தேவையான பொருட்கள்- பச்சரிசி – ஒரு கப் ,கற்கண்டு – ஒரு கப், பால் – ஒரு கப், தண்ணீர் – 2 கப், குங்குமப்பூ – ஒரு சிட்டிகை ,உப்பு – ஒரு சிட்டிகை, நெய் – 3 டேபிள் ஸ்பூன், முந்திரி – 10 ,திராட்சை – 10, ஏலக்காய் தூள் – 1/4 ஸ்பூன், செய்முறை- முதலில் அரிசியை ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி நன்றாக கழுவி சுத்தம் செய்த பிறகு அரை மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளுங்கள். அதேபோல் கற்கண்டையும் அடுப்பில் சிறிதளவு மட்டும் தண்ணீர் ஊற்றி கற்கண்டு போட்டு பாதி அளவு கரைந்ததும் அடுப்பை அணைத்து விடுங்கள். மீதம் இருக்கும் கற்கண்டு அந்த சூட்டிலேயே கரைந்து விடும். இப்பொழுது அடுப்பை குக்கரை வைத்து அதில் பால், ஊற வைத்திருக்கும் அரிசி, தண்ணீர், குங்குமப்பூ, உப்பு இவை அனைத்தையும் சேர்த்து நன்றாக கலந்து விட்டு, குக்கரை மூடி மூன்று விசில் வரும் அளவிற்கு விட வேண்டும். மூன்று விசில் வந்த பிறகு, குறைந்த தீயில் வைத்து இரண்டு நிமிடம் அடுப்பில் வைத்திருக்க வேண்டும். பிறகு அடுப்பை அணைத்து விட வேண்டும்.குக்கரின் விசில் நன்றாக போனபிறகு அதைத் திறந்து கரண்டியை வைத்து நன்றாக அந்த சாதத்தை மசித்து எடுத்துக் கொள்ளுங்கள். பிறகு கரைத்து வைத்திருக்கும்,கற்கண்டு தண்ணீரையும் அதில் ஊற்றி நன்றாக கலந்து அடுப்பில் வைத்து கிண்ட வேண்டும். ஒரு தாலிக்கும் கரண்டியை எடுத்து அதில் மூன்று டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி, நெய் உருகியதும் அதில் முந்திரிப் பருப்பு விருப்பம் இருப்பவர்கள், உலர் திராட்சை போன்றவற்றை சேர்த்து நன்றாக வறுத்து, அதை கற்கண்டு பொங்கலில் சேர்க்க வேண்டும். பிறகு அதனுடன் ஏலக்காய் பொடியை சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும். அவ்வளவுதான் சுவையான கற்கண்டு சாதம் தயாராகிவிட்டது.
தேவையான பொருட்கள் -பச்சை அரிசி - 1 கப்,பாசிப்பருப்பு - 2 முதல் 4 டீஸ்பூன் ,வெல்லம் - 1 & ½ கப் முதல் 2 கப் ,நெய் - ¼ கப் (விருப்பத்திற்குஏற்ப ),ஏலக்காய் - 5அரிசி சமைக்க தண்ணீர் - 6 கப்,பால் -1 கப்,வெல்லம் சிரப் செய்ய தண்ணீர் - ½ கப்உண்ணக்கூடிய கற்பூரம் - கடுகு விதை அளவுஉப்பு - ஒரு சிட்டிகை (விருப்பப்பட்டால்)முந்திரி, திராட்சை - தலா 1 டேபிள் ஸ்பூன்செய்முறை- முதலில் பிரஷர் குக்கர்/பானை எடுத்து, ¼ டீஸ்பூன் நெய் சேர்த்து, பாசிப்பருப்பை வறுக்கவும்.தண்ணீரில் கழுவிய அரிசி மற்றும் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து,4 விசில் வரும் வரை பிரஷர் குக் செய்யவும். வெந்தவுடன் மசிக்கவும்.இதற்கிடையில், வெல்லத்தைப் பொடி செய்து, தண்ணீரில் மூழ்கும் வரை சூடாக்கி, கொதிக்க வைக்கவும். வெல்லம் முழுவதுமாகக் கரையட்டும்.ஒரு தனி வாணலியில், ஒரு டீஸ்பூன் நெய்யை சூடாக்கி, முந்திரி பருப்பை பொன்னிறமாக வறுக்கவும். அதன் பிறகு, அதில் திராட்சையைச் சேர்க்கவும். அது நன்றாக வதங்கியதும், அதை மாற்றி தனியாக வைக்கவும்.ஏலக்காயை எடுத்து பொடி செய்து, பொடித்த ஏலக்காய், உண்ணக்கூடிய கற்பூரம், பொங்கலில் சேர்க்கவும்.நன்றாகக் கலந்து, மிதமான தீயில் 5 நிமிடங்கள் சமைக்கவும். ¼ கப் தண்ணீர் அல்லது பால் சேர்க்கவும். சிறிது சிறிதாக நெய் சேர்க்கவும். கடைசியாக வறுத்த முந்திரி மற்றும் திராட்சையைச் சேர்க்கவும். சுவையான பொங்கல் தயார்.
தேவையான பொருட்கள்:பூசணிக்காய் - 1 துண்டுகடலைபருப்பு - 1 டேபிள் ஸ்பூன்துவரம்பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்சிவப்பு மிளகாய் - 4புளி - நெல்லிக்காய் அளவுதேங்காய் - அரை மூடிஎண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்உப்பு - சுவைக்கேற்பமஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை தாளிக்க - கடுகு, உளுந்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன்,கறிவேப்பிலை - ஒரு இணுக்கு செய்முறை:பூசணிக்காயை தோல் சீவி காரட் துருவியில் துருவிக் கொள்ளுங்கள். தேங்காயை பூப்போல துருவி வைக்கவும். பின் துருவிய பூசணி துருவலில் உப்பு சேர்த்து பிசறி ஒரு தட்டில் அமுக்கி தட்டை சாய்த்தார் போல் வைத்தால் நீரெல்லாம் வடிந்துவிடும். இப்படி செய்து சமைப்பதால் சளி பிடிக்காது. (பூசணியில் இருந்து வரும் நீரில் மிளகுதூள் சேர்த்து பழச்சாறாகக் குடிக்கலாம்) வாணலியை சூடாக்கி, எண்ணெய் விட்டு, கடுகு, உளுந்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து பின் அதில் கடலைபருப்பு, துவரம்பருப்பு இரண்டையும் மணம் வர வறுத்து, பின் பூசணி துருவல், சிவப்பு மிளகாய், புளி அனைத்தையும் சேர்த்து வதக்கவும். ஆறியதும் துருவிய தேங்காய், உப்பு சேர்த்து அனைத்தையும் ஒன்றாகநைசாக அரைக்கவும். பூசணி துவையல் தயார். மணமும் ருசியும் சத்தும் உள்ளது.நல்லெண்ணெய் ஊற்றி சாதத்தில் கலந்து சாப்பிடலாம். சாம்பார் சாதம், ரசம் சாதத்திற்கும் அருமையான சைட் டிஷ்.
தேவையான பொருட்கள்:பலா விதை -250 கிராம்காய்ந்த மிளகாய் - 6பச்சை மிளகாய்-2பெருங்காயம்,தேங்காய், உப்பு, புளி, தண்ணீர் தேவையான அளவு.செய்முறை:கடாயில் எண்ணெய் சூடானதும் தோல் நீக்கிய பலாவிதைகளை போட்டு நன்கு வறுக்கவும். பின், காய்ந்த மிளகாய், பெருங்காயம், துண்டாக்கிய பச்சை மிளகாயை போட்டு வதக்கவும்.இந்த கலவை ஆறியதும் உப்பு, புளி, துருவிய தேங்காய், தண்ணீர் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.வித்தியாசமான சுவையுள்ள, 'பலா விதை துவையல்!' தயார். சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம். சத்துகள் நிறைந்தது.
தேவையான பொருட்கள்:துாதுவளை -1 கப்,கறிவேப்பிலை -கால் கப்,துருவிய தேங்காய் - கால் கப்,சின்ன வெங்காயம் – 15,உளுந்தம் பருப்பு, கடலைப்பருப்பு -தலா 1 மேஜைக்கரண்டி, காய்ந்த மிளகாய், இஞ்சி, பூண்டு -தேவையான அளவு ,உப்பு, புளி, எண்ணெய், தண்ணீர் - சிறிதளவு.செய்முறை:பாத்திரத்தில் எண்ணெய் சூடானதும் உளுந்தம் பருப்பு, கடலைப் பருப்பு, காய்ந்த மிளகாய், துண்டாக்கிய இஞ்சி, பூண்டு, நறுக்கிய சின்ன வெங்காயம், துாதுவளை, கறிவேப்பிலை, தேங்காய் சேர்த்து நன்கு வதக்கவும். கலவை ஆறிய பின் புளி, உப்பு, தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.சுவைமிக்க,'துாதுவளை கறிவேப்பிலை துவையல்!' தயார். சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம். சளி, இருமலை விரட்டி ஆரோக்கியம் தரும்.
தேவையான பொருட்கள் :-தேங்காய்பல் அரை கப், வத்தல்4, கருவேப்பிலை சிறிதளவு, பெருங்காயம் சிறிதளவு, உப்பு தேவையான அளவு, புளி சிறிதளவு ,வறுத்த அப்பளம் அல்லது வடகம் 1 கப்(நொறுக்கியது), எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன்.செய்முறை - ஒரு கடாயில் எண்ணெய் விட்டு தேங்காய் பல்லை நன்றாக வறுத்து பின் வத்தல், கருவேப்பிலை ,பெருங்காயம், புளி சேர்த்து வதக்கி, பின் உப்பு சிறிதளவு சேர்க்கவும். ஆறிய பின் மிக்ஸியில் நைஸாக அரைத்து, நொறுக்கிய அப்பளம் சேர்த்து துவையல் பதத்திற்கு அரைத்து எடுக்கவும். அப்பளம் துவையல் ரெடி.
தேவையான பொருட்கள் :- சுண்டைக்காய்1 சிறிய கப்(200 கிராம்), வத்தல்5, நெய் அல்லது கடலை எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன், பல்லாரி அரை கப் பொடியாக நறுக்கியது. கருவேப்பிலை சிறிதளவு, புளி தேவையான அளவு, பெருங்காயம் சிறிதளவு, உப்பு தேவைக்கேற்ப.செய்முறை :- சுண்டைக்காயை கல்லில் போட்டு இடித்து எடுத்துக் கொள்ளவும். மூன்று டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு இடித்த சுண்டைக்காயை வறுக்கவும்.17 நிமிடங்கள் மீடியம் பிளேமில் வைத்து வதக்கி தனியாக வைக்கவும், கடலை பருப்பை எண்ணெய் விட்டு வறுத்து, வத்தல், சீரகம் அரை டீஸ்பூன் போட்டு, பொடியாக நறுக்கிய பல்லாரி ,கருவேப்பிலை, பெருங்காயம், புளி, உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும். பின் சுண்டைக்காய் சேர்த்து நைஸாக அரைக்கவும். ருசியான சுண்டைக்காய் துவையல், சாதம், இட்லி, தோசைக்கு, சைட்டிஷ்.
தேவையான பொருட்கள் -முள்ளங்கி1 மீடியம் சைஸ், வத்தல்3, கருவேப்பிலை சிறிதளவு, சின்னவெங்காயம்10, பெருங்காயப் பொடி சிறிதளவு, பூண்டு 5 பல், தேங்காய் துருவல் சிறிதளவு, புளி தேவையான அளவு, கடலை பருப்பு2 டீஸ்பூன், உளுந்து1 டீஸ்பூன், உப்பு தேவையான அளவு, எண்ணெய் 3 டேபிள் ஸ்பூன்.செய்முறை -முதலில் வாணலியில்1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு, கடலைபருப்பு, உளுந்து சிவக்க வறுத்து, பின் வத்தல், கருவேப்பிலை, சின்ன வெங்காயம், பூண்டு, பெருங்காயம், புளி தேங்காய் துருவல் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். ஆறிய பின் மிக்ஸியில் அரைக்கவும். பின் முள்ளங்கியை தோல் சீவி பொடியாக வெட்டிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு 5 முதல் 6 நிமிடங்கள் வதக்கி, பின் சிறிதளவு தண்ணீர் விட்டு முள்ளங்கியை வேகவிட்டு வெந்தவுடன் ஆறவைத்து அரைத்த விழுதுடன் சேர்த்து நைஸாக அரைக்கவும், முள்ளங்கி துவையல் ரெடி.
தேவையான பொருட்கள் -200 கிராம் பாசிப்பருப்பு,5டேபிள்ஸ்பூன் நெய்,10 முந்திரிப் பருப்பு,1/2 மூடி துருவிய தேங்காய்,100 கிராம் சக்கரை,தேவையான அளவு உப்பு,தேவையான அளவுதண்ணீர். செய்முறை -முதலில் 200 கிராம் பாசிப்பருப்பை நாம் மூன்று மணி நேரத்திற்கு முன்னதாகவே தண்ணீரில் ஊற வைத்து விட வேண்டும்.மூன்று மணி நேரம் கழித்து தண்ணீர் முழுவதையும் நன்றாக வடித்து விட்டு வெறும் பருப்பை மட்டும் ஒரு மிக்ஸி ஜாரில் மாற்றி தண்ணீர் சேர்க்காமல் அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.பிறகு நாம் இட்லி ஊற்றுவது போல் இட்லி சட்டியில் அரைத்த பாசிப்பருப்பு மாவை இட்லி போல் ஊற்றி வேகவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.இட்லி வெந்ததும் அதனை தனியாக எடுத்து ஒரு ப்ளேட்டில் வைத்து நன்றாக ஆற வைத்துக் கொள்ள வேண்டும் இட்லி ஆறியதும் அதனை சிறு சிறு துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.அடுத்து அதனை ஒரு மிக்ஸி ஜாரில் மாற்றி பல்ஸ் மோடில் வைத்து இட்லி துண்டுகளை தூளாக உதிர்த்துக் கொள்ள வேண்டும்.பிறகு ஒரு கடாயில் 5 டேபிள்ஸ்பூன் அளவிற்கு நெய் சேர்த்து அதனுடன் 10 முந்திரி பருப்புகளை உடைத்து சேர்த்துக் கொள்ள வேண்டும்.அதனுடன் அரை கப் துருவிய தேங்காய் சேர்த்து தேங்காய் நெய்யில் நன்றாக வதங்கும் வரை வதக்க வேண்டும்.பிறகு நாம் உதிர்த்து வைத்திருக்கும் பாசிப்பருப்பு இட்லி துருவலை அதனுடன் சேர்த்து நன்றாக கலக்கி, பிறகு அதனுடன் 100 கிராம் அளவிற்கு சர்க்கரை சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும்.இனிப்பை இன்னும் தூக்கி கொடுப்பதற்காக ஒரு பின்ச் அளவிற்கு உப்பு சேர்த்து நன்றாக கிளறி விட்டு, ஒரு5 நிமிடம் வரை சிம்மில் அடுப்பை வைத்து கிளறி விட வேண்டும். மிகவும் ருசியான ஆரோக்கியமான சத்துக்கள் மிகவும் அதிகமாக இருக்கும் பாசிப்பருப்பு புட்டு தயார் வாங்க சாப்பிடலாம்.பொதுவாகவே பருப்பு வகைகளில் சத்துக்கள் மிகவும் அதிகமாக இருக்கும்... புரோட்டீன் சத்துக்கள் அதிகம் நிறைந்த பாசிப்பருப்பில் நாம் மிகவும் சுவையான இனிப்பு புட்டு செய்து சாப்பிடலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும்.
தேவையான பொருட்கள்-1 கப் தினை புட்டு மாவு,1/4 கப் துருவிய தேங்காய்,2 சிட்டிகை உப்பு,வெண்ணெய் - சிறிதளவு , தேவையான அளவு வெந்நீர்செய்முறை -தினை புட்டு மாவில் உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.இதில் வெண்ணெய் சேர்த்து ஈரப்பதம் பருவம் வரை பிசைந்து கொள்ளவும். இந்த மாவை மூடி போட்டு 5 நிமிடம் வைக்கவும்.புட்டுக் குழாயில் துருவிய தேங்காய் கொஞ்சம் போட்டு, அதற்கு மேல் புட்டு மாவை சேர்க்கவும்அதன் மேல் மீண்டும் தேங்காய் துருவியது, இவ்வாறு மாற்றி குழாய் நிரம்பும் வரை சேர்க்கவும். இதனை மூடி போட்டு சூடான புட்டுக் குழாயில் வைத்து நன்கு ஆவி வரும் வரை வேகவிட்டு எடுக்கவும்.இது ஆரோக்கியமான திணை புட்டுடன் நெய் மற்றும் நாட்டு சர்க்கரை சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.