தேவையான பொருட்கள் - கடலைப்பருப்பு 1/4 கப்,உளுத்தம் பருப்பு. 1/4 கப்,கொத்தமல்லி விதைகள் - 2 தே.கரண்டி,எள்ளு - 2தே.கரண்டி,மிளகு-1தே.கரண்டி,வெந்தயம்-1 தே.கரண்டி,கறிவேப்பிலை சிறிதளவு,காய்ந்த மிளகாய்-10-15,புளி - ஒரு எலுமிச்சங்காய் அளவு.செய்முறை -முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, கடலைப்பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பை எண்ணெய் சேர்க்காமல் பொன்நிறமாக வறுத்து தனியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.அதனையடுத்து கொத்தமல்லி விதை வெந்தயம், மிளகு, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை சேர்த்து இதையும் நன்றாக வறுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் பாத்திரத்தில் கறிவேப்பிலையை நன்றாக சூடாக்கி உலர வைக்க வேண்டும்.பின்னர் ஒரு பாத்திரத்தில் புளி கரைசலை சேர்த்து நன்றாக சூடு படுத்திக் கொள்ள வேண்டும். பின்பு இதில் சிறிதளவு உப்பு சேர்த்து, நன்றாக ஆறிய பின் அனைத்தையும் ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு சிறிது கொரகொரப்பாள பதத்தில் அரைத்துக்கொள்ள வேண்டும்.அதனுடன் கடுகு கடலைப்பருப்பு, கரு வேப்பிலை,பெருங்காயம் தாளித்து சேர்த்தால் சுவையான புளியோதரை பொடி தயார்.அதன் பின்னர் சாதம் வடித்து அதில் தேவையான உப்பு,நல்லெண்ணெய் கலந்து, தேவையான அளவு பொடியையும் போட்டு கலந்தால் கோவில் பாணியில் சுவையான புளியோதரை தயார்.
தேவையான பொருட்கள்:ரஸ்க் துண்டு - 6,பசும்பால்- 3 கப்,சர்க்கரை- 50 கிராம்,வெண்ணிலா எசன்ஸ் -சிறிதளவு.செய்முறை:பசும்பாலில் சர்க்கரை கலந்து, சுண்டக் காய்ச்சவும். ரஸ்க் துண்டுகளை பொடியாக்கி அதில் ஊறவைத்து கூழாக்கி ஆறவிடவும். பின், வெண்ணிலா எசன்ஸ் கலந்து, பிரீசரில் 1 மணி நேரம் வைக்கவும்.சுவை மிக்க, 'ரஸ்க் ஐஸ்கிரீம்!' தயார். சிறுவர், சிறுமியர் விரும்பி உண்பர்.
தேவையான பொருட்கள்-வாழைக்காய் -2; தேங்காய் துருவல் - கால் கப்; வரமிளகாய் - 5; புளி -தேவைக்கேற்ப; எண்ணெய் தேவையான அளவு சின்ன வெங்காயம் - 10; பூண்டு - 4 பற்கள்; சீரகம் - 1 டீஸ்பூன்; கறிவேப்பிலை -சிறிதளவு; உப்பு -தேவைக்கேற்பசெய்முறை -முதலில் வாழைக்காயின் தோலை நீக்கி நன்றாக வேகவைத்து வேண்டும்.அவற்றை சிறிய துண்டுகளாக நறுக்கிகொள்ளவும்.பின் கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வர மிளகாய், பூண்டு, நறுக்கிய சின்ன வெங்காயம், புளி, தேங்காய் துருவல் ஆகியவற்றை தனித்தனியே வறுத்து வைத்துகொள்ளவும். மிக்ஸி ஜாரில் வறுத்த அனைத்து பொருட்களை சேர்க்க வேண்டும்.அத்துடன் சீரகம், கறிவேப்பிலை சேர்த்து நன்றாக அரைக்க வேண்டும்.இறுதியாக, தேவையான அளவு உப்பு மற்றும் வேகவைத்த வாழைக்காய் துண்டுகளை சேர்த்து அரைக்க வேண்டும்.சுவையான வாழைக்காய் சட்னி ரெடி. இதை இட்லி, தோசையுடன் சேர்த்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும்.
தேவையான பொருட்கள்: இட்லி அரிசி - 1 கப்,கடலை பருப்பு – கால் கப்,துவரம் பருப்பு - கால் கப்,உளுந்து - 1 ஸ்பூன்,வர மிளகாய் – 5,சின்ன வெங்காயம் – 15,பூண்டு - 7 பல்,கறிவேப்பிலை – சிறிதளவு,கடுகு – அரை ஸ்பூன்,மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்,மிளகு - 1 ஸ்பூன்,சீரகம் - 1 ஸ்பூன்,எண்ணெய் - தேவையான அளவு,உப்பு - தேவையான அளவு ,செய்முறை: இட்லி அரிசி, கடலை பருப்பு, துவரம் பருப்பு, உளுந்து ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து குறைந்தது 1 மணி நேரம் ஊற வைக்கவும்.ஊற வைத்த அரிசி, பருப்புடன் வர மிளகாய், கறிவேப்பிலை, சின்ன வெங்காயம், பூண்டு, மஞ்சள் தூள், மிளகு, சீரகம், தேவையான அளவு உப்பு சேர்த்து, சிறிது தண்ணீர் விட்டு தோசை மாவு பதத்திற்கு அரைத்து எடுக்கவும்.அடுப்பில் தோசைக்கல்லை வைத்து சூடாக்கி, எண்ணெய் தடவவும்.அரைத்த மாவை எடுத்து தோசைக்கல்லில் பரப்பி, இருபுறமும் எண்ணெய் விட்டு பொன்னிறமாகும் வரை சுட்டு எடுக்கவும்.இதே முறையில் அனைத்து மாவையும் தோசைகளாக சுட்டு எடுக்கவும்.
தேவையான பொருட்கள்:முருங்கைப்பூ- 1 கப்துவரம் பருப்பு- 50 கிராம்பெரிய வெங்காயம் - 2காய்ந்த மிளகாய் -5பூண்டு, சீரகம். கடுகு. உப்புகறிவேப்பிலை - சிறிதளவு தண்ணீர், எண்ணெய்- தேவையான அளவு.செய்முறை:முருங்கை பூவை சுத்தம் செய்து நறுக்கவும். அதனுடன் வேக வைத்த துவரம் பருப்பு, பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், கிள்ளிய காய்ந்த மிளகாய், அரைத்த பூண்டு, சீரகம்,கடுகு, கறிவேப்பிலை, உப்பு சேர்த்து பிசைந்து வடையாக்கவும். வாணலியில் எண்ணெய் சூடானதும் வேகவைத்து எடுக்கவும்.சுவை மிக்க,'முருங்கைப்பூ வடை!' தயார். சத்துக்கள் நிறைந்தது. அனைத்து வயதினரும் விரும்பி சாப்பிடுவர்.
தேவையான பொருட்கள்:அன்னாசிபழத்துண்டு - 1 கப்பச்சரிசி - 1 கப் பாதாம், முந்திரி,நெய் - சிறிதளவுசர்க்கரை, தண்ணீர் - தேவையான அளவு.செய்முறை:அன்னாசி பழத்துண்டுகளை அரைத்து சாறு எடுக்கவும். பாதாம் பருப்பை நீரில் ஊற வைத்து, தோல் நீக்கி நன்றாக அரைக்கவும். பச்சரிசியை வறுத்து ரவை போல பொடியாக்கவும்.பாத்திரத்தில் தண்ணீர் கொதித்ததும், அரிசி ரவையை போட்டு கிளறவும். வெந்ததும், சர்க்கரை, நெய்யில் வறுத்த முந்திரி, பாதாம் விழுது, நெய், அன்னாசி பழச்சாறு கலந்து இறக்கவும்.புதுமையான, 'அன்னாசி பழ பாயசம்!' தயார். சுவை மிக்கது. அனைத்து வயதினரும் விரும்பி பருகுவர்.
தேவையானவை:நறுக்கிய பட்டன் காளான் - 200 கிராம், வறுத்து அரைக்க: கொத்தமல்லி - 1 டேபிள் ஸ்பூன், சீரகம் - ½டீஸ்பூன், சோம்பு-1 டீஸ்பூன், பிரியாணி இலை -1, மிளகு - 2 டேபிள் ஸ்பூன், வரமிளகாய் - 3, சிறு அன்னாசிப்பூ - 1, பட்டை -2, இலவங்கம், ஏலக்காய் - 4, தேங்காய்த் துருவல் - % கப், உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன், நெய் - 2 டேபிள் ஸ்பூன், முந்திரி நைசாக அரைத்தது-12. மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன், கறிவேப்பிலை -சிறிதளவு, பொடியாக கட் செய்த கொத்தமல்லித் தழை, பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் -½ கப், பொடியாக நறுக்கிய தக்காளி - 1. சோம்பு -½ தேக்கரண்டி, இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்.செய்முறை:அரைக்க வேண்டிய பொருட்களைத் தனித்தனியாக லேசாக வறுத்து ஆறவிட்டு நைசாகப் பொடி செய்து வைக்கவும். தேங்காயையும் வறுத்துப் பொடித்த மசாலாவுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்து வைக்கவும்.. ஒரு வாணலியில் எண்ணை விட்டுக் காய்ந்ததும் சோம்பு, வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். பின் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும். இதில் உப்பு, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து1 நிமிடம் வதக்கவும். பின் இதனுடன் தக்காளி சேர்த்து மசிய வதக்கவும். பின் காளான் சேர்க்கவும். சிறிது தண்ணீர் சேர்த்து மூடி10 நிமிடங்கள் வேக வைக்கவும்.வெந்ததும் அரைத்த மசாலா சேர்த்துத் தேவையான அளவுதண்ணீர் ஊற்றிவேகவைத்து முந்திரி விழுது சேர்த்துக் கலந்து2 நிமிடம் கொதிக்க விடவும். பின் நெய் சேர்த்து மூடி, சிம்மில் வைத்து2 நிமிடம் வேக வைக்கவும். கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும். இது சாதம், சப்பாத்தி, நாண் போன்றவற்றுக்கு சூப்பராக இருக்கும்!
தேவையானவை -கேரட் - 3. பெரிய வெங்காயம் 1, இஞ்சி - சிறு துண்டு, உப்பு தேவைக்கு, ஆலிவ் அயில் அல்லது வெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன், மிக்ஸட் ஹெர்ப்ஸ் (டிபார்ட்மெண்ட் ஸ்டோர்களின் கிடைக்கும்) - 1 டீஸ்பூன், மிளகுத்தூள் - 1 டீஸ்பூன், பாதாம் பருப்பு-3, புதினா - சிறதளவு.செய்முறை-வாணலியில் ஆலிவ் ஆயில் அல்லது வெண்ணெய் விட்டு, பொடியாக நறுக்கிய இஞ்சி சேர்த்து வாசம் வரும்வரை வதக்கவும். அத்துடன் நீளவாக்கில் நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.தண்ணீர் சேர்த்து குக்கரில் வைத்து வேகவிடவும். வெந்ததும் தண்ணீரை வடித்துவிட்டு ஆறவிடவும். ஆறியதும் மிக்ஸியில் போட்டு நைஸாக அரைத்து எடுக்கவும். வாணலியை அடுப்பில் வைத்து, அரைத்த கேரட் விழுதைப் போட்டு வதக்கவும். ஏற்கனவே வடித்து வைத்திருக்கும் தண்ணீரையும் சேர்த்துக் கலந்துவிட்டு, கொதிக்கவிடவும். கெட்டியாக வரும்போது மிக்ஸட் ஹெர்ப்ஸ், மிளகுத்தூள் சேர்த்துக் கலந்து, அடுப்பை அணைக்கவும். பாதாம் பருப்புகளைத் தோல் உரித்துப் பொடியாக நறுக்கி சூப்பில் போடவும். புதினா இலைகளைப் பொடியாக நறுக்கிச் சேர்க்கவும். மிக்ஸ்டட் ஹெர் ப்ஸ் கிடைக்காவிட்டால், மிளகு தூள் மட்டும் சேர்த்துக் கலக்கலாம்.
தேவையான பொருட்கள்கோதுமை மாவு – 400 கிராம் ,மிளகாய் வற்றல் பொடி – 3 ஸ்பூன்,பெருங்காயத்தூள் – ½ ஸ்பூன்,வெள்ளைப் பூண்டு – 5 பல் (பெரியது),கல் உப்பு – தேவையான அளவு,தண்ணீர் – தேவையான அளவு,எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு செய்முறைமுதலில் வெள்ளைப் பூண்டினைத் தோல் நீக்கி சுத்தம் செய்து கொள்ளவும்.பின் அதனை தண்ணீர் சேர்க்காமல் மிக்ஸியில் போட்டு மைய அரைத்துக் கொள்ளவும்.கல் உப்பில் தண்ணீர் சேர்த்துக் கரைத்துக் கொள்ளவும்.கோதுமை மாவுடன் மிளகாய் வற்றல் பொடி, பெருங்காயத்தூள், மையாக அரைத்த வெள்ளைப் பூண்டு விழுது, உப்பு கலந்த தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும். சப்பாத்திக்கு திரட்டுவது போல் மாவினை ஒரு சேர உருண்டையாக பிசையவும்.பின் அதிலிருந்து எலுமிச்சை அளவு மாவினை எடுத்து சப்பாத்தி போல் திரட்டவும்.சப்பாத்தியானது மிகவும் மெல்லியதாகவோ, கடினமானதாக இருக்கக் கூடாது.பின் சப்பாத்தியைக் கத்தியால் சதுரத் துண்டுகளாக வெட்டவும்.இவ்வாறு எல்லா மாவினையும் சதுரத் துண்டுகளாக்கவும்.பின் வாணலியில் எண்ணெயை ஊற்றி காய விடவும்.எண்ணெய் காய்ந்ததும் சதுர துண்டுகளாக்கிய மாவினை போடவும்.அவ்வப்போது சதுரத்துண்டுகளைக் கிளறி விடவும். சதுரத் துண்டுகள் வெந்து எண்ணெய் குமிழி அடங்கியதும் எடுத்து விடவும். சுவையான கோதுமை துக்கடா தயார். இத்துக்கடா ஆறியதும் காற்று புகாத டப்பாவில் போட்டு ஒரு மாதம் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.
தேவையான பொருட்கள்கடலை பருப்பு – 200 கிராம்,வெள்ளைப் பூண்டு – 3 பற்கள் (பெரியது),கறிவேப்பிலை – 2 கொத்து, மிளகாய் பொடி – 1 ஸ்பூன்,மிளகுப் பொடி – 1 ஸ்பூன், மஞ்சள் பொடி – 3/4 ஸ்பூன் ,பெருங்காயப் பொடி – 1/2 டீஸ்பூன்,உப்பு – தேவையான அளவு,கடலை எண்ணெய் – பொரித்து எடுக்கத் தேவையான அளவுசெய்முறைகடலை பருப்பினை அலசி சுமார் 8 மணி நேரம் தண்ணீரில் ஊற வெள்ளைப் பூண்டினை தோலுடன் சேர்த்து ஒன்றிரண்டாக இடித்துக் கொள்ளவும்.வைக்கவும்.கறிவேப்பிலையை அலசி உருவி நன்கு காய வைத்துக் கொள்ளவும்.ஊறிய கடலை பருப்பினை வடிதட்டில் கொட்டி தண்ணீரை வடித்துக் கொள்ளவும்.தண்ணீர் நன்கு வடிந்ததும் உலர்ந்த துணியில் பருப்பினைக் கொட்டி விடவும். பருப்பின் மேற்புறம் ஓரளவு காய்ந்ததும் எடுத்து தனியே வைத்துக் கொள்ளவும்.வாணலியில் கடலை எண்ணெய் ஊற்றி காய விடவும். எண்ணெய் காய்ந்ததும் எடுத்து வைத்துள்ள கடலைப் பருப்பில் சிறிதளவு போடவும். கடலைப் பருப்பு எண்ணெயில் அடியில் இருக்கும்.கடலைப் பருப்பு வெந்ததும் படத்தில் உள்ளபடி எண்ணெயின் மேற்பரப்புக்கு வந்து விடும்.எண்ணெய் குமிழி அடங்கி சலசலவென வெந்ததும் கடலை பருப்பினை வெளியே எடுத்து விடவும்.வெந்த கடலை பருப்பினை வெளியே எடுக்க வலைக் கரண்டியை உபயோகிக்கவும். அப்போதுதான் வெந்த கடலைப் பருப்பினை ஒரே சீரான நிறத்துடன் கருகாமல் எடுக்க முடியும்.இவ்வாறாக எல்லா கடலைப் பருப்பினையும் வேக வைத்து எண்ணெய் வடித்து எடுத்துக் கொள்ளவும்.தட்டி வைத்துள்ள வெள்ளைப் பூண்டினை சிறிதளவு எண்ணெயில் நன்கு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.கறிவேப்பிலையை எண்ணெயில் பொரித்து எடுத்துக் கொள்ளவும்.வாயகன்ற பாத்திரத்தில் வறுத்த கடலை பருப்பு, உப்பு, மஞ்சள் பொடி, மிளகாய் பொடி, வறுத்த வெள்ளைப் பூண்டு, கறிவேப்பிலை, மிளகுப் பொடி, பெருங்காயப் பொடி ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கலந்து விடவும்.சுவையான நெய் கடலை தயார்.கடலைப் பருப்பு நன்கு ஊறினால்தான் வறுத்த பின் மொறு மொறுவென்று இருக்கும்; இல்லையெனில் கடிக்கும் போது கடினமாக இருக்கும்.வெள்ளைப் பூண்டினை சேர்க்க விருப்பாதவர்கள் பூண்டினைத் தவிர்த்து விடலாம்.