25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


தெரிந்து கொள்ளுங்கள்

Aug 07, 2026

Samsung Galaxy Z Fold 8 விலை வெளியானதா?

Galaxy Z Fold 8-ன் ஆரம்ப விலை ₹1,99,990 ஆகவும், Galaxy Z Flip 8-ன் விலை ₹1,19,999 ஆகவும் இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

Aug 07, 2026

பெங்களூருவில் Aero India 2027!

ஆசியாவின் மிகப்பெரிய விமானக் கண்காட்சியான Aero India 2027 பிப்ரவரி 8–12 வரை யெலஹங்கா விமானப்படை தளத்தில் நடைபெறுகிறது. பாதுகாப்புத் துறை மற்றும் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் பல புதிய தொழில்நுட்பங்கள் இதில் இடம்பெறுகின்றன.

Aug 07, 2026

EV மறுசுழற்சி: இந்தியாவின் அடுத்த பெரிய தொழில் வாய்ப்பு.

2030-க்குள் இந்தியாவில் மின்சார வாகனங்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதனால், பயன்படுத்தப்பட்ட பேட்டரிகள் மற்றும் வாகன உதிரிபாகங்களை மறுசுழற்சி செய்யும் (Recycling) தொழில், எதிர்காலத்தில் இந்தியாவின் மிகப்பெரிய வளர்ச்சி வாய்ப்புள்ள துறைகளில் ஒன்றாக மாறும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.

Aug 06, 2026

வெள்ளை ஷூ எப்போதும் புதிதுபோல் இருக்க  டிப்ஸ்.

பற்பசை மற்றும் பழைய டூத் பிரஷ் கொண்டு மெதுவாக தேய்த்தால் சிறிய கறைகள் நீங்கும். பேக்கிங் சோடா மற்றும் வினிகர் கலவையை பயன்படுத்தி பிடிவாதமான அழுக்குகளை அகற்றலாம். கழுவிய பிறகு நேரடி வெயிலில் அல்லாமல் நிழலில் உலர்த்துங்கள். ஷூவின் உள்ளே செய்தித்தாள் வைத்து உலர்த்தினால் ஈரப்பதம் விரைவில் குறையும். புதிய ஷூவுக்கு Water & Stain Protector Spray பயன்படுத்தினால் அழுக்கு ஒட்டுவது குறையும். கறைகள் பட்டவுடன் உடனே சுத்தம் செய்வது நல்லது. பயன்படுத்தாத நேரங்களில் ஷூவை பை அல்லது பெட்டியில் வைத்து பாதுகாத்தால் நீண்ட நாள் நீடிக்கும்.

Aug 05, 2026

2026 முதியோருக்கான முதலீடு: முக்கிய ஆலோசனைகள்.

2026-ல் ஓய்வுபெற்றோருக்கு பாதுகாப்பான முதலீடு, நிலையான வருமானம் மற்றும் நல்ல வருவாய் தரும் அரசு திட்டங்கள், வங்கி FD-கள் மற்றும் குறைந்த ஆபத்து முதலீடுகள் சிறந்த தேர்வுகளாக உள்ளன.முதலீட்டிற்கு முன் கவனிக்க வேண்டியவை:உயில் (Will) தயாரித்து சொத்து உரிமையை தெளிவுபடுத்துதல்.போதுமான மருத்துவக் காப்பீடு பெற்று மருத்துவச் செலவுகளிலிருந்து பாதுகாப்பு பெறுதல். குறைந்தது 18 மாத செலவுக்கான அவசர நிதியை எளிதில் பணமாக்கக்கூடிய FD போன்ற திட்டங்களில் வைத்திருத்தல்.

Aug 05, 2026

குளுக்கோசுக்கு பதிலா இளநீரா..??

இரண்டாம் உலகப்போரின் போது அவசர காலத்தில் குளுக்கோஸ் தட்டுப்பாடு ஏற்பட்டதால், உடைக்கப்படாத இளநீரின்இயற்கையான தூய்மையை நம்பி, காயமடைந்த வீரர்களுக்கு அதை நேரடியாக ஐவி திரவமாக நரம்பில் செலுத்தி மருத்துவர்கள் ராணுவ வீரர்களின் உயிரைக் காப்பாற்றினர்!

Aug 05, 2026

IRCTC புதிய இணையதளம்: டிக்கெட் முன்பதிவு வேகம் பல மடங்கு உயர்வு.

ரயில் பயணிகளுக்காக மேம்படுத்தப்பட்ட புதிய IRCTC இணையதளம் வரும் 15-ஆம் தேதி அறிமுகமாகிறது. இதன் மூலம், தட்கல் உள்ளிட்ட ரயில் டிக்கெட்டுகளை விரைவாக முன்பதிவு செய்ய முடியும் என ரயில்வே தெரிவித்துள்ளது.புதிய அமைப்பில், நிமிடத்திற்கு 32 ஆயிரமாக இருந்த முன்பதிவு திறன் 1.5 லட்சமாக அதிகரிக்கிறது. மேலும், முன்பதிவின்போது CAPTCHA சரிபார்ப்பு தேவையில்லை. பயணிகள் உதவிச் சேவைகளையும் அதிகளவில் ஒரே நேரத்தில் பெறும் வகையில் தளம் மேம்படுத்தப்பட்டுள்ளது.

Aug 05, 2026

அதானி டோட்டல் கேஸ்: முதல் காலாண்டில் 27% வருவாய் வளர்ச்சி.

2026-27 நிதியாண்டின் முதல் காலாண்டில் அதானி டோட்டல் கேஸ் நிறுவனம் வலுவான வருவாய் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.நிறுவனத்தின் வருவாய் கடந்த ஆண்டைவிட 27% உயர்ந்து ரூ.1,910 கோடியாக உள்ளது. மேலும், 5 புதிய எரிவாயு நிலையங்கள் தொடங்கப்பட்டதால் மொத்த வலையமைப்பு 707 நிலையங்களாக விரிவடைந்துள்ளது. வீட்டு PNG இணைப்புகள் 11.14 லட்சமாகவும், தொழில் மற்றும் வணிக இணைப்புகள் 10,422 ஆகவும் உயர்ந்துள்ளன.அதானி பவர்: முதல் காலாண்டில் ரூ.4,866 கோடி நிகர லாபம்.அதானி பவர் நிறுவனம் 2026-27 நிதியாண்டின் முதல் காலாண்டில் வலுவான நிதி செயல்திறனை வெளிப்படுத்தியுள்ளது.ஜூன் 30-ஆம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில், நிறுவனத்தின் நிகர லாபம் கடந்த ஆண்டைவிட 47.2 சதவீதம் உயர்ந்து ரூ.4,866.60 கோடியாக பதிவாகியுள்ளது.

Aug 05, 2026

செவ்வாயில் பவளப்பாறை போன்ற பாறை கண்டுபிடிப்பு!

செவ்வாய் கோளில் பவளப்பாறையை ஒத்த அமைப்புடைய பாறை ஒன்றை நாசாவின் கியூரியாசிட்டி (Curiosity) ஆய்வு ஊர்தி கண்டறிந்துள்ளது. இந்தக் கண்டுபிடிப்பு, பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு செவ்வாயில் நீர் ஓடியிருக்கலாம் என்பதற்கான புதிய ஆதாரமாக விஞ்ஞானிகளால் கருதப்படுகிறது.பூமிக்கு அடுத்துள்ள கோள்களில் செவ்வாய், ஆராய்ச்சிக்குப் பொருத்தமான சூழலைக் கொண்டிருப்பதால், பல ஆண்டுகளாக உலக நாடுகள் அங்கு ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, நாசா 2011-ஆம் ஆண்டு கியூரியாசிட்டி ஆய்வு ஊர்தியை செவ்வாய்க்கு அனுப்பியது. தற்போது அது கேல் (Gale) பள்ளத்தில் கற்கள் மற்றும் மண் மாதிரிகளை ஆய்வு செய்து வருகிறது.அண்மையில் பதிவு செய்யப்பட்ட படங்களில், பவளப்பாறையைப் போன்ற தோற்றமுடைய பாறை அமைப்பு கண்டறியப்பட்டுள்ளது. விஞ்ஞானிகளின் விளக்கப்படி, பண்டைய காலத்தில் நீர் பாறைகளின் மீது ஓடியதால் உருவான தடங்கள், பின்னர் நீர் வற்றிய பிறகும் நீடித்து இருக்கலாம். காலப்போக்கில் சுற்றியுள்ள மண் மற்றும் மென்மையான பாறைகள் காற்றால் அரிக்கப்பட்டாலும், உறுதியான பகுதிகள் மட்டும் எஞ்சுவதால் இவ்வாறான வடிவங்கள் உருவாகின்றன.பூமியிலும் இதுபோன்ற பாறை அமைப்புகள் காணப்படுவதால், இந்தக் கண்டுபிடிப்பு செவ்வாயின் புவியியல் வரலாற்றை புரிந்துகொள்வதற்கும், அங்கு நீர் இருந்ததற்கான ஆதாரங்களை வலுப்படுத்துவதற்கும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

Aug 04, 2026

38 மணி நேர பேட்டரி! HUAWEI புதிய இயர்பட்ஸ் அறிமுகம்.

HUAWEI நிறுவனம் தனது புதியFreeClip 2 S ஓப்பன்-இயர் இயர்பட்ஸை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் 10.8mm டூயல் டிரைவர், AI நாய்ஸ் கேன்சலேஷன், Bluetooth 6.0 மற்றும் ஒரே நேரத்தில் இரண்டு சாதனங்களை இணைக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது. ஒரு முறை சார்ஜ் செய்தால் 9 மணி நேரமும், சார்ஜிங் கேஸுடன் மொத்தம் 38 மணி நேரம் வரை பேட்டரி பேக்கப் கிடைக்கும். IP57 வாட்டர் ரெசிஸ்டன்ஸ் வசதியுடன், இதன் விலை சுமார் ரூ.21,273 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

1 2 ... 5 6 7 8 9 10 11 ... 128 129

AD's



More News