நாட்டு மருந்துக்கடைகளில் கிடைக்கும் அவுரி பொடி இயற்கையாகவே கருமை கலந்த ஊதா நிறத்தை தருவது. மருதாணி இலை சிவப்பு நிறத்தை தரும். முதலில் மருதாணி இலையினை அரைத்து தலையில் தடவி சிறிது நேர இடைவெளியில், அவுரி பொடியையும் தலையில் தடவி ஒரு மணிநேரம் கழித்து சுத்தம் செய்தால் வெள்ளை முடிகளில் கருமை நிறம் ஏறி இருக்கும். கரிசலாங்கண்ணியுடன் கறிவேப் பிலை மற்றும் நெல்லிக்காய் பொடி இணைத்து அரைத்து முடிகளின் வேர் கால்களில் படும்படி தடவி ஒரு மணி நேரம் கழித்து குளித்தால் வெள்ளை முடியின் வளர்ச்சி கட்டுக்குள் வரும்.
ஆமணக்கு எண்ணெய் தடவி வர புருவம் அடர்த்தியாக வளரும்.முளைக்கட்டிய கருப்பு கொண்டைக்கடலையை தினமும் ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வந்தால் தலைமுடி நன்கு வளரும்.தேங்காய்ப்பால் தடவி குளித்து வந்தால் நாளடைவில் செம்பட்டை முடி சரியாகும். பப்பாளிப் பழத்தை மசித்து பூசி வர முகப்பொலிவு அதிகரிக்கும்.
முடி கொட்டிய இடத்தில் ஐஸ் கட்டி தடவினால் முடி வளரும்.கசகசாவை பாலில் ஊறவைத்து அரைத்து, பாசிப்பருப்பு மாவு கலந்து தேய்த்தால் முடி உதிர்தல் நிற்கும்.கற்றாழை சாறில் தேங்காய் எண்ணெய் கலந்து தேய்த்தால் கூந்தல் அடர்த்தியாக வளரும், தலையும் குளிர்ச்சியாகும்.சிறிய வெங்காய சாறை தலையில் தேய்த்து ஊறவைத்துக் குளிப்பது முடி உதிர்வைத் தடுக்கும்.செம்பருத்தி பூ + தேங்காய் எண்ணெய் கலவை கூந்தலைக் கருமையாக்கும்.முட்டை வெள்ளைக் கருவைத் தலையில் தேய்த்து, 10 நிமிடம் கழித்து சீயக்காய் போட்டுக் குளித்தால் முடி உதிர்வது முற்றிலும் நிற்கும்.
வெயில் காலத்தில் ஏற்படும் சரும வறட்சி மற்றும் பொலிவிழப்பைத் தடுக்க கற்றாழை ஐஸ் க்யூப்ஸ் (Ice Cubes) சிறந்த தீர்வாகும்.தயாரிக்கும் முறை: கற்றாழை ஜெல்லினை நன்றாகக் கூழாக்கி, ஐஸ் ட்ரேயில் ஊற்றி உறைய வைத்து இதனைத் தயாரிக்கலாம்.பயன்கள்: இந்த ஐஸ் கட்டிகளைக் கொண்டு முகத்தில் மென்மையாக மசாஜ் செய்வதால் சருமம் குளிர்ச்சியடையும், துளைகள் இறுக்கமடைந்து சுருக்கங்கள் குறையும். மேலும், இது முகப்பரு மற்றும் தடிப்புகளைக் கட்டுப்படுத்தி முகத்திற்கு இயற்கையான பொலிவைத் தருகிறது.
தோல் பொலிவு மற்றும் பளபளப்பு.முகத்தை பளபளப்பாகவும், கரும்புள்ளிகள் நீங்கி பிரகாசமாகவும் வைக்க விரும்புபவர்களுக்கான சோப்புகள்:பன்னீர் ரோஸ் (Paneer Rose).முகத்திற்கு இயற்கையான ரோஸ் நிற பொலிவையும் மென்மையையும் தரும்.பீட்ரூட் கேரட்(Beetoot Carrot ).சருமத்தின் வறட்சியை நீக்கி, இயற்கையான நிறத்தை மேம்படுத்தும் அதிமதுரம் .தோலில் உள்ள மங்கலான நிறம் மற்றும் கருந்திட்களை போக்க உதவும்.
வாரம் ஒரு முறை முடக்கத்தான் கீரையை அரைத்து தலையில் தேய்த்து 5 நிமிடம் ஊறியதும் குளிக்கவும். இதுபோல் தொடர்ந்து மூன்று மாத காலம் குளித்து பர்க்கவும். முடி கொட்டுவது நின்று விடும். அதுமட்டும் அல்ல ,இந்த கீரை நரை விழுவதை தடுக்கும். கருகருவென முடி வளர தொடங்கும்.
பெண்களின் அலங்காரத்தில் லிப்ஸ்டிக்கான முக்கியத்துவம் அளவுக்கு மீறி உள்ளது. மேக்கப் செய்ய ஆர்வம் இல்லாதவர்கள் கூட லிப்ஸ்டிக்குடன் vஅலம் வருகின்றனர். ஆனால் லிப்ஸ்டிக்கின் தேர்வில் கவனம் செலுத்துவது அவசியம். சில லிப்ஸ்டிக்குகளில் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் உண்டு. லிப்ஸ்டிக் போடுவதால் என்னென்ன பிரச்சனைகள் வரலாம்? லிப்ஸ்டிக்கில் உள்ள ஈயம், உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கக்கூடும். பித்தலேட்டுகள், நாளமில்லா சுரப்பிகளின் செயல்பாடுகளை பாதிக்கும். பாலி எத்திலின், கிளைகோலிக் அமிலம் போன்றவற்றின் பயன்பாடு நரம்பு மண்டலத்திற்கும் பாதிப்புகளை உண்டாக்கக்கூடியது. பாரபின் (மெழுகு) ரசாயனமும், சருமத்துக்குள் ஊடுருவி சரும எரிச்சல், புற்றுநோய் போன்ற பக்கவிளைவுகளை ஏற்படுத்தக்கூடும். லிப்ஸ்டிக் வாங்கும் முன், அதில் உள்ள பொருட்களை கவனித்து, அது எவ்வளவு பாதுகாப்பாகப் பயன்படுத்த முடியும் என்பதைக் கொஞ்சம் ஆராய்ந்துகொள்ள வேண்டும். லிப்ஸ்டிக்கில் ஈரத்தன்மை ஏற்படுவதால், உதடுகளில் திடீரென அரிப்பு ஏற்படும் போது அதை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. அது ஒவ்வாமை பிரச்சனையின் அறிகுறியாக இருக்கலாம். பெரும்பாலான ரசாயனங்கள் புற்றுநோயை உண்டாக்கும் தன்மையை கொண்டுள்ளதால், லிப்ஸ்டிக் மூலம் புற்றுநோய் ஏற்படக்கூடும். லிப்ஸ்டிக்கில் சேர்க்கப்பட்ட ரசாயனங்கள், இருமல், கண் எரிச்சல், மூச்சுத்திணறல் போன்ற உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படுத்தும். பெட்ரோ கெமிக்கல்கள், நாளமில்லா சுரப்பி செயல்பாடுகளில் மாற்றங்களை ஏற்படுத்துவதோடு, அறிவாற்றல் மற்றும் இனப்பெருக்க திறன்களில் சிக்கல்களை உருவாக்கலாம். அடிக்கடி லிப்ஸ்டிக் பயன்படுத்துவது, சிறுநீரக செயலிழப்பை ஏற்படுத்தக்கூடும், ஏனெனில் காட்மியம் அதிக அளவில் இருக்கும்.
பாலை விட தயிர் சாப்பிடுங்கள். Green tea தினமும் குடிக்கலாம். மிகவும் குளிர்ந்த தண்ணீர் தவிர்க்கவும். Tender coconut வாட்டர் - நல்ல hydration. உப்பு அளவு குறைக்கவும் '. எலுமிச்சை சேர்க்கவும். எண்ணெய் மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளை தவிர்க்கவும். காலை & மாலை வெந்நீர் குடிக்கவும். சாப்பிட்ட உடன் தண்ணீர் குடிக்காதீர்கள்- 60 நிமிடம் gap. வெந்தயம் ஊறவைத்து காலை சாப்பிடுங்கள். Black tea குடிக்கலாம் பால் சேர்க்க வேண்டாம். Herbal water - இஞ்சி தண்ணீர் நல்லது.!
உங்கள் தலைமுடியில் பொடுகுப் பிரச்சனை இருந்தால்,1 லிட்டர் தண்ணீரில்10 கிராம் படிகாரத்தைக் கரைத்து, தினமும் உங்கள் தலைமுடியைக் கழுவினால், ஒரு வாரத்திற்குள் அனைத்து பொடுகும் நீங்கிவிடும்.தினமும் இரவு உறங்கச் செல்வதற்கு முன், உங்கள் முகத்தை விளக்கெண்ணெய் கொண்டு மென்மையாக மசாஜ் செய்யுங்கள்; 5 நாட்களுக்குள் உங்கள் முகத்தில் உள்ள சுருக்கங்களும் கரும்புள்ளிகளும் மறைந்துவிடும்.மருதாணி இலையின் சாறு எடுத்து தேங்காய் எண்ணெய்யில் கலந்து காய்ச்சி தேய்த்துவர இளநரை நீங்கி தலை சூடு குறைந்து தலைமுடி செழித்தும். நீண்டும். செம்பட்டையின்றியும் வளரும்.
தினமும் 15 நாட்கள் முகத்தை ஐஸ் தண்ணீரால் கழுவி வந்தால், சருமத்தில் இரத்த ஓட்டம் மேம்பட்டு முகம் புத்துணர்ச்சியாகவும் சுறுசுறுப்பாகவும் தோன்றலாம். குளிர்ந்த நீர் முகத்தில் உள்ள வீக்கம் மற்றும் சோர்வு தோற்றத்தை குறைக்க உதவுவதுடன், சருமத் துளைகள் தற்காலிகமாகச் சுருங்கியதுபோல் தோற்றமளிக்கவும் செய்யும்.மேலும், அதிகப்படியான எண்ணெய் பசையை கட்டுப்படுத்துவதற்கு இது ஓரளவு உதவலாம். ஆனால் ஐஸ் கட்டிகளை நீண்ட நேரம் நேரடியாக சருமத்தில் தேய்ப்பது அல்லது மிகுந்த குளிரை தொடர்ந்து பயன்படுத்துவது சருமத்தில் எரிச்சல், சிவத்தல் போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும். எனவே, குறுகிய நேரம் மட்டுமே பயன்படுத்தி, சருமத்தின் தன்மைக்கு ஏற்ப கவனமாக செயல்படுவது சிறந்தது.