சிறுதானிய பருப்பு அடை
தேவையான பொருட்கள்
50 கிராம்சோளம், 50 கிராம்கம்பு, 50 கிராமிகவுனி அரிசி
50 கிராம்கோதுமை , 50 கிராம்கேழ்வரகு , 50 கிராம்திணை
.50 கிராம் வரகு ,50 கிராம் சாமை , 50 கிராம் குதிரைவாலி
100 கிராம் உளுந்து , 25 கிராம் குழம்பு கடலை பருப்பு
தேவையான அளவுஉப்பு
செய்முறை.
ஒரு பாத்திரத்தில் உளுந்தை நான்கு மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.
பின்னர் மற்றொரு பாத்திரத்தில் சிறு தானியங்கள் அனைத்தையும் நான்கு மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.
உளுந்தையும் சிறு தானியத்தையும் கிரைண்டரில் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ளவும். அதை8 மணிநேரம் உப்பு சேர்த்து கரைத்து ஊறவைத்துக் கொள்ளவும்.
பின்னர் தோசைக்கல்லில் குழந்தைகளுக்கு விரும்பிய வடிவத்தில் வார்த்துக் கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள் .சுவையான சத்தான சிறுதானிய பருப்பு அடை ரெடி.
குழந்தைகளுக்கு மிகவும் சத்தான உணவாக அமைந்துள்ளது.சிறுதானியம் சாப்பிடுங்கள் உடல் எடையை குறைக்கலாம் .விரைவில் பசி எடுக்காது.உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவு குறையும். ரத்த சிவப்பணுக்களின் உற்பத்தி அதிகரிக்கும்.
0
Leave a Reply