25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு சஞ்சீவி மலையில் படி பூஜை விழா. >> ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர் தேக்கம் நிரம்பி, 2-வது குடிநீர் தேக்கத்துக்கும் தண்ணீரை சேமித்து வைக்கவும் நகராட்சி தலைவர் பவித்ரா ஷியாம், ஆணையாளர் நாகராஜன் உத்தரவு. பொதுமக்கள் மகிழ்ச்சி. >> பாரம்பரிய கொத்தலு திருவிழா, ராஜூக்கள் சமூகம் சார்பில்ராஜபாளையத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டது. >> ராஜபாளையம் சர்வசமுத்திர அக்ரஹாரம் தெரு சந்தான வேணுகோபால சுவாமி கோயிலில் மகாதேவ அஷ்டமி. >> விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஒன்றியத்திற்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 10 நாட்கள் தொழில் முனைவோர் பயிற்சி முகாம். >> ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா. >> நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >>


சமையல்

Sep 06, 2025

வரகரிசி புட்டு.

தேவையான பொருட்கள்-½கப் வரகு அரிசி,அரை கப் பயத்தம் பருப்பு,1கப் பொடித்த வெல்லம்,1தேக்கரண்டி ஏலக்காய் பொடி,4 தேக்கரண்டி அதி மதுரம் பொடி,½ தேக்கரண்டி ஜாதிக்காய் பொடி.½தேக்கரண்டி குங்குமப்பூ,1கப் டெசிகெடெட் ஸ்வீடன்ட் தேங்காய் துருவல்,. ¼கப் உருகிய வெண்ணை, 20 முந்திரி ,1/4கப் உலர்ந்த திராட்சை,சிட்டிகை உப்புசெய்முறை -குங்குமப்பூவை ஒரு சின்ன கிண்ணத்தில் மேஜைகரண்டி சூடான நீரில் கரைக்கவும்.மிதமான நெருப்பில் ஒரு சாஸ்பெனில் 1 மேஜை கரண்டி உருகிய வெண்ணையில் முந்திரி திராட்சை வறுக்கவும். திராட்சை உப்பும், முந்திரி பொன் சிவக்கும். வறுத்ததை தனியே எடுத்து வைக்கவும்.மிதமான நெருப்பில் ஒரு சாஸ்பெனில் தேங்காய் துருவலை பொன்னிறமாக வதக்கவும்.மிதமான நெருப்பில் ஒரு சாஸ்பெனில் வரகு, ப பருப்பு வாசனை வரும் வரை வறுக்கவும். பின் ஒரு கிண்ணத்தில்3 கப் கொதிக்கும் பாலில் 30 நிமிடங்கள் ஊற வைக்க பின் பிரஷர் குக்கரில் வேகவைக்கவும்.மிதமான நெருப்பில் வாணலியில்½ கப் நீருடன் வெல்லம் சேர்த்து கொதிக்க வைக்கவும். உப்பு சேர்க்க. கிளறிக்கொண்டே இருக்க, கெட்டி பாகு பதம் வேண்டும். ½ தேக்கரண்டி சிரப் நீரில் போட்டு டெஸ்ட் செய்கவும். சுருண்டு வந்தால் பாகு தயார். நெருப்பை சிம்மர் ஆக்கவும்.வேகவைத்த வரகு, பயத்தம் பருப்பு கலவையை உதிர்த்து சிறிது சிறிதாக பாகில் சேர்த்து கிளற.. புட்டு மணல் மணலாக இருக்கும். குங்குமப்பூ, வறுத்த தேங்காய் துருவல், முந்திரி, திராட்சை சேர்த்து கிளறவும். ஜாதிக்காய், அதிமதுரம் துருவி கிளறவும்.மீதி வெண்ணை சேர்த்து கிளறி அடுப்பை அணைக்கவும். வரகரிசி புட்டு தயார். 

Sep 06, 2025

மரவள்ளி கிழங்கு புட்டு.

தேவையான பொருட்கள்-1 கப் கிழங்கு புட்டு மாவு,1/4 கப் தேங்காய்,3/4 கப் சர்க்கரை பாகு,தேவைக்குஉப்புசெய்முறை -மரவள்ளி கிழங்கை நன்கு காயவைத்து இடித்து பொடி செய்துகொள்ளவேண்டும்.அதில் உப்பு, சர்க்கரை பாகு கலந்து, புட்டு மாவு பாதத்திற்கு கொண்டு வரவேண்டும்.ஒரு சிரட்டை எடுத்து அதில் ஓட்டை போட்டு சில் வைக்க வேண்டும் பின்னர் தேங்காய் மாவு தேங்காய் போட்டு நிரப்பி ஆவியில் வேகவைத்து எடுக்கவும்சுவையான சத்தான மரவள்ளி கிழங்கு புட்டு தயார்.

Sep 06, 2025

கருப்பு கவுணி அரிசி – வெல்ல புட்டு

தேவையான பொருட்கள்-1 கப் கவுணி அரிசி மாவு,3/4 கப்நாட்டு சக்கரை,1/2 கப் தேங்காய். ,2 டேபிள்ஸ்பூன் நெய்,. 8-10 முந்திரி, 1/2 டீஸ்பூன் ஏலக்காய் தூள்,ஒரு சிட்டிகை உப்பு.செய்முறை -(கருப்பு கவுணி அரிசியை2 மணி நேரம் தண்ணீரில் ஊற விட்டு ஈரம் போக காய வைத்து ஸ்டவ்வில் வாணலியில் வாசம் வரும்வரை வறுத்து ஆற விட்டு பொடித்த மாவு) ஒரு பவுலில் அரிசி மாவு சேர்த்து உப்பு மற்றும் வெந்நீர் விட்டு தெளித்து நன்கு பிசைந்துக்கவும். கையில் பிடித்தால் பிடிக்க வரணும், விடும்போது உதிர்ந்துந்துடனும் இதுதான் பக்குவம்.ஸ்டவ்வில் கரண்டி வைத்து நெய் ஊற்றி முந்திரி, தேங்காய் சேர்த்து வறுத்து எடுத்துக்கவும்.ஸ்டவ்வில் இட்லி பாத்திரம் வைத்து சூடானதும், இடியாப்ப தட்டில் பிசைநது வைத்திருக்கும் மாவை எடுத்து வைத்து,15 நிமிடம் மிதமான சூட்டில் மூடி வைத்து ஆவியில் வேக விடவும்.அதன் பிறகு சூடு மாவை எடுத்து வேறொரு பாத்திரத்தில் போட்டு சூடு ஆறினதும், அத்துடன் தேங்காய் துருவல், ஏலக்காய் பொடி சேர்த்து கலந்துக்கவும்.அத்துடன் நாட்டுச்சக்கரை சேர்த்து நன்கு கலந்து, நெய்யில் வறுத்த முந்திரி சேர்க்கவும்.கடைசியாக ஒரு டேபிள்ஸ்பூன் நெய் விட்டு எல்லாவற்றையும் சேர்த்து நன்கு கலந்து விட்டால் அருமையான ருசியில் ஆரோக்கியமான கருப்பு கவுணி அரிசி வெல்ல புட்டு தயார்.சிறு தானியங்களில் மிக மிக மருத்துவ குணம் நிறைந்த கருப்பு கவுணி.இதில் நிறைய புரதம், பைபர் மற்றும் உடலுக்கு தேவையான நிறைய சத்துக்கள் இருக்கின்றது.கான்சர் நோய் வராமலும் தடுக்கிறது.

Sep 06, 2025

உளுந்து புட்டு.

தேவையான பொருட்கள்:-உளுந்தம் பருப்பு - 1 கப் ,பொடித்த வெல்லம்- 1 கப்‎,தேங்காய் துருவல் - 1 கப்,உப்பு, தண்ணீர் -தேவையான அளவு.செய்முறை:-உளுந்தை வறுத்து பொடியாக்கவும், இதில் உப்பு போட்டு, தண்ணீர் தெளித்து புட்டு மாவு பதத்தில் பிசையவும். பின், ஆவியில் வேகவைத்து வெல்லம், தேங்காய் சேர்க்கவும்சத்துகள் நிறைந்த, 'உளுந்து புட்டு' தயார், அனைத்து வயதினரும் விரும்பி உண்பர்.

Aug 30, 2025

பலாப்பழ பாயாசம்.

 தேவையான பொருட்கள்-ஜவ்வரிசி 1கப், நல்ல பலாப்பழம்- 5 சுளைகள்,வெல்ல பாகு அரை கப், ஏலக்காய்தூள் அரைஸ்பூன் ,தேங்காய்- அரைமூடி,முந்திரிபருப்பு- 8,கிஸ்மிஸ்பழம் 15,நெய்-6 ஸ்பூன் செய்முறை -முதலில் தேவையானவற்றை ரெடி பண்ணிக் கொள்ளவும்..பலா சுளைகளைக் கட்பண்ணிக் கொள்ளுங்கள்.வெல்லப்பாகு காய்ச்சி வடிகட்டிக்கொள்ளுங்கள்..ஜவ்வரிசியை குக்கரில் தண்ணீர்விட்டு வேக வைத்துக்கொள்ளுங்கள். தேங்காய்பால் மூன்றுபால் எடுத்துவைத்துக் கொள்ளுங்கள். முதல் பாலைவிடவும்.பலா பழத்தைச்சேர்க்கவும்.பின் இரண்டாம்பால் சேர்க்கவும்.வெல்லப்பாகு சேர்த்து மூன்றாம்பால் சேர்க்கவும்.தேங்காய் சிறிதளவு கட் பண்ணிக்கொள்ளவும்.வாணலியில்2ஸ்பூன்நெய்விட்டு, முந்திரி,திராட்சை, கட் பண்ணிய தேங்காய் சேர்த்து வறுத்து பாயாசத்தில் சேர்க்கவும்.மீதி நெய்யை பாயாசத்தில் சேர்க்கவும்.சுவையான மணமான பலாப்பழப் பாயாசம் ரெடி.

Aug 30, 2025

கேரட் பாயாசம்.

தேவையான பொருட்கள் -கேரட்  5,நெய் தேவையான அளவு,முந்திரி தேவையான அளவு, உலர் திராட்சை தேவையான அளவு,தேங்காய் சிறிது அளவு, வெல்லம் தேவையான அளவு,பால்_1கப்,ஏலக்காய் தூள் சிறிதளவுசெய்முறை -கேரட்டை துருவி நெய்யில் வதக்கி ஆறவைத்து,அரைத்துக் கொள்ளவும்.முந்திரி உலர் திராட்சை நறுக்கிய தேங்காய் ஓரு கை ஆகியவற்றை நெய்யில் வறுத்து கொள்ளவும்.அதனுடன் ஒரு டம்லர் தண்ணீர் ,வெல்லம் சேர்த்து கொதிக்க வைக்கவும். தேவைபட்டால் தண்ணீர் மீண்டும் ஒரு டம்ளர் சேர்க்கவும்.நன்கு கொதித்தவுடன் கேரட் அரைத்த கலவையை சேர்க்கவும். அதனுடன்1 கப் பால் சேர்க்கவும்.சேர்த்து கொதித்தவுடன் ஏலக்காய் தூள் சேர்க்கவும். இப்போது நெய் சேர்த்து கிளறவும்.  சுவையான கேரட் பாயாசம் ரெடி.

Aug 30, 2025

டிரை ஃப்ரூட் பாயாசம்.

தேவையான பொருட்கள்-1/4 லிட்டர் பசும்பால்,2 துண்டு பட்டை,2 ஏலக்காய்,2 கிராம்பு,20 மி.லி நெய் ,100 கிராம் சர்க்கரை,3 டேபிள்ஸ்பூன் மில்க்மெய்டு, தேங்காய் பால் அரைப்பதற்கு - 100 கிராம் கொப்பரை தேங்காய்,2 டீஸ்பூன் கசகசா,முந்திரி பேஸ்ட் செய்வதற்கு -20 கிராம் பாதாம்,20 கிராம் முந்திரி ,1 அக்ரூட் செய்முறை ஒரு பாத்திரத்தில் சுடு தண்ணீர் வைத்து ,அதில் பாதாம் மற்றும் கொப்பரை தேங்காய் ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.இப்போது ஒரு மிக்ஸியில் கொப்பரை தேங்காய் மற்றும் கசகசாவை சேர்த்து அரைத்து, அதை பால் எடுத்துக் கொள்ளவும் .மூன்று முறை அரைத்து பால் எடுத்து வடிகட்டி கொள்ளவும்.இப்போது மிக்ஸியில் பாதாம் ,முந்திரி, ஒரு அக்ரூட், சேர்த்து மையாக அரைத்துக் கொள்ளவும்.ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அது சூடான பிறகு ,அதில் நெய் சேர்த்து அதனுடன்  பட்டை, கிராம்பு ,ஏலக்காய் ,சேர்த்து அதனுடன் காய்ச்சிய பசும்பாலை சேர்த்து கொதிக்க வைத்துக் கொள்ளவும்.கொதித்த பசும்பாலுடன் அரைத்து வைத்து தேங்காய் பால் மற்றும் பாதாம் முந்திரி பேஸ்ட்டையும் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும்.சர்க்கரை மற்றும் மில்க் மேடு சேர்த்து மீண்டும் ஐந்து நிமிடம் வைக்கவும்.இப்போது பாயாசம் ரெடி.

Aug 30, 2025

வரகு பாயாசம்.

தேவையான பொருட்கள் -1 கப் வரகரிசி, 2 கப்பால், தேவைக்குதண்ணீர், அரைகப்சர்க்கரை, தேவைக்குமுந்திரி, திராட்சை, பாதாம் ஏலக்காய், 2ஸ்பூன்நெய்செய்முறை - வரகு அரிசியை அரை மணிநேரம் ஊறவைக்கவும்.பின் குக்கரில் தேவையான தண்ணீர்ஊற்றி  நன்றாகவேக வைக்கவும்.வேகவைத்த வரகரிசியை வேறுபாத்திரத்தில்மாற்றிபின், சர்க்கரை2ஸ்பூன் கேரமல்பண்ணிசேர்க்கவும்.பின்தேவையானபால் மீதி சர்க்கரையைச்சேர்க்கவும்.நெய்1ஸ்பூன்சேர்க்கவும்.பின் ஏலக்காய் பொடிசேர்க்கவும்.நெய்யில்முந்திரி, திராட்சை,வறுத்துசேர்க்கவும்.பாதாம் முந்திரி,திராட்சைவைத்து அலங்கரிக்கவும்.வரகு பாயாசம்ரெடி.கேரமல்சேர்ப்பதால்வித்தியாசமான ருசியைக்கொடுக்கும்.சுவையான வரகு பாயாசம் சுவைத்து மகிழுங்கள்.

Aug 30, 2025

கஸ்டர்டு சேமியா பாயாசம் .

 தேவையான பொருட்கள்-500மிலி பால், 2 டேபிள்ஸ்பூன்கஸ்டர்டு பவுடர்,1/2 கப்சர்க்கரை, 1/4 கப்சேமியா, 1/2 டீ ஸ்பூன் நெய், பாதாம், முந்திரி – சிறிதளவுசெய்முறை-ஒரு அடிகனமான பாத்திரத்தில் நெய் ஊற்றி, அது சூடானதும் சேமியாவை சேர்த்து நன்கு கிளறவும் சேமியா பொன்னிறம் ஆனதும் தனியாக எடுத்து வைக்கவும்.ஒரு பவுலில் கஸ்டர்ட் பவுடர் பால் சிறிதளவு சேர்த்து கரைத்து வைத்து கொள்ளவும்.ஒரு பாத்திரத்தில் பால் ஊற்றி கொதித்து வந்ததும் சர்க்கரை சேர்த்து கலந்து விடவும். பிறகு வறுத்த சேமியாவை பாலில் சேர்த்து கலந்து விடவும்.சேமியா வெந்ததும் கஸ்டர்ட் மிக்ஸை சேர்த்து கைவிடாமல் கிளறி விடவும். லேசாக கெட்டியாக வரும் போது இறக்கவும். கடைசியாக அதன் மேல் பாதாம் முந்திரி துண்டுகளுடன் அலங்கரித்து பரிமாறவும்.

Aug 30, 2025

பஞ்சாபி பாஸ்தா பாயசம்.

தேவையான பொருட்கள்:-பாஸ்தா - 1 கப்பால் - 3 கப் சர்க்கரை -100 கிராம்நெய், தேங்காய் - சிறிதளவுஏலக்காய் பொடி, முந்திரி, தண்ணீர் - தேவையான அளவு.செய்முறை:-பாஸ்தாவை தண்ணீரில் வேகவைக்கவும், பாலில் சர்க்கரை கலந்து பாத்திரத்தில் கொதிக்க விடவும். நன்றாக அரைத்த தேங்காய், முந்திரி பருப்பு விழுதை அதில் சேர்க்கவும். பின், வேக வைத்த பாஸ்தாவை போட்டு கொதிக்க விடவும். ஏலக்காய் பொடி, நெய்யில் வறுத்த முந்திரி கலந்து இறக்கவும்.சுவை மிக்க, 'பஞ்சாபி பாஸ்தா பாயசம்!' தயார், 

1 2 ... 7 8 9 10 11 12 13 ... 50 51

AD's



More News