தேவையான பொருட்கள்-இட்லி அரிசி – 400 கிராம்,பொரிகடலை – 200 கிராம்,மிளகாய் வற்றல் – 8 எண்ணம்,வெள்ளைப் பூண்டு – 3 பல் (பெரியது),பெருங்காயத்தூள் – ½ டீஸ்பூன்,வெண்ணெய் – 25 கிராம்,உப்பு – தேவையான அளவு,எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவுசெய்முறை-இட்லி அரிசியை சுமார் நான்கு மணி நேரம் ஊற வைக்கவும். இட்லி அரிசியை கிரைண்டரில் போட்டு ஆட்டவும்.அரிசியை கிரைண்டரில் போட்டு பத்து நிமிடங்கள் கழித்து மிளகாய் வற்றலை சிறிது சிறிதுதாகக் கிள்ளி அரிசியில் சேர்த்து ஆட்டவும்.பின் வெள்ளைப் பூண்டு, தேவையான அளவு உப்பு ஆகியவற்றை அரிசியில் சேர்த்து ஆட்டவும்.அரிசி மாவுக் கலவையினை மையாகவும், கெட்டியாகவும் அரைத்துக் கொள்ளவும்.பொரிகடலையை மிக்ஸியில் போட்டு நைஸாக அரைக்கவும். பின் சல்லடையில் சலித்துக் கொள்ளவும்.சலித்த பொரிகடலை மாவு, வெண்ணெய், பெருங்காயத்தூள் ஆகியவற்றை அரிசி மாவுடன் கலந்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசையவும்.முறுக்கு உழக்கில் சீவலிற்கான அச்சினைப் போட்டு மாவினை அடைத்துக் கொள்ளவும். பின் வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காயவிடவும்.எண்ணெய் காய்ந்ததும் மாவினை சீவல்களாகப் பிழிந்து விடவும். ஒரு புறம் வெந்தவுடன் மறுபுறம் திருப்பி விடவும்.சீவலில் எண்ணெய் குமிழி அடங்கியதும் சீவலை எடுத்து விடவும். சுவையான சீவல் தயார்.நன்கு ஆறியதும் காற்றுப் புகாத டப்பாக்களில் அடைத்து வைக்கவும். இதனை ஒரு மாதம் வரை உபயோகிக்கலாம். இச்சிற்றுண்டியை சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரும் ரசித்து உண்பர்.வாணலியில் எண்ணெய் காய்ந்து வரும்போது சிறிதளவு புளியைச் சேர்க்கவும். இதனால் எண்ணெய் பொங்குவது தவிர்க்கப்படும்.
தேவையான பொருட்கள் -1 லிட்டர்.பால்,150 கிராம் சர்க்கரை,1 எலுமிச்சை பழம்செய்முறை-ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி காய்ச்சிக் பொங்கிவரும் போது குறைவான தீயில் வைத்துக் கொள்ளவும்இதனுடன் எலுமிச்சை சாற்றை ஊற்றி கிளறிக் கொண்டே இருந்தால் பால் திரிந்து தண்ணீர் மற்றும் பனீர் தனியாக பிரிந்து வரும் பொழுது அடுப்பை அணைத்து விடவும்.இதனை ஒரு வெள்ளைத் துணியில் போட்டு1 டம்ப்ளர் தண்ணீர் ஊற்றி அலசி நன்கு வடிகட்டி எடுத்து கொள்ளவும்.இதனை ஒரு தட்டில் போட்டு உதிர்த்துவிட்டு8 முதல்10 எடுத்து நிமிடங்கள் பிசைந்து கொண்டால் பனீர் மிருதுவாக இருக்கும் இந்த பனீரை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும்.ஒரு அகலமான பாத்திரத்தில் சர்க்கரை மற்றும் அவை மூழ்கும் அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விட்டு பின் மிதமான தீயில் வைத்து கொள்ளவும் அதனுடன் பனீர் உருண்டைகளை சேர்த்து கொள்ளவும்.இதனை10 நிமிடங்கள் மூடி மிதமான தீயில் வைத்து வேக விடவும் இப்போது பனீர் நன்கு வெந்து பனீர் உருண்டைகள் இருமடங்காக பெரிதாக இருக்கும். இப்போது அடுப்பை அணைத்து விட்டால் ரசகுல்லா சுவைக்க தயார். இதனை ஆற வைத்து பின் பிரிட்ஜில் வைத்து குளிர்ந்த ரசகுல்லா வாகும் பரிமாறலாம்.இந்த ரசகுல்லா பாலில் இருந்து பனீர் எடுத்து செய்வதால் உடலுக்கு மிகவும் நல்லது.பாலில் எலுமிச்சைச் சாற்றை ஊற்றி திரித்து விட்டிலேயே தயாரிக்கலாம்.
தேவையான பொருட்கள்-ஒன்றரை கப் தேங்காய் துருவல்,1/2 கப் சர்க்கரை,1கப் காய்ச்சிய பால்தேவையானஅளவு டெசிகெடட் கோகனட்,1ஸ்பூன் நெய்செய்முறை-அடுப்பில் பேனில் நெய் விட்டு தேங்காய் துருவல் சேர்த்து சிறிது நேரம் கிளறி விடவும்.பிறகு பால் சேர்த்து கலந்து விடவும். பால் சிறிதளவு வற்றி வரும் வரை இடை இடையே கலந்து விடவும்.பின்னர் சர்க்கரை சேர்த்து கலந்து ஈரப்பதம் இல்லாத நிலை வரும் வரை கிளறி விடவும்.சுத்தமாக ட்ரை ஆன பின்னர் லேசாக சூடு தணிந்த பின்னர் கையில் உருண்டை உருட்டி லட்டு போல பிடித்து வைக்கவும்.லேசாக டெசிகெடட் கோகனடில் பிரட்டி எடுத்து கொள்ளவும்.இத போல எல்லாவற்றையும் செய்து கொள்ளவும். சுவையான தேங்காய் லட்டு தயார்.
தேவையான பொருட்கள்-1 கப் ரவை,3 கப் பால்,1 கப் சர்க்கரை,30 பாதாம்,5 மேஜை கரண்டி நெய்செய்முறை -ஒரு கடாயில் ஒரு மேஜை கரண்டி நெய் ஊற்றி ரவையை சேர்த்து சிம்மில் ஐந்து நிமிடம் நன்றாக வறுக்கவும்.பின்பு மூன்று கப் பால் சேர்த்து சிறிது ரவை கெட்டியானவுடன் சர்க்கரையும் சேர்த்து நன்றாக கிளறவும்.கடைசியாக நெய் சேர்த்து நன்றாக கிளறி அடுப்பை அணைக்கவும்.ஒரு தட்டில் எண்ணெய் நன்றாக தடவி சமைத்த ரவையை அதில் சேர்த்து நன்றாக பரப்பிக் கொள்ளவும். பின் அதன் மீது நறுக்கிய பாதாமை தூவி விடவும்.15 நிமிடம் கழித்து பர்பி மாதிரி வெட்டி எடுத்து பரிமாறவும்.
தேவையான பொருட்கள் -இரண்டரை கப் மைதா ,1ஸ்பூன் பேக்கிங் பவுடர்,1/2கப் நெய்,2 கப் சர்க்கரை,1/2ஸ்பூன் ஏலக்காய் தூள்,சிறிதளவு புட் கலர்,பொரிப்பதற்கு எண்ணெய்செய்முறை -முதலில் ஒரு பாத்திரத்தில் மைதா பேக்கிங் பவுடர் சேர்த்து கலந்து கொள்ளவும் அத்துடன் உருகிய நெய்யையும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்நெய் மாவுடன் கலந்தவுடன் கையில் பிடித்து பார்த்தால் நன்றாக பிடிக்க வரவேண்டும் அதுதான் பதம் அதனுடன் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து விரல்களால் பிசைய வேண்டும்.. அழுத்திப் பிசைய கூடாது அழுத்திப் பிசைந்தால் லேயர் லேயராக வராது... எல்லாம் ஒன்றாகக் கலந்தால் போதும் நன்றாக பிசைய வேண்டும் என்பதெல்லாம் இல்லை..பிசைந்த மாவை இரண்டு கைகளாலும் எடுத்து பிளந்து பார்த்தால் உள்ளே லேயர் லேயராக தெரியும் இதுதான் பக்குவம் அதிகமாக பிசைய வேண்டாம்... இதை 15 லிருந்து 20 நிமிடங்கள் வரை மூடி போட்டு மூடி வைக்கவும்.. 15 நிமிடம் ஆவதற்குள் நாம் சர்க்கரை பாகு காய்ச்சி அதை லேசாக ஆற வைக்கவும் பாதுஷாவை பொரித்து லேசான சூட்டில் இருக்கும்போது சர்க்கரை பாகில் சேர்த்தால் நன்றாக இருக்கும்.. பாகு அதிக சூடாக இருக்கக் கூடாது..ஒரு பாத்திரத்தில் சர்க்கரை ஒரு கப் தண்ணீர் சேர்த்து அரை கம்பி பதத்திற்கு பாகு காய்ச்சவும் அரைப் பதம் தெரியவில்லை என்றால் கரண்டியில் சர்க்கரைப் பாகை தூக்கி ஊற்றினால் கடைசி சொட்டு நன்றாக ஜவ்வு மாதிரி கீழே விழும் அதுதான் பக்குவம்...ஏலக்காய் தூளை சேர்க்கவும்.. நான் இதில் கேசர் கலர் சேர்த்து உள்ளேன்.. இது குங்குமப்பூ சேர்த்தது போல் இருக்கும் உங்களிடம் குங்குமப்பூ இருந்தால் நீங்கள் இந்த கலருக்கு பதிலாக அதை சேர்த்துக் கொள்ளலாம்..இப்போது பாதுஷாவை கையில் எடுத்து லேசாக வட்டமாக உருட்டி வடை போல் தட்டி நடுவில் ஒரு ஓட்டை போட வேண்டும்.. எண்ணெய் எப்படி காய வேண்டும் என்றால் பாதுஷாவை அதில் போட்டால் 1,2 பப்பிள்ஸ் தான் மேலே வரவேண்டும் அதிகமாக எண்ணெய் காய்ந்து இருக்க கூடாது..இருபக்கமும் பொன்னிறமாக வெந்தவுடன் சர்க்கரை பாகில் சேர்த்து இரண்டு மூன்று நிமிடங்கள் ஊற வைத்தால் போதுமானது.. அதற்கு மேல் ஊற வைத்தால் குலோப்ஜாமுன் மாதிரி ஆகிவிடும்..விருப்பப்பட்டால் மேலை பிஸ்தாவும் சில்வர் லீப்பும் வைத்து அலங்கரிக்கலாம்.. இப்போது சுவையான இனிப்பான பாதுஷா தயார்...
தேவையான பொருட்கள் :பிஸ்கட் பாக்கெட் - 2பால் - 1/2 லிட்டர்நெய் - 150 கிராம்முந்திரி - 100 கிராம்செய்முறை :முதலில் மில்க் பிஸ்கட்களை வாங்கி அதனை சிறு துண்டுகளாக உடைத்து வைத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு சாஸ் பான் வைத்து அதில் பால் ஊற்றி, 1 க்ளாஸ் தண்ணீர் ஊற்றி கெட்டியாக மாறும் வரை காய்ச்சிக் கொள்ள வேண்டும். அடுத்தாக அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் நெய் சேர்த்து உருகிய பின்னர் பொடித்து வைத்துள்ள முந்திரியை சேர்க்க வேண்டும்.முந்திரி நன்கு சிவந்து பொன்னிறமாக மாறும் வரை வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.இப்போது கடாயில் இருக்கும் நெய்யினை சிறிது எடுத்து தனியாகஒரு பௌலில் ஊற்றி வைத்துக் கொள்ள வேண்டும். இப்போது கடாயில் இருக்கும் நெய்யில் உடைத்து வைத்துள்ள பிஸ்கட் பீஸ்களை சேர்த்து வதக்கி விட வேண்டும்.பிஸ்கட் வதங்கிய பின் அதில் காய்த்து வைத்துள்ள பாலை ஊற்ற வேண்டும். பால் ஊற்றிய பிறகு, கடாயில் இருக்கும் கலவையை கைவிடாமல் தொடர்ந்து கிளறிக் கொண்டே இருத்தல் வேண்டும். கட்டிகள் தட்டாதவாறு கிளறிக் கொண்டே இருத்தல் வேண்டும்.கலவை அல்வா பதத்தில் வந்த பிறகு அதில் எடுத்து வைத்துள்ள நெய் மற்றும் வறுத்து வைத்துள்ள முந்திரி சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும். அவ்ளோதான் நெய்யின் கமகம மணத்தில் பிஸ்கட் அல்வா ரெடி!
தேவையான பொருட்கள்-திணைஅரிசி மாவு - 200 கிராம்,வெல்லம் - 200 கிராம்,ஏலக்காய்த் தூள் - அரை தேக்கரண்டி,சுக்குத்தூள் - 2 சிட்டிகை,முந்திரி, திராட்சை, பாதாம் பருப்பு - தலா 10 கிராம்,நெய் - 100 கிராம்.செய்முறை-திணைஅரிசி மாவுடன் வெல்லம், தண்ணீர் சேர்த்து, தோசை மாவு பதத்துக்குக் கரைத்துக்கொள்ளவும்.சட்டியில் சிறிது நெய்யை விட்டு சூடாக்கி, கரைத்து வைத்துள்ள மாவை, சிறிது சிறிதாக விட்டு, நன்றாகக் கிளறவும்.கட்டியாகாமல் பார்த்துக்கொள்ளவும்.இடைவிடாமல் சிறிது சிறிதாக நெய் சேர்க்கவும்.அல்வா, சட்டியில் ஒட்டாமல் வரும்போது, நெய்யில் வறுத்த முந்திரி, பாதாம், திராட்சை, சுக்குத் தூள் மற்றும் ஏலக்காய்த் தூள் தூவி இறக்கவும்.இப்போது சூப்பரான சத்தான திணைஅல்வா ரெடி.
தேவையானவை: நறுக்கிய அன்னாசிப்பழம்ஒரு கப். சர்க்கரை - ஒன்றரை கப், நெய் அரை கப், கலர் - கால் டீஸ்பூன், முந்திரி, பாதாம்பருப்பு - தேவையான அளவு.செய்முறை: அன்னாசிப்பழத்தை வேகவைத்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். அடிகனமான கடாயை சூடாக்கி, அதில் சர்க்கரையைக் கொட்டி ஒட்டும் பதம் வரும்போது, பழ விழுதைக் கொட்டி கிளறவும். அல்வா இறுகி வரும்போது நெய் விட்டு,கலர், முந்திரி, துருவிய பாதாம்பருப்பை சேர்த்து இறக்கவும்.கெட்டியாகவில்லை என்றால்,2 டீஸ்பூன் கார்ன்ஃப்ளார் மாவை கரைத்து விட்டு கிளறினால் அல்வா பதம் வந்துவிடும்.அன்னாசிப்பழ அல்வா ரெடி.
தேவையான பொருட்கள்:சுரைக்காய்- 1சர்க்கரை -500 கிராம்நெய் - 200 கிராம்ஏலக்காய் பொடி,முந்திரி, தண்ணீர் - தேவையான அளவு.செய்முறை:சுரைக்காயை சுத்தம் செய்து தோல், விதை நீக்கி, சிறு துண்டுகளாக்கி அரைக்கவும். வாணலியில் சர்க்கரையை, தண்ணீரில் கலந்து பாகு காய்ச்சவும். அதில் அரைத்த சுரைக்காயை சேர்க்கவும். நன்றாகவெந்ததும், நெய் சேர்த்து கிளறவும். அல்வா பதம் வந்ததும் வறுத்த முந்திரி, ஏலக்காய் பொடி துாவி இறக்கவும்.சுவை மிக்க, 'சுரைக்காய் அல்வா!' தயார். அனைத்து வயதினரும் விரும்பி உண்பர்.
தேவையான பொருட்கள்:பால் -1 லிட்டர்பப்பாளி பழம் - 1ஆரஞ்சு ஜூஸ் - 1 கப் சர்க்கரை - 500 கிராம் நெய் - 250 கிராம் முந்திரி,ஏலக்காய் துாள் - தேவையான அளவு செய்முறை:பப்பாளி பழத்தை தோல் நீக்கி, சிறு துண்டுகளாக நறுக்கி பாலில் வேக வைக்கவும். அதை விழுதாக அரைத்து,ஆரஞ்சு பழ ஜூஸ் சேர்க்கவும். கடாய் சூடானதும் நெய், சர்க்கரையுடன் அரைத்த விழுதை சேர்த்து கிளறவும். சுருண்டு வரும்போது முந்திரி, ஏலக்காய் துாள் போட்டு இறக்கவும். ஆறிய பின் துண்டுகளாக்கவும்.சுவை மிக்க,'பப்பாளி அல்வா!' தாயார். சத்துகள் நிறைந்தது. அனைத்து வயதினரும் விரும்பி உண்பர்.