தேவையானவை: தோல் சீவி நறுக்கிய ஆப்பிள் ஒரு கப் சர்க்கரை - ஒரு கப், நெய் - அரை கப், பால் கால் கப், கலர் - சிறிதளவு. முந்திரி, திராட்சை தேவையான அளவு.செய்முறை: ஆப்பிளில் பால் விட்டுவேக வைத்து நன்றாக மசித்துக் கொள்ளவும். கடாயை சூடாக்கி, அதில் சர்க்கரையை போட்டு இளம்பாகு காய்ச்சி, அரைத்த ஆப்பிளை சேர்க்கவும். கலவை இறுகி வந்ததும் நெய் விட்டு, கலர், முந்திரி. திராட்சை சேர்த்து இறக்கவும்.விருப்பப்பட்டால்2 டேபிள்ஸ்பூன் பச்சரிசி மாவு, ஒரு டேபிள்ஸ்பூன் கார்ன்ஃப்ளார் கலந்து கட்டியில்லாமல் கரைத்து ஊற்றிக் கிளறவும். அல்வா சீக்கிரத்தில் இறுகிவிடும்.சுவையான ஆப்பிள் அல்வா ரெடி.
தேவையான பொருட்கள்-1 கப்பொரி 1/2 தக்காளி பொடியாக வெட்டியது1/2 வெங்காயம் பொடியாக வெட்டியது2டீஸ்பூன்எலுமிச்சை சாறுமிளகு தூள் - சிறிதளவு.செய்முறை -பொரியில் வெங்காயம் மற்றும் தக்காளி சேர்த்து கொள்ளவும்.பின்னர் மிளகு தூள் மற்றும் லெமன் சாறு கலந்து பரிமாறவும்.
தேவையான பொருட்கள் :-1 கப்பொரி1 டேபிள்ஸ்பூன்வெங்காயம்(பொடியாக வெட்டியது)மாங்காய்-1 துண்டு பொடியாக வெட்டியது)வேகவைத்த தோலுரித்த வேர்க்கடலை-1டேபிள் ஸ்பூன்1டேபிள்ஸ்பூன்மிக்சர்1/4 டீஸ்பூன் மிளகாய் தூள்1/2 முடி எலுமிச்சை சாறுகேரட்-1துருவியது.செய்முறை -ஒரு பௌலில் பொரி, வெங்காயம், மாங்காய், கேரட், வேர்க்கடலை, மிளகாய் தூள் போட்டு கிளறவும். எலுமிச்சை சாறு விட்டு பரிமாறவும்.
தேவையான பொருட்கள்-1 படிபொரி2 கட்டி வெல்லம்ஏலக்காய்2 ஸ்பூன் எள்4 ஸ்பூன் தேங்காய் பல்செய்முறை முதலில் எள்ளை வறுக்கவும். அடுத்து தேங்காய் பல் போட்டு வதக்கவும். அடுத்து பொடித்த வெல்லத்துடன் சிறிது தண்ணீர் ஊற்றி வெல்லம், கரைந்தவுடன் வடிகட்டவும். பிறகு பாகு காய்ச்சவும். பாகு பதம் வர வேண்டும், அடுத்து பாகில் பொரி, எள், தேங்காய், ஏலக்காய் போட்டு நன்கு கிளறவும்.பிறகு மிதமான தீயில் வைத்தே உருண்டை பிடிக்கவும். குழந்தைகளுக்கு ஏற்ற சத்தான ஸ்னாக்ஸ் ரெடி.
தேவையான பொருட்கள்- 2 கப்பொரி1/2 கப் ரவை 1 கப்தயிர்1/2 கப்கோதுமை மாவுதேவையான அளவுஉப்புதேவையான அளவு எண்ணெய்செய்முறை -பொரியை தண்ணீரில் அலசவும். ரவையை தண்ணீரில் ஊற வைக்கவும்.மிக்சியில் பொரி ,ஊறிய ரவை, கோதுமை மாவு சேர்க்கவும்.பின்னர் அதில் தயிர் உப்பு சேர்த்து நைஸாக அரைக்கவும்.அரைத்த மாவை தோசைகளாக சுட்டெடுக்கவும்.இப்போது சுவையான பொரி தோசை ரெடி.
தேவையான பொருட்கள்-2 கப்பொரி1/2 டீஸ்பூன்சோம்பு1/2 கப் உடைத்த கடலைமாவு2 காய்ந்தமிளகாய்1வேக வைத்த உருளைக்கிழங்கு1கேரட்1டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது1/2 கப்அரிசி மாவு1/4 டீஸ்பூன்மஞ்சள் தூள்1/2 டீஸ்பூன்மிளகாய் தூள்சிறிதளவுகொத்தமல்லிதேவையான அளவுஉப்புதேவையான அளவு எண்ணெய்செய்முறை -பொரியை தண்ணீரில் அலசி ஒரு கிண்ணத்தில் போடவும்.மிக்சியில் சோம்பு உடைத்த கடலை காய்ந்த மிளகாய் போட்டு தூள் செய்யவும்.பொரியில் வேக வைத்து மதித்த உருளை கிழங்கு ,துருவிய கேரட், இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும். பின்னர் அதில் சோம்பு பொடி, அரிசி மாவு ,மஞ்சள் தூள் சேர்க்கவும்.மிளகாய் தூள் ,உப்பு, கொத்தமல்லி, சேர்த்து நன்றாக பிசைந்து தட்டவும். தட்டிய மாவை பிரட் தூளில் புரட்டி எடுக்கவும். பின்னர் அதை தோசை கல்லில் எண்ணெய் ஊற்றி சுட்டெடுக்கவும்.இப்போது சுவையான பொரி கட்லெட் தயார்.
தேவையான பொருட்கள்:-பொரி - 2 கப்பொடித்த வெல்லம் - 1/2 கப்நெய் - தேவையான அளவுமுந்திரி - 2 டேபிள் ஸ்பூன்செய்முறை:-முதலில் பொரியை நீரில் போட்டு 5-10 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின் பொடித்த வெல்லத்தை சிறிது நீர் ஊற்றி கரைத்து, வடிகட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.அடுத்து பொரியில் உள்ள நீரை வடிகட்டி அதிகப்படியான நீரை பிழிந்துவிட்டு, மிக்சர் ஜாரில் பொரியைப் போட்டு, நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது நெய் ஊற்றி சூடானதும், முந்திரியைப் போட்டு பொன்னிறமாக வறுக்க வேண்டும்.பிறகு அதில் கரைத்த வெல்லத்தை ஊற்றி, அதைத் தொடர்ந்து அரைத்த பொரியையும் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.ஒரு கட்டத்தில் கலவையானது சற்று கெட்டியாகி, அல்வா பதத்திற்கு வர ஆரம்பிக்கும். அப்போது வேண்டுமானால் சிறிது நெய் ஊற்றி, ஓரளவு கெட்டியாகும் வரை நன்கு கிளறி இறக்கி, ஒரு கிண்ணத்தில் போட்டால், சுவையான பொரி அல்வா தயார்.
தேவையான பொருட்கள்-பிரண்டை- ஒரு கப், வத்தல் -6,மூன்று பல்பூண்டு, ஒரு சிறிய நெல்லிக்காய் அளவு புளி,குழம்பு கடலை பருப்பு - ஒரு டீஸ்பூன்உளுந்தம் பருப்பு - ஒரு டீஸ்பூன்,இஞ்சி - ஒரு சிறிய துண்டு,தேங்காய் துருவல்-அரைகப்செய்முறை- முதலில் பிரண்டையை சிறு சிறு துண்டுகளாக, நார் எடுத்து உரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடலைப்பருப்பு, உளுந்தம் பருப்பை பொன்னிறமாக வறுக்கவும். பின்னர் வத்தல் சேர்த்து வறுக்கவும்.பின்னர் கருவேப்பிலை, இஞ்சி,பூண்டு, தேங்காய் துருவல் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். அனைத்தையும் நன்கு5 நிமிடம் வதக்க வேண்டும். பின் பிரண்டையை நல்லெண்ணெய் ஊற்றி, நிறம் மாறும் வரை ஐந்து நிமிடம் வதக்க வேண்டும்.பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு உப்பு சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும். சுவையான பிரண்டைக்காய் சட்னி ரெடி.மருத்துவ குணம் நிறைந்த பிரண்டை சட்னி. நன்கு பசி எடுக்கும் .எலும்பு வலுப்படும்
தேவையான பொருட்கள் -மணத்தக்காளி கீரை -ஒரு கைப்பிடி,சின்ன வெங்காயம்-10,இஞ்சி- ஒரு சிறிய துண்டு,கடலைப்பருப்பு - ஒரு ஸ்பூன்,உளுத்தம் பருப்பு - ஒரு ஸ்பூன்,கொத்தமல்லி- ஒரு ஸ்பூன்,சீரகம்- கால் ஸ்பூன்,வரமிளகாய்-4,கருவேப்பிலை-சிறிதளவு,புளி-சிறிதளவு,தேங்காய் துருவல்-5 ஸ்பூன்,எண்ணெய் -இரண்டு டேபிள் ஸ்பூன்செய்முறை -கீரையை நன்கு அலசி வைத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடலை பருப்பு ,உளுத்தம் பருப்பு, கொத்தமல்லி, சீரகம் சேர்த்து வறுக்கவும் .பின்பு வரமிளகாய், கருவேப்பிலை சேர்த்து வறுத்த உடன் இஞ்சி ,வெங்காயம் சேர்த்து வதக்கவும்.பின்பு மணத்தக்காளி கீரையை அதனுடன் சேர்த்து ஐந்து நிமிடம் வதக்கி கொள்ளவும்.அதன் பின் தேங்காய் துருவல் சேர்த்து சிறிது நேரம் வதக்கி, உப்பு தேவையான அளவு சேர்த்து புளி சேர்த்து அரைத்து எடுக்கவும்.மணத்தக்காளி கீரை சட்னி ரெடி.
தேவையான பொருட்கள்:-வாழைப்பூ 1,தக்காளி -2,காய்ந்த மிளகாய் -5,சின்ன வெங்காயம்- 12,பூண்டு, எள்,நல்லெண்ணை,வெள்ளை உளுந்து - தேவையான அளவு,மோர், தண்ணீர்,கடுகு,கறிவேப்பிலை,கொத்தமல்லிதழை - சிறிதளவு.செய்முறை:-வாழைப்பூவை சுத்தம் செய்து மோர் கலந்த தண்ணீரில் கழுவி வேக வைக்கவும். காய்ந்த மிளகாய், உளுந்து, பூண்டு, எள்ளை வறுக்கவும். இவற்றுடன் வெந்த வாழைப்பூ, நறுக்கிய தக்காளி, உரித்த வெங்காயம் போட்டு அரைக்கவும். வாணலியில் எண்ணெய் சூடானதும் கடுகு, கறிவேப்பிலை தாளித்து, அரைத்த விழுதை கலக்கவும். எண்ணெய் பிரிந்ததும் கொத்தமல்லிதழை தூவி இறக்கவும்.சுவையான, 'வாழைப்பூ சட்னி' தயார். இட்லி, தோசை, சப்பாத்தி சாதத்துடன் பக்க உணவாக சாப்பிடலாம்.