ஆவினை வலுப்படுத்தினால் தனியார் பால் நிறுவனங்களுக்கு சவால்: விஜய் அரசு.
தமிழ்நாட்டின் பால் சந்தையில் குஜராத்தின் அமுல், கர்நாடகாவின் நந்தினி, ஆந்திராவின் ஹெரிடேஜ் மற்றும் திருமலா, தெலங்கானாவின் டோட்லா உள்ளிட்ட தனியார் நிறுவனங்கள் கணிசமான சந்தைப் பங்கைப் பெற்றுள்ளன.
தமிழ்நாட்டில் நாளொன்றுக்கு சுமார் 2.25 கோடி லிட்டர் பால் உற்பத்தியாகும் நிலையில், அதில் சுமார் 30 லட்சம் லிட்டர் மட்டுமே ஆவின் நிறுவனத்தால் கொள்முதல் செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையை மாற்ற, ஆவின் நிறுவனம் பால் உற்பத்தியாளர்களிடமிருந்து கூடுதல் பாலை கொள்முதல் செய்வதுடன், கொள்முதல் விலையையும் உயர்த்த வேண்டும் என பால் உற்பத்தியாளர்கள் வலியுறுத்துகின்றனர். அதே நேரத்தில், நுகர்வோருக்கு மலிவான விலையில் பால் மற்றும் பால் பொருட்களை வழங்குவதன் மூலம் ஆவினின் சந்தைப் பங்கை அதிகரிக்க முடியும் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதன் மூலம் பால் உற்பத்தியாளர்களுக்கு கூடுதல் வருவாய் கிடைப்பதோடு, தனியார் நிறுவனங்களின் ஆதிக்கத்தையும் குறைத்து, தமிழ்நாட்டின் பால் சந்தையில் ஆவினை மீண்டும் முன்னணி நிறுவனமாக நிலைநிறுத்த முடியும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
0
Leave a Reply