இறகுகள்,பறவைகளின் உடலில் முக்கிய அங்கம்.
இறகுகள்,பறவைகளின் உடலில் தோன்றும் புரதப்பொருட்களால் உருவாகுபவை .
நூற்றுக்கணக்கான இறகுகளால் உருவானவை தான் இறக்கைகள்.
ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை இறகுகளைக் கொண்ட பறவைகள் இருக்கின்றன.
இறகின் நடுவில் உறுதியான தண்டு போன்ற அமைப்பு இருக்கும். அந்தத் தண்டின் இரண்டு பக்கங்களிலும் சிறிய நுண் எலும்புகள் காணப்படும்.
நுண் எலும்புகளுக்கு இடையில் சிறிய ஓட்டை உடைய அமைப்புகள் உள்ளன. இவை பறவையை பல வகைகளில் பாதுகாக்கின்றன.
நடுப்பகுதியில் இரண்டு பக்கமும் சமமாக இருப்பவை வால் இறகுகள் என்று அழைக்கப்படுகின்றன.
பறவைகளை வெப்பத்திலிருந்து காப்பாற்ற, பறவையின் உடலைச் சுற்றி கீழ் இறகு என்ற அமைப்பு உள்ளது.
ஆந்தை போன்ற பறவைகளுக்கு இரையின் ஒலியை ,சத்தமாக கேட்பதற்கு இறகுகள் உதவுகின்றன.
பென்குயின் போன்ற பறவைகளுக்கு பனிச்சறுக்கு ,செய்வதற்கு இறகுகள் உதவுகின்றன.
நீரில் மூழ்கி வேட்டையாடும் பறவைகளுக்கு, இறகுகள் தேவைப்படுகின்றன.
வளர்ந்த பறவைகள் தங்கள் இறகுகளை கோடைக் காலத்தில் உதிர்த்து, புதிய இறகுகளை வளர்க்க ஆரம்பிக்கும்.
குளிர்காலம் வரும் போது பறவைகளை பாதுகாக்க இறகுகள் அவசியம் என்பதால், குளிர்காலத்துக்குள் புதிய இறகு உருவாகிவிடும்.
0
Leave a Reply