தேவையான பொருட்கள் தினை - 1/2 கப்வெல்லம் - 3/4 கப்நெய் - 1 1/2 டீஸ்பூன்முந்திரி பருப்பு - 5-6திராட்சை - 6-7ஏலக்காய் தூள் - 1/4 தேக்கரண்டி,சுக்கு தூள், பச்சை கற்பூரம்- செய்முறைதிணையைக் கழுவி15 நிமிடம் ஊற வைக்கவும். ஒரு கடாயை சூடாக்கி, அதன் நிறம் மாறாமல் மணம் வரும் வரை வறுக்கவும்.பிரஷர் குக்கரில் திணை, மூங்கால், பால், தண்ணீர் இரண்டையும் பிரஷர் குக்கரில்4 விசில் விடவும். வெல்லத்தை தட்டி அளந்து கொள்ளவும்.ஒரு பாத்திரத்தில் வெல்லத்தை எடுத்து,2 டேபிள் ஸ்பூன் தண்ணீர் சேர்த்து வெல்லம் முழுவதுமாக உருகும் வரை சூடாக்கி, சிரப்பை ஒரு வடிகட்டி வழியாக அசுத்தங்களை வடிகட்டவும்.பிரஷர் வெளியானதும் பிரஷர் குக்கரைத் திறந்து, சமைத்த தினை மற்றும் வெல்லம் பாகு சேர்க்கவும். குக்கரை அடுப்பில் வைத்து, பொங்கலை குறைந்த தீயில்7,10 நிமிடங்கள் நன்கு கலக்கவும். நெய் விட்டு சூடாக்கி அதில் உடைத்த முந்திரியை, திராட்சை,சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுக்கவும். இதை சமைக்கும் திணை சக்கரைப் பொங்கலுக்கு மாற்றவும். ஏலக்காய் தூள், சுக்கு தூள், பச்சை கற்பூரம் சேர்த்து நன்றாக கலக்கவும். தீயை அணைத்து சூடாக பரிமாறவும்.
தேவையான பொருட்கள்-1கப் வரகு அரிசி,1கப் பாசிப்பருப்பு,2ஸ்பூன் பட்டர்,உப்பு சுவைக்கேற்ப ,2 பச்சை மிளகாய்,1 துண்டு இஞ்சி,1ஸ்பூன் சீரகம்,1ஸ்பூன்மிளகு,2 கொத்து கருவேப்பிலை,நெய்,1டம்ளர் பால்.செய்முறை.வரகு அரிசி, பாசிப்பருப்பு இரண்டையும் நன்றாக கழுவி1/2மணி நேரம் ஊற விடவும்.பின்னர் குக்கரில் சேர்த்து அதனுடன் பச்சை மிளகாய்,1/2ஸ்பூன் சீரகம், பட்டர், இஞ்சி சேர்த்து அதனுடன்1பங்கு அரிசிக்கு3பங்கு தண்ணீர் சேர்த்து4விசில் வரும் வரை வேக விட்டு இறக்கவும்.பின்னர் பால், தேவையான உப்பு சேர்த்து கிளறவும்(பால் சேர்ப்பதால் பொங்கல் ஆறிய உடனும் கெட்டி படாமல் இலகுவாக இருக்கும்).பின்னர் ஒரு கடாயில் நெய் சேர்த்து சூடானதும் மிளகு, சீரகம், கருவேப்பிலை சேர்த்து தாளித்து பொங்கலில் சேர்க்கவும். செம டேஸ்டி ஹெல்த்தி பொங்கல் தயார்.
தேவையான பொருட்கள் 50 கிராம்சோளம், 50 கிராம்கம்பு, 50 கிராமிகவுனி அரிசி50 கிராம்கோதுமை , 50 கிராம்கேழ்வரகு , 50 கிராம்திணை.50 கிராம் வரகு ,50 கிராம் சாமை , 50 கிராம் குதிரைவாலி100 கிராம் உளுந்து , 25 கிராம் குழம்பு கடலை பருப்புதேவையான அளவுஉப்பு செய்முறை.ஒரு பாத்திரத்தில் உளுந்தை நான்கு மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.பின்னர் மற்றொரு பாத்திரத்தில் சிறு தானியங்கள் அனைத்தையும் நான்கு மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.உளுந்தையும் சிறு தானியத்தையும் கிரைண்டரில் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ளவும். அதை8 மணிநேரம் உப்பு சேர்த்து கரைத்து ஊறவைத்துக் கொள்ளவும்.பின்னர் தோசைக்கல்லில் குழந்தைகளுக்கு விரும்பிய வடிவத்தில் வார்த்துக் கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள் .சுவையான சத்தான சிறுதானிய பருப்பு அடை ரெடி.குழந்தைகளுக்கு மிகவும் சத்தான உணவாக அமைந்துள்ளது.சிறுதானியம் சாப்பிடுங்கள் உடல் எடையை குறைக்கலாம் .விரைவில் பசி எடுக்காது.உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவு குறையும். ரத்த சிவப்பணுக்களின் உற்பத்தி அதிகரிக்கும்.
தேவையான பொருட்கள்1 டம்ளர் இட்லி அரிசி,1/2டம்ளர் கம்பு,1/4டம்ளர் சோளம்,1/4 கப் உளுந்து பருப்பு,1ஸ்பூன் வெந்தயம், தேவையானஅளவு உப்பு, வெங்காயம், பச்சை மிளகாய்,1/2ஸ்பூன் கடுகு,1ஸ்பூன் கடலை பருப்பு செய்முறை.கம்பு ,சோளம், இட்லி அரிசி, உளுந்து பருப்பு ,வெந்தயம் ,அனைத்தையும் கழுவி 8 மணி நேரம் ஊற வைக்கவும். பின் நைசாக அரைத்து உப்பு சேர்த்து கலக்கி புளிக்க வைக்கவும். பின் மாவில் கடுகு கடலை பருப்பு வெங்காயம் பச்சை மிளகாய் தாளித்து கொட்டி கலக்கவும். அடுப்பில் பணியாரக் கல்லை வைத்து எண்ணெய் தடவி பின் மாவை ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு எடுத்து பரிமாறவும்.
தேவையான பொருட்கள் - கோதுமை மாவு 2 கப், சோயா மாவு - அரை கப். நெய் ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு அரை டீஸ்பூன், எண்ணெய் தேவையான அளவு.செய்முறை - மேலே குறிப்பிட்டுள்ள பொருட்களில், எண்ணெய் நீங்கலாக எல்லாவற்றையும் கலந்து, தேவையான தண்ணீர் சேர்த்து பிசைந்து, மெல்லிய சப்பாத்திகளாக திரட்டுங்கள். வழக்கம்போல தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய் தடவி வேக விடுங்கள்.
தேவையான பொருட்கள் - கோதுமை மாவு - ஒரு கப், வாழைப்பழம் - 1. சர்க்கரை ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - ஒரு சிட்டிகை, நெய் 2 டீஸ்பூன், எண்ணெய் - நெய் கலவை தேவையான அளவு. செய்முறை - வாழைப்பழத்தை நன்கு மசித்துக்கொள்ளுங்கள்.எண்ணெய், நெய் கலவை நீங்கலாக மற்றவற்றை ஒன்றாக சேர்த்து, பிசைந்துகொள்ளுங்கள். பிறகு, சப்பாத்திகளாக தேய்த்து எண்ணெய் நெய் கலவையை சுற்றிலும் ஊற்றி, வேகவிட்டு எடுங்கள். இந்த சப்பாத்தி மிக மிருதுவாக இருக்கும். எனவே, சிறு குழந்தைகளுக்கும், மெல்ல முடியாத வயோதிகர்களுக்கும் கூட ஏற்ற சப்பாத்தி.
தேவையான பொருட்கள் - கோதுமை மாவு - 2 கப். நெய் - 2 டீஸ்பூன், உப்பு அரை டீஸ்பூன், எண்ணெய் நெய் கலவை தேவையான அளவு. பூரணத்துக்கு: முள்ளங்கி துருவல் ஒன்றரை கப் மிளகாய்தூள் - ஒரு டீஸ்பூன், மாங்காய்தூள் - ஒன்றரை டீஸ்பூன், சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன், தனியாதூள் - அரை டீஸ்பூன், கரம்மசாலா தூள் அரை டீஸ்பூன், உப்பு தேவையான அளவு. எண்ணெய் ஒரு டேபிள்ஸ்பூன். செய்முறை - முள்ளங்கியை தோல் சீவி துருவுங்கள். எண்ணெயைக் காய வைத்து முள்ளங்கியைச் சேர்த்து நன்கு வதக்கி, அதில் கொடுத்துள்ள தூள்களை சேர்த்து சுருள கிளறி இறக்குங்கள். கோதுமை மாவுடன் நெய், உப்பு, தண்ணீர் சேர்த்து மென்மையாக பிசையுங்கள். சிறிது மாவெடுத்து கிண்ணம் போல் செய்து சிறிது பூரணத்தை உள்ளே வைத்து நன்கு மூடி, சப்பாத்திகளாக திரட்டி தோசைக்கல்லில் போடுங்கள். இருபுறமும் எண்ணெய் - நெய் கலவை ஊற்றி கட்டெடுங்கள்.குறிப்பு: ஸ்டஃப் செய்யும் சப்பாத்திகளை திரட்டும்போது, மாவை கிண்ணம் போல செய்து பூரணத்தை உள்ளே வைத்து தேய்க்கும்போது. பூரணம் சிறிது வெளியே வர வாய்ப்புண்டு. அதற்கு பதிலாக, ஒரு சப்பாத்திக்கு உரிய மாவை எடுத்து, அதை இரு உருண்டைகளாக்கி, இரு மெல்லிய சப்பாத்திகளாகத் திரட்டுங்கள். ஒரு சப்பாத்தியின் மேலே பூரணத்தை மெல்லிய அடுக்காக பரப்பி, அதன் மேல் இன்னொரு சப்பாத்தியை வைத்து மூடி, ஓரங்களை தண்ணீர் தொட்டு ஒட்டிவிடுங்கள். இம்முறையில் பூரணம் வெளியே வராது.
தேவையான பொருட்கள் - கோதுமை மாவு 2 கப். நெய் 2 டீஸ்பூன், உப்பு - அரை டீஸ்பூன்,பூரணத்துக்கு: பொடியாக துருவிய காலிஃப்ளவர் - கப், தேங்காய் துருவல் ஒரு டீஸ்பூன், துருவிய வெங்காயம் 2 டீஸ்பூன். பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2 டீஸ்பூன், பொடியாக நறுக்கிய மல்லி -2 டீஸ்பூன், மஞ்சள்தூள் -அரை டீஸ்பூன், சீரகத்தூள் ஒரு டீஸ்பூன். உப்பு -தேவையான அளவு.செய்முறை - மாவை நெய். உப்பு சேர்த்து பிசையுங்கள். காலி ஃப்ளவருடன் வெங்காயம். உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து பிசைந்து அழுத்தி வையுங்கள். 10 நிமிடம் கழித்து நன்கு பிழிந்தெடுங்கள். அதனுடன் மற்ற பொருட்களையும் சேர்த்து கலந்து வையுங்கள். இதுதான் பூரணம்.பிறகு கோதுமை மாவை நெய், உப்பு சேர்த்து பிசைந்து, முள்ளங்கி சப்பாத்தி போலவே செய்து சுட்டெடுங்கள். ருசியான மாலை டிபன்.
தேவையான பொருட்கள் - கோதுமை மாவு 2 கப், மிளகாய்தூள் -அரைடீஸ்பூன், கரம் மசாலாதூள்.- ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் கால் டீஸ்பூன். நெய் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - அரைடீஸ்பூன், எண்ணெய் -நெய் கலவை - தேவையான அளவு.செய்முறை - கோதுமை மாவுடன் மிளகாய்தூள், சுரம் மசாலாதூள், மஞ்சள்தூள், உப்பு, நெய் எல்லாம் சேர்த்து கலந்து, தேவையான தண்ணீர் ஊற்றி பிசைந்துகொள்ளுங்கள். சப்பாத்திகளாக திரட்டி. தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய் நெய் கலவை சேர்த்து வேகவிடுங்கள். கரம் மசாலா மணத்துடன் கமகமக்கும் இந்த மசாலா சப்பாத்தி,
தேவையான பொருட்கள் - கோதுமை மாவு - 2 கப், நெய் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - அரை டீஸ்பூன், எண்ணெய் - நெய் கலவை தேவையான அளவு அரைக்க: பசலைக்கீரை (பாலக்) - ஒரு கட்டு, பச்சை மிளகாய் -3, இஞ்சி -ஒரு துண்டு, உப்பு - சிறிதளவு.செய்முறை - பசலைக்கீரையை சுத்தம் செய்து கழுவி, பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து குக்கரில் ஒரு விசில் வைத்து இறக்குங்கள். விசிலைத் தூக்கி பிரஷரை வெளியேற்றிவிட்டு, குக்கரைத் திறந்து வையுங்கள். ஆறியதும், அவற்றை நன்கு அரைத்துக்கொள்ளுங்கள். அரைத்த விழுதுடன் கோதுமை மாவு, உப்பு, நெய் சேர்த்துப் பிசைந்து, வழக்கம் போல சப்பாத்திகளாகத் திரட்டி, தோசைக்கல்லில் சுட்டெடுங்கள்.