ஏன் தண்ணீருக்குள் கைகளை வைத்திருக்கும் போது தோல் சுருங்குகிறது.?
கடினமான வேலைகளை செய்வதற்காக கைகளும் கால்களும் பயன்படுகின்றன. எனவே அவற்றை பாதுகாப்பு டன் வைப்பதற்காக தோலில் சீபம் என்கிற எண்ணெய் சுரக்கிறது. தண்ணீரில் கைகளை வைத்து வேலை செய்து கொண்டிருக்கும் போது சீபம் சுரந்து தோலுக்குள் தண்ணீர் செல்லாமல் பாதுகாத்து விடுகிறது. அதிக நேரம் தண்ணீரில் கைகள் இருக்கும் போது சீபம் அதிக மாக சுரக்காது. அதனால் தண்ணீர் தோலுக்குள் நுழைந்து விடுகிறது. கை கால்களில் மேடு, பள்ளம் தோன்றி விடு கிறது. இதனால் தோல் சுருங்கி விடு கின்றன. தண்ணீரை விட்டு விரல்களை எடுத்த சிறிது நேரத்தில் தண்ணீர் வெளியேறி மீண்டும் சீபம் சுரக்கிறது.அதனால் விரல்கள் இயல்பு நிலைக்குத் திரும்பி விடும்.
0
Leave a Reply