16ம் நூற்றாண்டின் இறுதியில் கலீலியோவால், வெப்பத்தை அளக்கும் கருவி, கண்டுபிடிக்கப்பட்டது. தெர்மாமீட்டர் என்று பெயர் கொண்ட இதில், முதலில்காற்று பயன்படுத்தப்பட்டது. வெப்பநிலையைப் பற்றி சுமாரான அளவுகளையே இதுதெரிவித்தது. பின் இதன் திறனை அதிகரிக்க, காற்றிற்கு பதில் ஆல்கஹால் உபயோகிக்கப்பட்டது.உடல் வெப்பத்தை கண்டறிய முதன்முதலில் தெர்மாமீட்டரைப் பயன்படுத்தியவர், சாங்டோரியல் என்பவர். அவரது தெர்மாமீட்டர், நீண்ட நெளிவுள்ள குழாய் வடிவில் இருந்தது. அதன் மேல்முனையில் முட்டை வடிவமுள்ள ஒரு குமிழ் மறுமுனை திறந்திருக்கும். அதன் குமிழை நோயாளி வாயில் வைத்துக் கொள்ள,மறுமுனை தண்ணீரில் வைக்கப்பட்டிருக்கும்..குழாயில் உள்ள காற்று வெப்பமாகி விரிவடையும். அந்தக் குமிழை வாயிலிருந்து எடுத்து குளிர வைத்தால், அதிலுள்ள காற்று சுருங்குகிறது. அந்த இடத்தில் தண்ணீர் ஏறுகிறது. எவ்வளவு உயரம் நீர் ஏறுகிறதோ,அதுவே நோயாளியின் உடல் வெப்ப அளவு.தெர்மாமீட்டரில் பயன்படுத்தப்படும் ஆவியோ, திரவமோ, வெளி வெப்ப நிலைக்கு ஏற்ப அது சுருங்கி விரியும் தன்மையை அடிப்படையாகக் கொண்டே வேலை செய்கிறது.ஆல்கஹால் தெர்மாமீட்டர் இப்போதும் சில நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ரெனி டிருயுமர் எனும் பிரெஞ்சுக்காரர், 1731ம் ஆண்டு இதை உருவாக்கினார். இதைத் தொடர்ந்து, 11 ஆண்டுகளுக்கு பின், ஸ்வீடனை சேர்ந்தஆண்டர்ஸ் செல்ஷியஸ் எனும் வானியலாளர், இதில் சென்டி கிரேட் முறையை முதல் முதலில் அறிமுகப்படுத்தினார். இம்முறையில், உறைநிலை 0 டிகிரி சென்டிகிரேட்; கொதிநிலை - 100 டிகிரி சென்டிகிரேட்.தெர்மாமீட்டரில், 1714ம் ஆண்டில் முதல் முதலில் பாதரசத்தை பயன்படுத்தியவர் ஜெர்மன் விஞ்ஞானி டேனியல் கேப்ரியல் பாரன்ஹீட்.இவரது தெர்மாமீட்டரின் அளவைக்கு, பாரன்ஹீட் என்று, இவரது பெயரே சூட்டப்பட்டது. இந்த அளவையின் படி, தண்ணீரின் உறைநிலை - 32 டிகிரி பாரன்ஹீட், கொதிநிலை -212 டிகிரி பாரன்ஹீட்.பாதரசத்திற்கு மிக அதிக கொதி நிலையும், தாழ்வான உறைநிலையும் இருப்பதால் தெர்மாமீட்டரில் பெருமளவு இதையே உபயோகிக்கின்றனர். இதை விட அதிக வெப்ப நிலையை அளக்க உதவும் தெர்மாமீட்டர்களில், காலியம் என்ற உலோகத்தைப் பயன்படுத்துகின்றனர்.
நாசாவின் அட்லஸ் தொலை நோக்கி சமீபத்தில் சூரிய மண்டலத்தில் ஒரு சிறிய வால் நட்சத்திரம் நுழைவதை, முதன்முதலில் கண்டு பிடித்தது. இதற்கு 3I/ATLAS என்று பெயரிடப்பட்டது.சூரிய மண்டலத்திற்கு வெளியே இருந்து வருகிற இது போன்ற விண்வெளிப் பொருட்களுக்கு, 'இன்டர்ஸ்டெல்லார் ஆப்ஜெக்ட்' என்று பெயர்.இந்த வால் நட்சத்திரம் அட்லஸ் 20 கிலோ மீட்டர் நீளமானது. இதுவரை கண்டுபிடிக் கப்பட்ட இன்டர்ஸ்டெல்லார் பொருட்களிலேயே இது மிகப் பெரியது. இதை ஆராய்ந்த விஞ்ஞானிகள், இதில் சில மேகங்கள் இருப்பதை உறுதி செய்தனர். இதனுடைய மையம் பனிக் கட்டிகளால் ஆனது என்றும் தெரிவித்தனர். டிசம்பர் மாதத்தில் பூமியில் இருந்து 27 கோடி கிலோமீட்டர் துாரத்தில் இருக்கும் ஆனால், இதனால் எந்த பாதிப்பும் இல்லை. இது, சாதாரண வால் நட்சத்திரம்தான் என்று சில விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.அமெரிக்காவில் உள்ள ஹார்வர்ட் பல்கலையைச் சேர்ந்த அவிலோப் என்கிற ஒருவிஞ்ஞானி, 'இந்த அட்லஸ் முதலில் வால் நட்சத்திரமா அல்லது விண்கல்லா என்பதை கண்டறிய வேண்டும். இது. திட்டமிட்டு சூரிய மண்டலத்துக்கு ஏலியன்களால்அனுப்பப்பட்டுள்ளது' என்றார்.'டார்க்பாரஸ்ட் ஹைபாதீசிஸ்' என்று ஒரு கருதுகோள் உண்டு. அதன்படி இந்தபிரபஞ்சத்தில் பிற நட்சத்திர மண்டலங்களில், எண்ணற்ற நாகரிகங்கள் மனிதர்களை போல வாழ்கின்றன. ஆனால், தங்களுடைய இருப்பு பிறருக்கு தெரியவந்தால் தங்களுக்கு ஆபத்து நிகழ்ந்துவிடும் என்பதால், அவை தங்களை மறைத்துக் கொண்டு வாழ்கின்றன.இந்த அட்லஸ் வால் நட்சத்திரத்தை ஆராய்ந்து, அது ஏலியன்களால் அனுப்பப்பட்டது என்பது உறுதியானால், இந்த கருதுகோள் உண்மையாகும் என்று கூறியுள்ளார்.
சங்கு ஊதுவது உடல் நலனுக்கு நல்லது என்று சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சமீபத்தியஆய்வுஒன்றுதுாக்கமின்மை பிரச்னையைச் சரிசெய்ய சங்கு ஊதுதல் உதவும் என்கிறது. நமது வழிபாட்டில் முக்கியமான இடம் உள்ளது.ஓ எஸ் ஏ (Sbstructive sleep apnea - OSA) என்பது துாங்கும்போது ஏற்படும் பிரச்னைஉறக்கத்தின் போது சிலருக்குத் தொண்டை தசைகள், நாக்கு ஆகியவை ஓய்வுபெற்று மூச்சுப் பாதையை அடைத்துவிடும். இதனால் சரியாக மூச்சு விட முடியாது.இதன் காரணமாக உடலில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற் பட்டுத் தூக்கம் கெடும். இரவு துாங்காததால் பகலில் சோர்வு ஏற்பட்டு அன்றாடவாழ்க்கை பாதிக்கப் படும். இதைச் சரி செய் வதற்கான ஆய்வுகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.சமீபத்தில்ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரைச் சேர்ந்த எடெர்னல் மையம் மற்றும் ஆய்வுகூடம் இது தொடர்பான ஆய்வு முடிவை வெளியிட்டுள்ளது.இந்த மையத்தின் ஆய்வாளர்கள் ஓஎஸ்ஏ பிரச்னை கொண்ட19 - 65 வயதுடைய 30 பேரை ஆய்வுக்கு உட்படுத்தினர். அவர்களில் ஒருபகுதியினரைமூச்சுப் பயிற்சி செய்யச் சொன் னார்கள். மற்றொரு பகுதியினருக்கு தினமும் 15 நிமிடம் வாரத்தில் 5 நாட்கள் தொடர்ந்து 6 மாதங்கள் சங்கு ஊதும் பயிற்சி செய்யச் சொன்னார்கள்.பயிற்சி தொடங்கிய சில தினங்களிலேயே அவர்களின் பிரச்னை குறையத் துவங்கியது. இறுதியில் பகல்நேரச் சோர்வு 34 சதவீதம் குறைந்தது. இரவு துாக்கத்தில் ஏற்படும் தொல்லையும் சரியாகிவிட்டதாக ஆய்வில் பங்கேற்றவர்கள் கூறியுள்ளனர்.சங்கை ஊதும் போது அதிக முயற்சி செய்து ஊத வேண்டும். அப்போது மூச்சுக்குழாய், தொண்டை ஆகிய பகு திகள் வலிமை அடை கின்றன. இது ஓஎஸ்ஏ பிரச்னைக்குத் தீர்வாக அமைகிறது என்பது ஆய்வாளர்கள் கருத்து.
கப்பற் படைக்கான இக்கண்டுபிடிப்பை பிரதமர் நரேந்திர மோடி பார்வை யிட்டு தொடங்கி வைத்தார்.கடந்த மே மாதம் டெல்லியில் நடந்த ட்ரோன் திருவிழாவில் கலந்து கொண்ட பிரதமர் மோடி தன் உரையில்,‘‘75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் இந்த வேளையில் ஒவ்வொருவரது கைகளிலும் ஸ்மார்ட் போன் அவசியம் என்பது எனது கனவு. ஒவ்வொரு பண்ணையிலும் ஒரு ட்ரோன் இருக்க வேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் செல்வம் தழைத்தோங்க வேண்டும். ட்ரோன் தொழில்நுட்பத்தில் அதிகபட்ச மான கண்டுபிடிப்பு இந்தியாவில் இருக்கும்’’ எனக் குறிப்பிட்டார்.இவரது கனவை மெய்ப்பிக்கும் வகையில் இந்தியாவில் முதன் முறையாக பயணியுடனான ட்ரோன் வருணா செயல்பாட்டுக்கு வந்துள்ளது. கடந்த18ம் தேதி இந்திய கப்பற்படை மற்றும் ராணுவ தளவாடங்கள் தயாரிப்பாளர்கள் சார்பில் டெல்லியில் கருத்தரங்கு நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, இந்தியா வின் பயணியுடனான முதல் ட்ரோன் வருணாவை இயக்கி வைத்தார். இது, பிரதமரின் முன்பாக ஒரு பயணியுடன் வானில் பறந்து பிரச்சினையின்றி தரையிறங்கியது.இந்த புதிய வகை ட்ரோன், சாகர் டிபன்ஸ் இன்ஜினீயரிங் எனும் ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் கண்டு பிடிப்பாக உள்ளது. கடந்த 2015-ல் இதை நிறுவிய கேப்டன் நிகுன் பராஷர், இந்திய கப்பற்படையில் கேப்டனாகப் பணியாற்றியவர். பல அரசு விருதுகளும் பெற்ற இந்த நிறுவனம் சார்பில் விமானப்படை, கப்பற்படை ஆகியவற்றுக்கு உத வும் கருவிகள், உபகரணங்கள் தயாரிக்கப்படுகின்றன.இந்த ட்ரோனில் விமானத்தை இயக்குபவர் போலான பைலட் தேவையில்லை. மற்ற ஆளில்லா விமானம் எனும் ட்ரோன்களைப் போலவே இதையும் இயக்கலாம். சுமார்25 கி.மீ. பறக்கும் இந்த வருணா,130 கிலோ எடையுடன்25 முதல்33 நிமிடங்கள் வரை பறக்கும் திறன் கொண்டது.இதுகுறித்து, சாகர் டிபன்ஸ் ஸ்டார்ட் அப் நிறுவனர் கேப்டன் நிகுன்ஜ் பராஷர் ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் கூறும் போது, ‘‘கப்பற்படைக்காக தயாரிக்கப் பட்டது இந்த ட்ரோன் வருணா. இதன் விசிறிகள் செயல்படாமல் முடங்கினாலும் அதில் அமைந்த 4 வகை தானியங்கி முறைகளால் பறப்பது தடைபடாது. தற்போ தைக்கு வானில் பறக்கும் வருணா, 3 மாதங்களுக்குப் பிறகு கடல் மட்டத்திற்கான வானில் பறக்கும். இதன்மூலம், ஒரு கப்ப லில் இருந்து மற்றொன்றுக்கு பொருட்கள், உடல்நலம் குன்றியவரை எளிதாக இடம்பெயர செய்யலாம்’’ என்றார்.இந்த வகையிலான30 வரு ணாக்கள் கப்பற்படையின் பயன்பாட்டுக்கு வர உள்ளன. இதற்கு கிடைக்கும் பலனைப் பொறுத்து, நாட்டின் மற்ற துறைகளி லும் பயன்பாட்டிற்கு வர உள்ளது. தற்போது வரை ட்ரோன்கள், ஆளில்லா விமானங்கள் என்றழைக்கப்படுகின்றன. இனி, அவை சிறியரக விமானங்கள் அல்லது வருணா என்ற பெயரில் அழைக்கப்படலாம்
வனவிலங்கு பாதுகாப்பில் தலைமைத்துவத்திற்கான உலகளாவிய மனிதாபிமான விருதை ஆனந்த் அம்பானி பெறுகிறார், இளைய மற்றும் முதல் ஆசிய விருதைப் பெறுகிறார்.குளோபல் ஹ்யூமன் சொசைட்டியிலிருந்து குளோபல் ஹ்யூமானிடேரியன் விருதை ஆனந்த் அம்பானி பெற்றுள்ளார், இதன் மூலம் இளைய மற்றும் முதல் ஆசிய விருது பெற்றவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். முன்னோடி வனவிலங்கு மீட்பு மற்றும் பாதுகாப்பு முயற்சியான வன்டாராவை நிறுவுவதில் அவர் தலைமை தாங்குவதை இந்த விருது அங்கீகரிக்கிறது. வான்டாராவின் அறிவியல் அடிப்படையிலான மாதிரி மற்றும் உலகளாவிய கூட்டாண்மைகள் விலங்கு நலன் மற்றும் இனங்கள் பாதுகாப்பில் புதிய தரநிலைகளை அமைத்து வருகின்றன.அமெரிக்க மனிதநேய சங்கத்தின் சர்வதேச பிராண்டான குளோபல் ஹ்யூமன் சொசைட்டியால் அனந்த் அம்பானிக்கு விலங்கு நலனுக்கான உலகளாவிய மனிதாபிமான விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. இந்த அங்கீகாரம் அவரை உலகளாவிய மாற்றத்தை ஏற்படுத்துபவர்களின் அரிய குழுவில் சேர்க்கிறது, இதன் மூலம் இந்த விருதைப் பெற்ற இளைய மற்றும் முதல் ஆசியர் என்ற பெருமையைப் பெறுகிறார். வனவிலங்கு பாதுகாப்பில் முன்னணி குரல்களின் முன்னிலையில் இந்த விழா வாஷிங்டன் டிசியில் நடைபெற்றது.உலகின் மிக விரிவான வனவிலங்கு மீட்பு மற்றும் பாதுகாப்பு முயற்சிகளில் ஒன்றான வந்தாராவை நிறுவுவதில் அனந்த் அம்பானியின் தலைமையை இந்த விருது அங்கீகரிக்கிறது. அவரது பணி பெரிய அளவிலான மீட்பு, உயர்தர மருத்துவ பராமரிப்பு, நீண்டகால மறுவாழ்வு மற்றும் அச்சுறுத்தப்பட்ட உயிரினங்களின் பாதுகாப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது. வந்தாராவின் மாதிரி அறிவியல் ஆராய்ச்சி, உலகளாவிய பாதுகாப்பு கூட்டாண்மைகள் மற்றும் விலங்கு நலனுக்கான ஆழ்ந்த அர்ப்பணிப்பை ஒருங்கிணைக்கிறது.நிகழ்ச்சியில் பேசிய அனந்த் அம்பானி,"இந்த கௌரவத்திற்காக குளோபல் ஹ்யூமன் சொசைட்டிக்கு நன்றி கூறுகிறேன். என்னைப் பொறுத்தவரை, இது அனைத்து உயிரினங்களின் நல்வாழ்வு என்ற காலத்தால் அழியாத ஒரு கொள்கையை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. விலங்குகள் நமக்கு சமநிலை, பணிவு மற்றும் நம்பிக்கையை கற்பிக்கின்றன. வந்தாரா மூலம், சேவையின் உணர்வால் வழிநடத்தப்படும் ஒவ்வொரு உயிருக்கும் கண்ணியம், கவனிப்பு மற்றும் நம்பிக்கையை வழங்குவதே எங்கள் நோக்கம். பாதுகாப்பு என்பது நாளைக்கானது அல்ல; அது இன்று நாம் நிலைநிறுத்த வேண்டிய ஒரு பகிரப்பட்ட தர்மம்."உலகளாவிய மனிதாபிமான விருது, விலங்குகள் மற்றும் மக்கள் மீது உலகளாவிய தாக்கத்தை ஏற்படுத்திய பணிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. ஷெர்லி மெக்லைன், ஜான் வெய்ன், பெட்டி வைட், முன்னாள் அமெரிக்க ஜனாதிபதிகள் ஜான் எஃப் கென்னடி, பில் கிளிண்டன் மற்றும் சர்வதேச அளவில் மதிக்கப்படும் பல பாதுகாவலர்கள் இதற்கு முன்பு விருது பெற்றுள்ளனர்.குளோபல் ஹ்யூமன் சொசைட்டியின் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான டாக்டர் ராபின் கன்செர்ட், அனந்த் அம்பானியின் தலைமையைப் பாராட்டினார்."உலகளாவிய ஹ்யூமன் சான்றிதழ் பெற்ற வான்டாரா, பராமரிப்பில் சிறந்து விளங்குவதை மட்டுமல்லாமல், ஒவ்வொரு விலங்குக்கும் கண்ணியம், குணப்படுத்துதல் மற்றும் நம்பிக்கையை வழங்குவதில் ஆழ்ந்த அர்ப்பணிப்பை பிரதிபலித்தது. மேலும், செயலில் இரக்கத்திற்கான புதிய உலகளாவிய தரத்தை அமைத்த தலைமைத்துவம் கொண்ட அனந்த் அம்பானியை விட அந்தத் தொலைநோக்குப் பார்வையின் சிறந்த வீரர் வேறு யாரும் இல்லை" என்று அவர் கூறினார். வான்டாரா ஒரு மீட்பு மையத்தை விட அதிகம் என்றும், நவீன விலங்கு நலனுக்கான ஒரு புதிய அளவுகோலை அமைத்த குணப்படுத்தும் சரணாலயம் என்றும் அவர் விவரித்தார்.1877 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட அமெரிக்கன் ஹ்யூமன் சொசைட்டி, அமெரிக்காவின் பழமையான தேசிய மனிதாபிமான அமைப்பாகும், மேலும் உலகின் மிகப்பெரிய விலங்கு நலச் சான்றிதழை வழங்கும் நிறுவனமாகும். அதன் உலகளாவிய மனிதாபிமான சான்றளிக்கப்பட்ட திட்டங்கள் உலகிலேயே மிகவும் கடுமையானவை..இந்த அங்கீகாரம் வான்டாரா மற்றும் அதன் பணிக்கு உலகளாவிய கவனத்தை மீண்டும் கொண்டு வருகிறது. இந்த முயற்சி ஏற்கனவே காயமடைந்த, துன்பப்பட்ட மற்றும் பாதிக்கப்படக்கூடிய பல்வேறு வகையான விலங்குகளை மீட்டு மறுவாழ்வு அளித்துள்ளது. யானைகள் மற்றும் பெரிய பூனைகளுக்கான முக்கியமான பராமரிப்பு, நீண்டகால மறுவாழ்வுக்கான வசதிகள், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் அழிந்துபோகும் அபாயத்தில் உள்ள உயிரினங்களைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்ட கூட்டாண்மைகள் ஆகியவை இதன் பணிகளில் அடங்கும்.
அம்பானியின் வீட்டின் மதிப்பு 15,000 கோடி. ஆனால் குஜராத்தின் ராணி ராதிகா கெய்க்வாட்டின் வீட்டின் மதிப்பு 25,000 கோடி லட்சுமி விலாஸ் அரண்மனை இந்தியாவிலேயே மட்டுமல்ல, உலகிலேயே மிகப்பெரிய வீடு. இருப்பினும், அவர் எந்த ஆடம்பரமும் இல்லாமல் எளிமையான வாழ்க்கையை வாழ்கிறார். என் வீடு எப்படி இருக்கிறது என்பதை லைக் செய்து கமெண்ட் செய்யுங்கள்.
29 வயதான நைஜீரிய இளைஞர் ,உலகின் முதல் சிம்-இல்லா போன் உருவாக்கி அதிர வைத்துள்ளார். நெட்வொர்க், டேட்டா, வைஃபை,எதற்கும் தேவையில்லைRF தொழில்நுட்பத்தின் மூலம் நேரடி இணைப்பு,ரீச்சார்ஜ் இல்லை, ரோமிங் இல்லை.இது இந்தியாவில் வந்தால் ஜியோ, ஏர்டெல், VI, BSNL போன்ற நிறுவனங்களுக்கு பெரும் அதிர்ச்சியாக இருக்கும்.
பிரசவத்திற்கு முன் தாய்க்கு உள்ள உடல் பருமன், வயிற்றில் இருக்கும் குழந்தையின் மூளையைப் பாதிக்கும், ஆட்டிஸத்தைக் கூட ஏற்படுத்தும் என்று அமெரிக்காவில் உள்ள ஹவாய் பல்கலை மேற்கொண்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
சீனாவில் உள்ள ஜாங் சான் தேசிய பூங்காவில், புதிய வகை தேள் ஒன்றை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதற்கு, 'மெகாஸ்கிஜோ மஸ் ஜாங்சானென்சிஸ் என பெயரிட்டுள்ளனர். இது. 7.21 - 7.24 மி.மீட்டர் நீளம் கொண்டது.
பாவோபாப்(அடன்சோனியா டிஜிடேட்டா) உலகளவில் வாழ்க்கை மரமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஆப்பிரிக்க சவன்னாவில் காணப்படும் இதன் பெரிய தண்டு முக்கிய தண்ணீரை சேமித்து வைப்பதால், அதற்கு புனைப்பெயர் சூட்டப்பட்டுள்ளது. இது மீள்தன்மையின் சின்னமாக உள்ளது, உணவு, தங்குமிடம் மற்றும் மருந்தை வழங்குகிறது, இதனால் வறண்ட பகுதிகளில் உயிர்வாழ்வதற்கு இது அவசியமாகிறது.இயற்கையில் அவை எண்ணற்ற வடிவங்களில் வருகின்றன, உயரமான, ஊசியால் மூடப்பட்ட கூம்பு மரங்கள் முதல் ஒவ்வொரு ஆண்டும் இலைகளை உதிர்க்கும் ஓக்ஸ் மற்றும் மேப்பிள்ஸ் போன்ற அகன்ற இலைகளைக் கொண்ட இலையுதிர் மரங்கள் வரை. மரங்கள் வாழ்க்கைக்கு இன்றியமையாதவை,ஒரு முதிர்ந்த மரம் அதன் ஆயுட்காலத்தில் நூற்றுக்கணக்கான பவுண்டுகள் கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சும். சில மரங்களுக்கு உண்மையிலேயே மறக்கமுடியாத புனைப்பெயர்கள் உள்ளன, பிரமாண்டமான பாவோபாப் மரம், பெரும்பாலும் 'தலைகீழான மரம்' என்று அழைக்கப்படுகிறது, ஏனெனில் அதன் கிளைகள் காற்றில் வேர்கள் போல இருக்கும். அல்லது உலகின் மிக உயரமான மரத்திற்கான சாதனையைப் பெற்றிருக்கும் வலிமைமிக்க செக்வோயா,"ரெட்வுட் ஜெயண்ட்" ஐ எடுத்துக் கொள்ளுங்கள்.ஆனால் ஒரு மரம், எல்லாவற்றிற்கும் மேலாக, இருப்புடன் மிகவும் ஆழமான, குறியீட்டு தொடர்புக்கு பெயர் பெற்றது. இது படைப்பு, அறிவு மற்றும் நித்திய வாழ்க்கையை குறிக்கிறது. வாழ்க்கை மரம் என்று அழைக்கப்படும் மரம் ,பெரும்பாலும் ஒரு தோட்டம் அல்லது சோலையின் நடுவில் காணப்படுகிறது,.வாழ்க்கை மரம் என்று பொதுவாக அழைக்கப்படும் மரம் பாவோபாப் (அடன்சோனியா டிஜிடேட்டா). இந்த சின்னமான மரம் முக்கியமாக கண்ட ஆப்பிரிக்கா மற்றும் மடகாஸ்கரின் வறண்ட சவன்னாக்களில் காணப்படுகிறது. வறண்ட பகுதிகளில் இது ஒரு சரியான உயிர்நாடியாக இருப்பதால் இது புனைப்பெயரைப் பெற்றது. பாவோபாப் ஒரு சதைப்பற்றுள்ள மரம்; அதன் மிகப்பெரிய, குமிழ் போன்ற தண்டு ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீரை சேமித்து வைக்கிறது, இது கடுமையான வறட்சியின் போது மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் நீரேற்றத்தின் ஆதாரமாக அமைகிறதுமரத்தின் ஒவ்வொரு பகுதியும் மதிப்புமிக்கது.'குரங்கு ரொட்டி' என்று அழைக்கப்படும் அதன் பழம் ஊட்டச்சத்து நிறைந்தது. அதன் பட்டையை ஆடை மற்றும் கயிறுக்கு பயன்படுத்தலாம்; அதன் வெற்று தண்டு தங்குமிடத்தை வழங்குகிறது. இது ஒரு சவாலான நிலப்பரப்பில் சகிப்புத்தன்மை, வாழ்க்கை மற்றும் சமூகத்தின் சின்னமாகும்.ஒரு முதிர்ந்த தண்டு120,000 லிட்டர் தண்ணீரை சேமிக்க முடியும்.சில பாவோபாப்கள்3,000 ஆண்டுகளுக்கும் மேலாக வாழும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.இது பெரிய, அழகான, வெள்ளை பூக்கள் இரவில் மட்டுமே திறக்கும்.வௌவால்கள் முதன்மையாக பூக்களை மகரந்தச் சேர்க்கை செய்கின்றன.பழக் கூழ் இயற்கையாகவே கிளையில் காய்ந்து, வைட்டமின் சி நிறைந்த தூளாக மாறுகிறது.பல குழிவான தண்டுகள் வீடுகளாகவும், சேமிப்புக்காகவும், பேருந்து நிறுத்தங்களாகவும் பயன்படுத்தப்படுகின்றன.மரம் ஈரமாகவும், பஞ்சுபோன்றதாகவும் இருப்பதால், கட்டிடம் கட்டவோ அல்லது விறகு கட்டவோ பயனற்றதாக ஆக்குகிறது.பாரம்பரியமாக, கிராமங்கள் ஒரு பாவோபாப்பின் நிழலில் முக்கியமான கூட்டங்களை நடத்துகின்றன.பாவோபாப் ஒரு வரலாற்றுக்கு முந்தைய இனமாகும், இது மனிதகுலம் மற்றும் கண்டங்கள் பிரிவதற்கு முன்பே இருந்தது.பாவோபாப் மரம் உண்மையிலேயே"வாழ்க்கை மரம்" என்ற பட்டத்திற்கு தகுதியானது. கடுமையான, வறண்ட சூழல்களில் உயிர்வாழும் மற்றும் செழித்து வளரும் .பெரும்பாலும் ஆழமான வேர்களைக் கொண்டுள்ளன என்பதை நினைவூட்டுகிறது.