சைக்கிள் ஓட்டுதலின் போது மனித உடலில் ,தேவை இல்லாமல் ஆற்றல் வீணாவது தடுக்கப்பட்டு ஆற்றல் சேமிக்கப்படுகிறது.
நடைப்பயிற்சி மற்றும் மெது ஓட்ட பயிற்சிகளை விட சைக்கிள் ஓட்டுவது உடலுக்கு 4 மடங்கு அதிக ஆற்றலையும், ஓடுவதை விட 8 மடங்கு அதிக பலன்களையும் தருவதாக ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது குறைந்த ஆற்றலை பயன்படுத்தி மனிதர்கள் அதிக தூரம் பயணிக்க உதவுவது சைக்கிள் மட்டுமே என ஆய்வுகள் தெரிவிக்கின்றன..உடலின் தசைகளுக்கு தேவையற்ற அழுத்தம் தராமல், உடலின் ஒரு குறிப்பிட்ட தசை சக்தியை இயக்கமாக மாற்றுவதன் மூலம் ஒட்டுமொத்த உடலும் நன்கு இயங்க சைக்கிள் உதவுகிறது என இந்த ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அந்த ஆய்வில், நாம் நடக்கும் போது அல்லது ஓடும் போது, அடிப்படையில் உடல் முன்னோக்கி நகரும் போது, தரையில் விழுந்து விடாதபடி உடலை கட்டுப்படுத்தும் செயல்பாடு நடைபெறுகிறது. எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் ஈர்ப்பு விசைக்கு எதிராக கால் மூட்டுகளை தூக்கி கவனமாக வைக்கும் செயல்முறையின் போது உடலில் இருந்து அதிகமான சக்தி இழப்பு ஏற்படுகிறது.
ஆனால், சைக்கிள் என்ற மிதிவண்டியில்,கால்கள் மட்டுமே ஆற்றலை வெளிப்படுத்தி அதனை அழுத்த விசையாக மாற்றுகின்றன. நடைப்பயிற்சியில் ஒட்டுமொத்த உடலும் அழுத்தத்தை உணர்கிறது. இதற்கு பதிலாக, சைக்கிள் பெடல்களை மிதிக்கும் போது கால்களில் இருந்து மட்டும் தரப்படும் அழுத்தம்,சைக்கி ளின் சுழற்சி ஆற்றலாக மாறி விடுகிறது. இதன் மூலம், மனித உடலில் தேவை இல்லாமல் ஆற்றல் வீணாவது தடுக்கப்பட்டு ஆற்றல் சேமிக்கப்படுகிறது.சைக்கிள் ஓட்டுதலின் போது, குறைந்த ஆற்றல் செலவழிப்பு மூலம் உடலில் அதிக ஆற்றல் சேமிக்கப்ப டுகிறது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
0
Leave a Reply