25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு சஞ்சீவி மலையில் படி பூஜை விழா. >> ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர் தேக்கம் நிரம்பி, 2-வது குடிநீர் தேக்கத்துக்கும் தண்ணீரை சேமித்து வைக்கவும் நகராட்சி தலைவர் பவித்ரா ஷியாம், ஆணையாளர் நாகராஜன் உத்தரவு. பொதுமக்கள் மகிழ்ச்சி. >> பாரம்பரிய கொத்தலு திருவிழா, ராஜூக்கள் சமூகம் சார்பில்ராஜபாளையத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டது. >> ராஜபாளையம் சர்வசமுத்திர அக்ரஹாரம் தெரு சந்தான வேணுகோபால சுவாமி கோயிலில் மகாதேவ அஷ்டமி. >> விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஒன்றியத்திற்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 10 நாட்கள் தொழில் முனைவோர் பயிற்சி முகாம். >> ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா. >> நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >>


சமையல்

Nov 08, 2025

கற்பூரவல்லி துவையல் .

தேவையான பொருட்கள்:கற்பூரவல்லி இலை -10,பச்சை மிளகாய் -3,சின்ன வெங்காயம்- 20,எண்ணெய்,உளுந்தம் பருப்பு,தேங்காய் துருவல்,பெருங்காயத்துாள்- சிறிதளவு, கொத்தமல்லி தழை,பூண்டு, புளி,உப்பு, தண்ணீர்- தேவையான அளவு,செய்முறை:வாணலியில் எண்ணெய் சூடானதும் உளுந்தம் பருப்பு, துண்டாக்கிய பச்சை மிளகாய், நறுக்கிய வெங்காயம், பூண்டு, பெருங்காயத்துாள், கற்பூரவல்லி இலை, கொத்தமல்லி தழை, தேங்காய் துருவல், புளி, உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். ஆறிய பின், தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.சூப்பரான, 'கற்பூரவல்லி துவையல்!' தயார். சூடான சாதத்தில் நெய்யுடன் சேர்த்து சாப்பிட அபாரமாக இருக்கும். சளித் தொல்லை நீங்கும்.

Nov 08, 2025

கறிவேப்பிலை லட்டு.

தேவையான பொருட்கள்:உலர்ந்தகறிவேப்பிலை- 2 கப்,பொரிகடலை- 1 கப்,பாதாம் பருப்பு -15,பேரீச்சம்பழம்- 15,நாட்டு சர்க்கரை- 50 கிராம்,ஏலக்காய், நெய் தேவையான அளவு.செய்முறை:பொரிகடலை, பாதாம் பருப்பு, கறிவேப்பிலையை நன்கு வறுக்கவும்.அத்துடன் விதை நீக்கிய பேரீச்சம்பழத்தை சேர்த்து வதக்கவும். ஆறியதும் அரைத்து, ஏலக்காய் பொடி, நாட்டு சர்க்கரை, நெய் கலந்து உருண்டைகளாக பிடிக்கவும்.சுவை மிக்க, 'கறிவேப்பிலை லட்டு!' தயார். 

Nov 08, 2025

தேன் மிட்டாய்.

தேவையான பொருட்கள்:உளுந்தம் பருப்பு - 2 கப்,மைதா மாவு - 0.5 கி,அரிசி மாவு - 0.5 கி,சர்க்கரை - 1.5 கி,புட் கலர் - சிறிதளவு,எண்ணெய்,தண்ணீர்- தேவையான அளவு.செய்முறை:உளுந்தம் பருப்பை தண்ணீரில் ஊற வைத்து அரைக்கவும். அதில் மைதா, அரிசி மாவுகளை கலந்து, சிறு உருண்டைகளாக பிடித்து, கொதிக்கும் எண்ணெயில் பொரித்து எடுக்கவும். சர்க்கரையுடன் தண்ணீர் கலந்து கொதிக்க வைத்து பாகாக்கி, பொரித்த உருண்டைகளை அதில் போடவும். நன்றாக ஊறிய பின் பிரித்தெடுக்கவும்.சுவை மிக்க,'தேன் மிட்டாய்!' தயார். அனைத்து வயதினரும் விரும்பி உண்பர்.

Nov 08, 2025

சத்து மாவு.

தேவையான பொருட்கள்:கேழ்வரகு - ½ கிலோ, கம்பு - ½கிலோ, சம்பா கோதுமை - ½ கிலோ, பாசிப்பயறு -½ கிலோ, நிலக்கடலை - 1/4கிலோ, சிவப்பரிசி-¼ கிலோ, சோளம் -¼கிலோ, குதிரைவாலி - ¾ கிலோ, சாமை – 1/4கிலோ, வரகு – 1/4கிலோ, கொள்ளு – 1/4 கிலோ, கருப்பு உளுந்து -½ கிலோ, பொட்டுக்கடலை - ¼ கிலோ, சிவப்புக் கொண்டைக்கடலை - 100 கிராம், நாட்டுச் சோளம் - 100 கிராம், பாதாம் -100 கிராம்.பிஸ்தா பருப்பு-100 கிராம், முந்திரி பருப்பு - 100. கிராம், சுக்கு - 50 கிராம், ஏலக்காய் - 10 கிராம்.செய்முறை:மேலே உள்ள பொருட்களை நன்கு சுத்தம் செய்து வெயிலில் காய வைத்துக் கொள்ளுங்கள். பின்பு ஒவ்வொன்றையும் தனித்தனியாக வறுத்து, அதன் பிறகு ஒன்றாகச் சேர்த்து மெஷினில் அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும்.உங்களுக்கு எப்போது தேவைப்படுகிறதோ அப்போது இந்த மாவினைச் சத்துமாவு உருண்டையாகவோ, கஞ்சியாகவோ, புட்டுப் போலவோ, மால்ட்டாகவோ, தோசையாகவோ, பேன் கேக்காகவோ வகை வகையாகத் தயாரித்து உட்கொள்ளலாம். குறிப்பாக,வளரும் குழந்தைகள், பெண்கள் மற்றும் பலவீனமான முதியோர்களுக்கு இந்தச் சத்துமாவு நல்ல ஊட்டச்சத்து நிறைந்த ஓர் அற்புத உணவு.

Nov 08, 2025

முருங்கைக்கீரைப் பொடி.

தேவையான பொருட்கள்:முருங்கைக்கீரை - 1 கப் (நிழலில் உலர்த்தியது அல்லது லேசாக வறுத்தது),உளுத்தம் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்,கடலைப்பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்,காய்ந்த மிளகாய் - 5-7 (உங்கள் காரத்திற்கேற்ப),உப்பு - தேவையான அளவு,சீரகம் - 1 டீஸ்பூன்,பூண்டு - 2-3 பற்கள்,பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை. செய்முறை:முருங்கைக்கீரையை நன்கு கழுவி, நிழலில் உலர்த்தவும் அல்லது வெறும் கடாயில் லேசாக வறுத்து எடுக்கவும். கீரை காய்ந்து, மொறுமொறுப்பாக இருக்க வேண்டும். அதே கடாயில், உளுத்தம் பருப்பு மற்றும் கடலைப்பருப்பை பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.பின்னர், மிளகாய், சீரகம், பூண்டு, பெருங்காயம் மற்றும் உப்பு சேர்த்து வறுக்கவும்.வறுத்த பொருட்களை ஒரு கலவை பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு, உலர்ந்த முருங்கைக்கீரையை சேர்த்து நன்கு ஆற விடவும்.முழுவதுமாக ஆறியதும், மிக்சியில் போட்டு மென்மையான பொடியாக அரைக்கவும். இந்த சுவையான மற்றும் ஆரோக்கியமான முருங்கைக்கீரை பொடியை இட்லி, தோசை, மற்றும் சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம். 

Nov 08, 2025

மொறு மொறு காளான் பக்கோடா.

தேவையான பொருட்கள்:காளான் - 200 கி,கடலை மாவு - 1 கப்,அரிசி மாவு - 1/4 கப்,வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது),பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது),இஞ்சி - சிறிது,மிளகாய் தூள் - 2 ஸ்பூன் (விருப்பப்பட்டால்),உப்பு - தேவையான அளவு,எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு ,செய்முறை:காளானை சுத்தம் செய்து சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.ஒரு பெரிய பாத்திரத்தில் நறுக்கிய காளான், வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி மற்றும் பிற மசாலாப் பொருட்களை சேர்க்கவும்.அதனுடன் கடலை மாவு மற்றும் அரிசி மாவைச் சேர்க்கவும்.சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து, கெட்டியான பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். மாவு மிகவும் நீர்த்துப் போகாமல் பார்த்துக்கொள்ளவும்.ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.சூடான எண்ணெயில் பிசைந்த காளான் கலவையை உதிர்த்துப் போடவும்.பக்கோடா பொன்னிறமாகவும், மொறுமொறுப்பாகவும் மாறும் வரை பொரித்தெடுக்கவும்.சுவையான காளான் பக்கோடாவை சூடாகப் பரிமாறவும்.

Nov 01, 2025

கவுனி அரிசி பொங்கல்.

தேவையான பொருட்கள் - 1கப்கருப்பு கவுனி அரிசி, மூன்றரை  கப் தண்ணீர்,1கப்வெல்லம்,1ஸ்பூன் ஏலக்காய் தூள்,8முந்திரிப் பருப்பு,3டேபிள்ஸ்பூன்நெய்,கால் கப்தேங்காய்த்துருவல்செய்முறை -  கவுனி அரிசியை சமைப்பதற்கு முன்பாக அதிக நேரம் அதாவது6 மணி முதல்8 மணி வரை ஊற வைக்கவும். பிறகு ஊறிய அரிசியை குக்கரில் ஒன்றுக்கு மூன்று அல்லது மூன்றரை தண்ணீர் விட்டு 6 விசில் விடவும்.குக்கரை திறந்து அரிசியை ஒரு விரலால் எடுத்து நசுக்கி பார்த்தால் வெந்தது தெரியும். அரிசியை பார்க்கவே வேகாதது போல் தான் இருக்கும். ஆனால் நசுக்கி பார்த்தால் உள்ளே நன்கு வெந்திருக்கும். இதுவே சரியான பக்குவம்.ஒரு பாத்திரத்தில் வெல்லத்தை எடுத்து கொண்டு அரைக் கப் தண்ணீர் ஊற்றி வெல்லம் கரையும் அளவுக்கு சூடு பண்ணவும்.பிறகு இதனை பொங்கல் செய்யும் பாத்திரத்தில் வடிகட்டிக் கொள்ளவும். ஏனெனில் அடியில் மண், தூசி ஏதேனும் இருக்க வாய்ப்பு உள்ளது.பிறகு இந்த வெல்லக்கரைசலுடன் வேக வைத்த கவுனி அரிசியை சேர்த்து அடுப்பை அதிக தணலில் வைக்கவும்.பிறகு ஒரு கொதி வந்ததும் அடுப்பை மிதமான தீயில் வைத்து துருவிய தேங்காய் துருவல் மற்றும் ஏலக்காய் தூள் சேர்க்கவும்.பிறகு இதனை நன்கு கிளறி மற்றொரு சிறிய கடாயில் நெய் விட்டு முந்திரிப்பருப்பை மிதமான தீயில் பொன்னிறமாக வறுத்து பொங்கலில் சேர்க்கவும்.மிகவும் சத்தான சுவையான செட்டிநாட்டு கருப்புகவுனி அரிசி பொங்கல் ரெடி.

Nov 01, 2025

பழம் பொரி.

தேவையான பொருட்கள்:நேந்திரம் பழம்- 3,மைதா மாவு - 1 கப்,சர்க்கரை- 1 கப்,அரிசி மாவு - 0.25 கப், மஞ்சள் துாள். சமையல் சோடா, ஏலக்காய் துாள்- சிறிதளவு,தேங்காய் எண்ணெய், உப்பு, தண்ணீர் - தேவையான அளவு.செய்முறை:நேந்திரம்பழத்தைத் தோல் நீக்கி, நீளவாக்கில் நறுக்கவும். மைதா மாவு, அரிசி மாவு, சர்க்கரை, மஞ்சள் துாள். ஏலக்காய்த் துாள், உப்பு, சமையல் சோடா மற்றும் தண்ணீர் ஊற்றி இட்லி மாவு பதத்திற்கு கரைக்கவும். வாணலியில் எண்ணெய் சூடானதும், பழத்துண்டுகளை மாவில் தோய்த்து பொரித்தெடுக்கவும்.சுவைமிக்க, 'பழம் பொரி!' தயார். அனைத்து வயதினரும் விரும்பி உண்பர்.

Nov 01, 2025

உளுந்து போண்டா .

தேவையான பொருட்கள்:உளுத்தம்பருப்பு - 2 கோப்பை,பச்சைமிளகாய் – 4,மிளகு - 1 தேக்கரண்டி,தேங்காய் - இரண்டு பத்தை,கறிவேப்பிலை - ஒரு கொத்து,ஆப்பசோடா - ஒரு சிட்டிகை,பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை,எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு,உப்பு - தேவையான அளவுசெய்முறை:உளுத்தம்பருப்பை கழுவி சுடுதண்ணீரில் போட்டு ஒரு மணி நேரம் ஊறவைக்கவும்.பச்சைமிளகாய், கறிவேப்பிலை, தேங்காய் ஆகியவற்றை பொடியாக நறுக்கி வைக்கவும்.ஊறிய பருப்பை நீரை வடித்து விட்டு உப்பை சேர்த்து கரகரப்பாக அரைத்து பெருங்காயம், ஆப்பசோடாவைச் சேர்த்து நன்கு கலக்கவும்.இதனுடன் குருமிளகு, மற்றும் பொடியாக நறுக்கிய பொருட்களைப் போட்டு நன்கு கலக்கி வைக்கவும்.பிறகு சட்டியில் எண்ணெயை ஊற்றி நன்கு காயவைத்து கரண்டியின் உதவியால் மாவு கலவையிலிருந்து சிறிது சிறிதாக எடுத்து சூடான எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்து பரிமாறவும்.உளுந்து போண்டா ரெடி

Nov 01, 2025

வெஜிடபிள் குருமா .

தேவையான பொருட்கள்:காய்கறிகள் (கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, பட்டாணி) - 1 கப்,வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது),தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது),இஞ்சி-பூண்டு விழுது - 1 தேக்கரண்டி,பச்சை மிளகாய் - 2 (கீறியது),தேங்காய் - ½ கப் (துருவியது),முந்திரி - 5-6 (விரும்பினால்),கசகசா - 1 தேக்கரண்டி,சோம்பு - 1 தேக்கரண்டி,பட்டை, கிராம்பு, ஏலக்காய் - சிறிதளவு,மஞ்சள் தூள் - ¼ தேக்கரண்டி,மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி (காரத்திற்கேற்ப),மல்லித் தூள் - 1 தேக்கரண்டி,கரம் மசாலா தூள் - ½ தேக்கரண்டி,உப்பு - தேவையான அளவு,எண்ணெய் - தேவையான அளவு,மல்லித்தழை - அலங்கரிக்க.செய்முறை:தேங்காய் விழுது தயாரித்தல்: ஒரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி, தேங்காய், முந்திரி, கசகசா, சோம்பு, பட்டை, கிராம்பு, ஏலக்காய் ஆகியவற்றை சேர்த்து வறுத்து ஆற வைக்கவும். ஆறியதும், சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு மென்மையான விழுதாக அரைத்துக் கொள்ளவும்.குருமா செய்தல்: அதே கடாயில் எண்ணெய் ஊற்றி, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.பின்னர், இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.தக்காளியை சேர்த்து நன்கு மசியும் வரை வதக்கவும்.மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.கட் செய்த காய்கறிகளை சேர்த்து, உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.காய்கறிகள் வெந்ததும், அரைத்து வைத்த தேங்காய் விழுதை சேர்த்து நன்கு கலக்கவும்.அடுத்து, கரம் மசாலா தூள் சேர்த்து, 2-3 நிமிடங்கள் மிதமான தீயில் கொதிக்க விடவும்.மல்லித்தழை தூவி இறக்கவும்.சுவையான வெஜிடபிள் குருமா சப்பாத்தி, பூரி, தோசை, இட்லி போன்றவற்றுடன் பரிமாறலாம். 

1 2 3 4 5 6 7 8 9 10 ... 50 51

AD's



More News