செஸ்: பிரக்ஞானந்தா போட்டி ‘டிரா’.
அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் ‘கிராண்ட் செஸ் டூர் பைனல்ஸ்’ தொடர் நடைபெற்று வருகிறது. அரையிறுதியின் முதல் சுற்றில் இந்தியாவின் ஆர். பிரக்ஞானந்தா, ஜெர்மனியின் வின்சன்ட் கீமருடன் மோதினார்.
இந்தப் போட்டியில் பிரக்ஞானந்தா கறுப்பு காய்களுடன் விளையாடினார். விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டம் 80-வது நகர்த்தலில் ‘டிரா’வில் முடிந்தது.
மற்றொரு அரையிறுதி முதல் சுற்றில் அமெரிக்காவின் வெஸ்லி சோ, பிரான்சின் அலிரெஸா ஃபிரோஜாவுடன் மோதினார். இந்த ஆட்டமும் 36-வது நகர்த்தலில் ‘டிரா’ ஆனது.
0
Leave a Reply