.பாதுஷா .
தேவையான பொருட்கள் -
இரண்டரை கப் மைதா ,1ஸ்பூன் பேக்கிங் பவுடர்,1/2கப் நெய்,
2 கப் சர்க்கரை,1/2ஸ்பூன் ஏலக்காய் தூள்,சிறிதளவு புட் கலர்,
பொரிப்பதற்கு எண்ணெய்
செய்முறை -
முதலில் ஒரு பாத்திரத்தில் மைதா பேக்கிங் பவுடர் சேர்த்து கலந்து கொள்ளவும் அத்துடன் உருகிய நெய்யையும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்
நெய் மாவுடன் கலந்தவுடன் கையில் பிடித்து பார்த்தால் நன்றாக பிடிக்க வரவேண்டும் அதுதான் பதம் அதனுடன் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து விரல்களால் பிசைய வேண்டும்.. அழுத்திப் பிசைய கூடாது அழுத்திப் பிசைந்தால் லேயர் லேயராக வராது... எல்லாம் ஒன்றாகக் கலந்தால் போதும் நன்றாக பிசைய வேண்டும் என்பதெல்லாம் இல்லை..
பிசைந்த மாவை இரண்டு கைகளாலும் எடுத்து பிளந்து பார்த்தால் உள்ளே லேயர் லேயராக தெரியும் இதுதான் பக்குவம் அதிகமாக பிசைய வேண்டாம்... இதை 15 லிருந்து 20 நிமிடங்கள் வரை மூடி போட்டு மூடி வைக்கவும்.. 15 நிமிடம் ஆவதற்குள் நாம் சர்க்கரை பாகு காய்ச்சி அதை லேசாக ஆற வைக்கவும் பாதுஷாவை பொரித்து லேசான சூட்டில் இருக்கும்போது சர்க்கரை பாகில் சேர்த்தால் நன்றாக இருக்கும்.. பாகு அதிக சூடாக இருக்கக் கூடாது..
ஒரு பாத்திரத்தில் சர்க்கரை ஒரு கப் தண்ணீர் சேர்த்து அரை கம்பி பதத்திற்கு பாகு காய்ச்சவும் அரைப் பதம் தெரியவில்லை என்றால் கரண்டியில் சர்க்கரைப் பாகை தூக்கி ஊற்றினால் கடைசி சொட்டு நன்றாக ஜவ்வு மாதிரி கீழே விழும் அதுதான் பக்குவம்...
ஏலக்காய் தூளை சேர்க்கவும்.. நான் இதில் கேசர் கலர் சேர்த்து உள்ளேன்.. இது குங்குமப்பூ சேர்த்தது போல் இருக்கும் உங்களிடம் குங்குமப்பூ இருந்தால் நீங்கள் இந்த கலருக்கு பதிலாக அதை சேர்த்துக் கொள்ளலாம்..
இப்போது பாதுஷாவை கையில் எடுத்து லேசாக வட்டமாக உருட்டி வடை போல் தட்டி நடுவில் ஒரு ஓட்டை போட வேண்டும்.. எண்ணெய் எப்படி காய வேண்டும் என்றால் பாதுஷாவை அதில் போட்டால் 1,2 பப்பிள்ஸ் தான் மேலே வரவேண்டும் அதிகமாக எண்ணெய் காய்ந்து இருக்க கூடாது..
இருபக்கமும் பொன்னிறமாக வெந்தவுடன் சர்க்கரை பாகில் சேர்த்து இரண்டு மூன்று நிமிடங்கள் ஊற வைத்தால் போதுமானது.. அதற்கு மேல் ஊற வைத்தால் குலோப்ஜாமுன் மாதிரி ஆகிவிடும்..
விருப்பப்பட்டால் மேலை பிஸ்தாவும் சில்வர் லீப்பும் வைத்து அலங்கரிக்கலாம்.. இப்போது சுவையான இனிப்பான பாதுஷா தயார்...
0
Leave a Reply