அன்னாசிப்பழ அல்வா.
தேவையானவை:
நறுக்கிய அன்னாசிப்பழம்ஒரு கப்.
சர்க்கரை - ஒன்றரை கப்,
நெய் அரை கப்,
கலர் - கால் டீஸ்பூன்,
முந்திரி, பாதாம்பருப்பு - தேவையான அளவு.
செய்முறை:
அன்னாசிப்பழத்தை வேகவைத்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். அடிகனமான கடாயை சூடாக்கி, அதில் சர்க்கரையைக் கொட்டி ஒட்டும் பதம் வரும்போது, பழ விழுதைக் கொட்டி கிளறவும். அல்வா இறுகி வரும்போது நெய் விட்டு,கலர், முந்திரி, துருவிய பாதாம்பருப்பை சேர்த்து இறக்கவும்.
கெட்டியாகவில்லை என்றால்,2 டீஸ்பூன் கார்ன்ஃப்ளார் மாவை கரைத்து விட்டு கிளறினால் அல்வா பதம் வந்துவிடும்.அன்னாசிப்பழ அல்வா ரெடி.
0
Leave a Reply