பொதுவாக நாம் தர்பூசணி பழத்தை சாப்பிட்டு, அதன் வெள்ளை நிறத்தோல் பகுதியை குப்பையில் வீசி விடுவோம்.ஆனால், அந்தத் தோலில் தான், நம் சருமத்தை பளபளப்பாக்கும் அரிய சத்துக்கள் மறைந்துள்ளன. இதை எப்படி பயன்படுத்தலாம் என்று விரிவாகப் பார்ப்போம்:வெயிலில் அலைவதால் முகம், கை, கால்கள் கருத்து போய்விட்டதா? கவலை வேண்டாம். தர்பூசணி தோலின் உட்புற வெள்ளை பகுதியை அப்படியே எடுத்து, சருமத்தில் தேய்க்கவும். இது, சருமத்திற்கு நல்ல குளிர்ச்சியை தருவதோடு, வேனல் கட்டிகள் மற்றும் எரி குறைக்கும். எரிச்சலை உடனேமுகத்தில் அடிக்கடி பருக்கள் வருகிறதா? தர்பூசணி தோலில் உள்ள சத்துக்கள் சருமத்தில் இருக்கும் அதிகப்படியான எண்ணெய் பசையை கட்டுப்படுத்தும். அந்தத் தோலை அரைத்து முகத்தில் பூசி வர, பருக்கள் குறையும் மற்றும் பருக்களால் வரும் வீக்கமும் வடியும். உடல் துர் நாற்றத்தைப்போக்க... குளிக்கும் போது நீங்கள் குளிக்கும் தண்ணீரில் ஒரே ஒரு தக்காளிப் பழத்தின் சாற்றினை கலந்து பிறகு குளிக்கவும்...அவ்வளவு தான்... நாள் முழுக்க புத்துணர்வுடன் திகழ்வீர்கள்!
சருமத் துளைகளில் (Open Pores) அழுக்கு மற்றும் எண்ணெய் தேங்குவதால் பருக்கள், கரும்புள்ளிகள் மற்றும் முதிர்ந்த தோற்றம் ஏற்படுகின்றன. இதைக் கட்டுப்படுத்த செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை:செய்யக் கூடாதவை:வெந்நீர் தவிர்த்தல்: வெந்நீர் துளைகளை விரிவுபடுத்தி எண்ணெய் சுரப்பை அதிகரிக்கும்; எனவே குளிர்ந்த அல்லது வெதுவெதுப்பான நீரையே பயன்படுத்தவும்.அதிக மேக்கப் தவிர்த்தல்: கனமான மேக்கப் துளைகளை அடைத்துவிடும். லேசான, நான்-காமெடோஜெனிக் (Non-comedogenic) பொருட்களைத் தேர்ந்தெடுக்கவும்.அதிகம் தேய்க்கக் கூடாது: முகத்தை அடிக்கடி கழுவுவதோ அல்லது கடினமாகத் தேய்ப்பதோ சருமத்தை வறட்சியாக்கி, துளைகளை மேலும் பெரிதாக்கும்.செய்ய வேண்டியவை:தினசரி சுத்தம்: சருமத்திற்கு ஏற்ற கிளென்சர் (Cleanser) கொண்டு தினமும் இருமுறை முகத்தை மென்மையாகச் சுத்தம் செய்யவும்.எக்ஸ்ஃபோலியேஷன் (Exfoliation): வாரத்திற்கு 1-2 முறை மென்மையான ஸ்க்ரப் மூலம் இறந்த செல்களை நீக்குவது துளைகளின் அளவைக் குறைத்து அழுக்குகளை அகற்றும்.
கண்களின் கருவளையம் என்பது பலருக்கு ஒரு பெரிய பிரச்சனையாக இருக்கும் நிலையில் இதற்கு ஏராளமான மருந்துகளை பயன்படுத்தி வருகின்றனர். ஆனாலும் அது நிரந்தரமாக தீர்வு கொடுக்கவில்லை என்ற நிலையில் கருவளையம் ஏற்பட என்ன காரணம்? அதை போக்க என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்து தற்போது பார்ப்போம்கருவளையம் ஏற்பட சில காரணங்கள் இதோ: * போதுமான தூக்கமின்மை* தவறான உணவுப் பழக்கம்* ஒழுங்கற்ற வழக்கம்* இரவில் தாமதமாக திரைகளைப் பார்ப்பது* சோர்வு* மன அழுத்தம்* உலர் கண்கள்* கண் ஒவ்வாமை* நீரிழப்பு* உடலில் நீர் பற்றாக்குறை கண்களில் ஏற்படும் கருவளையங்களை நீக்க ரோஸ் வாட்டர் பெரிதும் உதவுகிறது. ரோஸ் வாட்டர் மற்றும் பால் ஆகியவற்றை சம அளவு எடுத்து பருத்தி பஞ்சின் உதவியுடன் கருவளையங்கள் உள்ள இடத்தில் தடவி 20 நிமிடம் கழித்து தண்ணீரில் முகத்தை கழுவினால் விரைவில் கருவளையம் மறைந்துவிடும். அதேபோல் தேன், பால் மற்றும் எலுமிச்சை ஆகியவை கண்களுக்குக் கீழே உள்ள கருவளையங்களில் தடவினாலும் விரைவில் கருவளையம் நீங்கிவிடும்.
அரை டம்ளர் தண்ணீர் கொதிக்க வைத்து, வெல்லம் சேர்த்து லேசாக கெட்டியாகும் போது ,எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து ,ஆற வைத்து பிறகு முகத்தில் தடவி, 20 நிமிடம் கழித்து துணியால் துடைத்தால், முகத்தில் உள்ள தேவையற்ற முடிகள், அழுக்கு நீங்கி முகம் பளிச்சென்று இருக்கும்.
செம்பருத்திப் பூ இதழ்களை ரோஸ் வாட்டரில் ஊறவைத்து கற்றாழை ஜெல் சேர்த்து அரைத்து முகத்தில் தடவி வர முகத்திற்கு இயற்கையான இளஞ்சிவப்பு நிறம் (Pinkish glow) .கொடுக்கும்.
1). உடனே முடியை வலுவாக சீவாதீர்கள் இதனால் முடியின் ரூட்ஸ் (வேர்) பலவீனமாகலாம். 2. ஈரமான முடியுடன் வெளியே போகாதீர்கள்: ஈரமான முடியுடன் வெளியே சென்றால் சளி மற்றும் தலைவலி வர வாய்ப்பு அதிகம். 3. இறுக்கமாக கட்டாதீர்கள். ஈரமான முடியை உடனே இறுக்கமாக கட்டினால் ஹேர் ஃபால் (முடி உதிர்வு)' அதிகரிக்கலாம். ' 4. ட்ரையர் அதிக வெப்பம். ட்ரையரை அதிக வெப்பத்துடன் பயன்படுத்தினால் முடி உலர்ந்து சேதமடையும். 5.இயற்கையாக உலர விடுங்கள்: தலையில் குளித்த பிறகு கொஞ்ச நேரம் இயற்கை காற்றில் (Natural air) முடியை உலர விடுவது சிறந்தது.
அம்மான் பச்சரிசிச் செடியை உடைத்து அதில் இருந்து வரும் பாலைத் தடவப் பரு நீங்கும். ஆவாரம்பூ பொடி, தயிர் இரண்டு தேக்கரண்டி, எலுமிச்சை 2 சொட்டு, கஸ்தூரி மஞ்சள் சிறிதளவு கலந்து தடவி, 15 நிமிடங்கள் ஊறவைத்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ முகப்பரு நீங்கி, முகம் பொலிவு பெறும்.அரிசித் திப்பிலியைப் பொடி செய்து. தேனில் கலந்து ஐந்து நாட்கள் தடவி வரமரு மறைந்து விடும். தோல் நீக்கிய பப்பாளிப் பழம்,அன்னாசிப் பழம் இரண்டையும் கலந்து மருஉள்ள இடத்தில் பூசலாம்.
15 நாட்களுக்கு தினமும் முகத்தை ஐஸ் தண்ணீரில் நனைப்பதன் மூலம் சருமத்தில் ரத்த ஓட்டம் அதிகரித்து முகம் பொலிவு பெரும் இவ்வாறு செய்வதால் முகத்தில் உள்ள துளைகள் சுருங்கி தேவையற்ற எண்ணெய் மற்றும் வீக்கத்தை குறைத்து இளமையான தோற்றத்தை பெறலாம் முகப்பரு மற்றும் கருவளையங்களை கட்டுப்படுத்தவும் இது உதவும் இருப்பினும் நேரடியாக ஐஸை சருமத்தில் பயன்படுத்தாமல் டவல் உள்ளே ஐஸ் கட்டியை வைத்து பயன்படுத்தவும்.
தக்காளிச் சாறுடன் தேன் கலந்து பூசுவது, கடலை மாவு மற்றும் மஞ்சள் தூள் கலந்த பேக் போடுவது போன்ற இயற்கை வழிகள் சிறந்தவை. பீட்ரூட், கேரட் போன்ற சத்தான உணவுகளை உட்கொள்வதும், பாதாம் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்வதும் சருமத்தை பளிச்சென்று மாற்றும். தினமும் பசும்பால் தடவி கழுவுவது முகம் பொலிவு பெற உதவும். காய்ச்சாத பச்சைப் பாலை முகத்தில் தடவி 30 நிமிடம் ஊறவைத்து, குளிர்ந்தநீரில் கழுவினால் முகம் மென்மையாகவும் பொலிவாகவும் மாறும்.தக்காளிச் சாறுடன் தேன் கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவ, முகம் பிரகாசமாகும்.கடலை மாவு, மஞ்சள் தூள் மற்றும் தயிர் கலந்து பேக் போட்டு காய்ந்த பின் கழுவவும்.வெதுவெதுப்பான பாதாம் எண்ணெயை முகத்தில் மசாஜ் செய்து வந்தால், ரத்த ஓட்டம் அதிகரித்து முகம் பொலிவுறும்.நன்கு பழுத்த வாழைப்பழத்தை முகத்தில் தடவி வந்தால், முகச் சுருக்கங்கள் நீங்கி இளமையான தோற்றம் கிடைக்கும்.வெயிலால் முகம் கருமையடைந்தால், முட்டை வெள்ளைக் கருவை முகத்தில் தடவி வர கருமை மறையும்.
சோற்றுக் கற்றாழைச் சாற்றை இரவு நேரத்தில் தேய்த்து பூசி ,காலையில் வெந்நீரில் கழுவ முகத்தில் உள்ள மங்கு மறைந்து, முகம் பொலிவு பெரும்.நாட்டு வாழைப்பழத்தை ஆலிவ் எண்ணெயுடன் பிசைந்து, முகத்தில் பூசவும். ஒரு மணி நேரம் கழித்து முகத்தை கழுவ, மங்கு மறைந்து முகம் பொலிவு பெறும்.