் நகரங்களில் உலகக் கோப்பை ஹாக்கி போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
ஆண்களுக்கான போட்டியில், அரையிறுதிக்கான இரண்டாவது சுற்றில் ‘இ’ பிரிவில் இடம்பெற்ற இந்திய அணி, முதல் போட்டியில் நெதர்லாந்திடம் தோல்வியடைந்தது. இதையடுத்து நேற்று ஆம்ஸ்டல்வீனில் அர்ஜென்டினாவை எதிர்கொண்டது.
அரையிறுதி வாய்ப்பை தக்கவைக்க இந்திய அணி குறைந்தது 2 கோல்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியது. ஆனால், ஆட்டநேர முடிவில் இந்திய அணி 3-5 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது.
இதனால் ‘இ’ பிரிவில் 4-வது இடத்துக்கு தள்ளப்பட்ட இந்தியாவின் அரையிறுதி வாய்ப்பு முடிவுக்கு வந்தது.
பெண்கள் போட்டி
பெண்களுக்கான உலகக் கோப்பை ஹாக்கியின் இரண்டாவது சுற்றில் நெதர்லாந்திடம் தோல்வியடைந்த இந்திய அணி, அரையிறுதி வாய்ப்பை தக்கவைக்க ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருந்தது.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டி கோல் எதுவுமின்றி டிராவில் முடிந்தது. இதனால் இந்திய அணியின் அரையிறுதி கனவு தகர்ந்தது.
உலகக் கோப்பையில் முதல் முறையாக பதக்கம் வெல்லும் வாய்ப்பை இந்திய அணி இழந்ததால், கோல் கீப்பர் சவிதா புனியா, பிச்சுதேவி உள்ளிட்ட வீராங்கனைகள் கண்ணீர் விட்டு அழுதனர்.
0
Leave a Reply