25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு சஞ்சீவி மலையில் படி பூஜை விழா. >> ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர் தேக்கம் நிரம்பி, 2-வது குடிநீர் தேக்கத்துக்கும் தண்ணீரை சேமித்து வைக்கவும் நகராட்சி தலைவர் பவித்ரா ஷியாம், ஆணையாளர் நாகராஜன் உத்தரவு. பொதுமக்கள் மகிழ்ச்சி. >> பாரம்பரிய கொத்தலு திருவிழா, ராஜூக்கள் சமூகம் சார்பில்ராஜபாளையத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டது. >> ராஜபாளையம் சர்வசமுத்திர அக்ரஹாரம் தெரு சந்தான வேணுகோபால சுவாமி கோயிலில் மகாதேவ அஷ்டமி. >> விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஒன்றியத்திற்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 10 நாட்கள் தொழில் முனைவோர் பயிற்சி முகாம். >> ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா. >> நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >>


சமீபத்திய நிகழ்வுகள்

Aug 05, 2025

"ஆடிப்பட்டம் " விவசாய பணிகள் ராஜபாளையம் பகுதியில் தொடங்கின

சேத்தூர் பிர்க்காவில் உள்ள நகரகுளம், வாண்டையார்குளம், பெரியகுளம், வாழவந்தான் கண்மாய், நச்சாடபேரி ஆகிய கண்மாய் பகுதிகளில் தக்கை பூண்டு செடி விதைப்பதற்கு பணிகள் நடந்து வருகிறது. தற்போது கண்மாய்கள் மற்றும் கிணறுகளில் தண்ணீர் வற்றியுள்ளன. இதனால் விவசாயிகள் நெற்பயிர் நடுவதற்கு நிலத்தடி நீர்மட்டத்தை நம்பி பல்வேறு வகையான பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர். இப்பகுதியில் வருகிற புரட்டாசி மாதம் நடவு பணிகளுக்காக தற்போது விவசாய நிலத்தில் கொழிஞ்சி செடிகளை போட்டு உழவு பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு விவசாய பணிகள் நடைபெறுகிறதுவிவசாயிகளுக்கு தட்டுப் பாடு இல்லாமல் உரங்கள் கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தற்போது தெற்கு தேவதானம், வடக்கு தேவதானம், கோவிலூர் ஆகிய பகுதியில் நெல் சாகுபடி செய்ய விவசாயிகள் உழவு பணிகளை தொடங்கி உள்ளனர்.விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியில் கடந்த ஆண்டு பெய்த மழையால் பல்வேறு கண்மாய்கள் நிறைந்தன. இதனால் ஏராளமான விவசாயிகள் நெல் சாகுபடியில் ஈடுபட்டனர். முதல் போக அறுவடை பணிகள் முடிந்த நிலையில் தற்போது விவசாய பணிகள் தீவிரமாக நடை பெற்று வருகிறது. கால நடவு பணிகளை ஆரம்பிக்க வயல்களை சீரமைக்கும் பணி நிலத்தை உழுது சமன் செய்யும் பணி போன்றவை நடந்து வருகின்றன.மேற்கு தொடர்ச்சிமலை அடிவாரத்தில் அமைந்துள்ள தெற்கு தேவதானம், வடக்குதேவதானம், கோவிலூர், சாஸ்தா கோவில் பகுதியில் ஆடிப்பட்டம் விவசாய பணிகளை விவசாயிகள் தொடங்கி உள்ளனர்.

Aug 02, 2025

ராஜபாளையம் பகுதியில் பலத்த காற்று தென்னை, வாழை மரங்கள் பாதிப்பு , மின் இணைப்பு துண்டிப்பு .

மலைப்பகுதியில் இருந்து பலத்த சூறைக்காற்று சேத்துார், தேவதானம் ராஜபாளையம் அய்யனார் கோயில் அருகே பல பகுதிகளில் அதிக பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. ராஜபாளையம், சேத்துார், தேவதானம், கோவிலுார் உள்ளிட்ட சுற்றுப் பகுதிகளில் பலத்த காற்று வீசி வருகிறது.பல இடங்களிலும் முதிர்ந்த மரங்கள் பக்க வாட்டு கிளைகள் உடைந் துள்ளதுடன், வாழை விவசாயிகள் பலத்த சேதத்தை சந்தித்துள்ளனர். தென்னை மரங்களில் இளம் மட்டைகள் முறிந்தும், இளநீர் காய்கள், மா மரங்களில் எஞ்சியுள்ள காய்கள் காற்றை எதிர்கொள்ள முடியாமல் சேதமடைந்துள்ளன.விவசாய பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்து மின் கம்பிகள் அறுந்து இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.ஆட்கள் பற்றாக்குறையை காரணம் கூறி மின் வாரியத்தினரும் முன்னுரிமை பகுதியில் பணிகளை செய்து வருவதால் தாமதம் ஏற்படுகிறது. தேங்காய்க்கு நல்ல விலை இருந்தும் இளநீர் பருவத்தில் உதிர்ந்ததால் தென்னை விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதுராஜபாளையம் சுற்று வட்டாரத்தில் கடந்த மூன்று நாட்களாக அடிக்கும் பலத்த காற்றில் தென்னை சாகுபடி பயிர்கள் பாதிப்பிற்கு உள்ளானதுடன் பல இடங்களில் மின் இணைப்பு துண்டிப்பிற்கு உள்ளானதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

Jul 21, 2025

ராஜபாளையம் தென்றல் நகர் பகுதிக்கு 14 ஆண்டுகளுக்கு பின் மினி பஸ் வசதி தொடங்கியுள்ளது.

ஆட்டோவை மட்டும் நம்பி, அதிக கட்டணத்துடன் தனியார் வாகனம், இப்பகுதியில் இருந்து பஸ் ஸ்டாண்ட் வரை, சென்று வந்தனர். பல்வேறு அரசியல் காரணங்களால் 2011 வரை இயங்கி வந்த மினி பஸ் தடைப்பட்டது.மக்கள் பயன்பாட்டிற்காக மினி பஸ் இயக்க தொடர் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், நீண்ட நாள் கோரிக்கைக்கு தீர்வு ஏற்பட்டுள்ளது. இரண்டு நாட்களாக ரயில்வே ஸ்டேஷனில் இருந்து, பழைய பஸ் ஸ்டாண்ட், பஞ்சு மார்க்கெட், தாலுகா அலுவலகம் வழியாக சமத்துவபுரம் மற்றும் ராஜூக்கள் கல்லுாரிக்கு மினி பஸ் சேவை இயங்க தொடங்கியுள்ளது.ரயில்வே ஸ்டேஷனில் காலை 5:30 மணிக்கு துறையின் சேவை இரவு 8:00 மணி வரை ஒரு மணி நேரத்திற்கு தொடர்ச்சியாக இயங்க உள்ளது. இதனால் தென்றல் நகர் ரோட்டில் குடியிருந்து வரும் 20க்கும் அதிகமான கிராமத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், நோயாளிகள், மாணவர்கள் குறைந்த கட்டணத்தில் காலை முதல் இரவு வரை தொடர்ச்சியான சேவை பெற வழி கிடைத்துள்ளது. 

Jul 19, 2025

ராஜபாளையத்தில் மாவட்ட அளவிலான சாம்பியன்ஷிப் ஜூனியர் சப்ஜூனியர் கபடி போட்டிகள். மூன்று நாட்கள் நடைபெறும்.

போட்டிகள் ராஜபாளையம் ஊர்க்காவல் படை மைதானத்தில் தொடங்கியது.மாவட்ட அளவிலான கபடி சாம்பியன்ஷிப் போட்டிகள் ராஜபாளையம் பி.ஏ. சி.ஆர் நினைவு விளையாட்டு மன்றம், விருதுநகர் மாவட்ட அமைச்சூர் கபடி கழகம் சார்பில் தொடங்கியது. ராஜபாளையம் டி.எஸ்.பி., பஸினா பீவி போட்டிகளை தொடங்கி வைத்தார். இதில் சிறுவர் சிறுமிகள், பள்ளிகள், கிளப் என 60 அணிகளை சேர்ந்த 600 க்கும் ஏற்பட்ட வீரர்கள் பங்கேற்கின்றனர். இப்போட்டிகளில் வெற்றி பெறும் அணிகளுக்கு ரூ.43 ஆயிரம் பரிசு கேடயத்துடன் சிறந்த வீரர்கள் மாநில அளவு போட்டிகளுக்கு தேர்வு பெறுவர்.விருதுநகர் மாவட்ட அமெச்சூர் கபடி கழக செயலாளர், சுப்ரமணிய ராஜா தலைமையில் ஏற்பாடுகளை நிர்வாகிகள் செய்திருந்தனர். 

Jul 18, 2025

முதன்முறையாக ராஜபாளையத்தில்எஸ்எஸ் டெக்ஸ்டைல்ஸ் பிராண்ட் தொழிற்சாலைசேல்ஸ் கண்காட்சி.

 நேரம் : காலை 10.00 மணி - இரவு 9.30 மணி   விற்பனை தேதி : 16.07.2025 - 30.07.2025ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான அனைத்து ஆடைகளும்1 கிலோ: ரூ.999/- மட்டுமே, ஆண்கள் : டி.சர்ட், சர்ட், பேண்ட், ஜீன்ஸ், டிராக் பேண்ட், சார்ட்ஸ்பெண்கள் : வெஸ்டன் டாப், குர்தி, பிளாட்டோ பேண்ட், ஜீன்ஸ், P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு ஞாபகார்த்த திருமண மண்டபம்526-E2, தென்காசி ரோடு, இராஜபாளையம் - 626 117செல்: 63692 97427, 6369060032. 

Jul 09, 2025

மாயூரநாத சுவாமி கோயிலில்  தேரோட்டம்..

இக்கோயிலில் ஆனி பெருந்திருவிழா ஜூன் 30ல் கொடியேற்றத்துடன்,10 நாட்கள் நடைபெற்ற திருவிழாவில் தினசரி சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலாநடந்ததுவிழாவின் தொடர்ச்சியாக ஜூலை6ல்அஞ்சல் நாயகி மாயூரநாத சுவாமி திருக்கல்யாணம் நடந்தது.தேரோட்டம் நேற்று காலை10:30 க்குதொடங்கியது.சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருள ,மாயூரநாத சுவாமி பிரியாவிடை உடன்பெரிய தேரிலும், அஞ்சல் நாயகி அம்மன்எழுந்தருவிய சிறிய தேரை பெண்கள் மட்டும் வடம் பிடித்து இழுத்தனர் . ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரினை வடம்பிடித்து இழுத்தனர்.பக்தர்கள் ராஜபாளையம் டி.எஸ்.பி பஸீனா பிவி தலைமையில் போலீசார், ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணிகள் மேற்கொண்டனர். ஏற்பாடுகளை செயல் அலுவலர் ராஜேஷ், தக்கார் சர்க்கரை அம்மாள் தலைமையில் செய்திருந்தனர் .

Jul 01, 2025

ராஜபாளையம் மாயூரநாதர் சுவாமி கோயில் ஆனிப்பெருந் திருவிழா கொடியேற்றம்.

 நேற்று காலை கொடியேற்றத்துடன் ராஜபாளையம் மாயூரநாதர் சுவாமி கோயில் ஆனிப்பெருந் திருவிழா தொடங்கியது. ராஜபாளையம் மாயூரநாதர் சுவாமி கோயில் ,ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் ஆண்டு தோறும் இந்த கோயிலில் ஆனி மாதத்தில் சுவாமி அம்பாள் திருக்கல்யாணம், ஆனிப் பெருந்திருவிழா தேரோட்டம் நடைபெறும். JUNE 30 காலை 9:00 மணிக்கு இந்த ஆண்டு திருவிழா துவங்கியது. முன்னதாக அஞ்சல் நாயகி மாயூரநாத சுவாமிக்கு அபிஷேகம்,. கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கொடியேற்றம் நடந்தது. பத்து நாட்கள் நடைபெறும் விழாவில் தினசரி சிறப்பு அலங்காரத்தில் மாலையில் சுவாமி அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடக்கிறது.ஜூலை 6ல் திருக்கல்யாணம் ,ஜூலை 8 காலை 9:00 மணிக்கு தேர் திருவிழா நடக்கிறது.ஏற்பாடுகளை செயல் அலுவலர் ராஜேஷ் தலைமையில் கோயில் நிர்வாகத்தினர் பக்தர்கள் செய்து வருகின்றனர்.  

Jun 24, 2025

ராஜபாளையம் நகர் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் உள்ள சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு

ராஜபாளையம் நகர் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் உள்ள சிவன் கோவில்களில் பிரதோஷத்தை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் சொக்கர் என்ற மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில், மாயூரநாத சுவாமி கோவில், கருப்பஞானியார் கோவில், அருணாச்சலேசுவரர் கோவில், அம்பலப்புளி பஜார் பகுதியில் உள்ள குருசாமி கோவில், சங்கரன்கோவில் சாலையில் அமைந்துள்ள பறவை அன்னம் காத்தருளியசாமி கோவில், மதுரை சாலையில் உள்ள தாரண்யா நந்தீஸ்வரர் கோவில் ஆகிய கோவில்களில் பிரதோஷத்தை யொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. நந்தீஸ்வரருக்கு மஞ்சள், தேன், இளநீர், பால், தயிர், எலுமிச்சை, கரும்புச்சாறு, பன்னீர், சந்தனம் போன்ற பல்வேறு பொருட்களால் அபிஷேகம் நடந்தது. அதேபோல சேத்தூர் திருக்கண்ணிஸ்வரர் கோவில், சொக்கநாதன்புத்தூர்,  தவநந்திகண்டீஸ்வரர் கோவில், தேவதானம் நச்சாடை தவிர்த்த ருளிய சுவாமி கோவில், வாழவந்தாள்புரம் கிராமத்தில் மன்மத ராஜலிங்கேஸ்வரர் கோவில், வடகரை கிராமத்தில் சங்கிலி சித்தன் அய்யனார் கோவிலில் உள்ள நந்தீஸ்வரர் சுவாமி. தெற்கு வெங்கநல்லூர் சிதம்பரேஸ்வரர் கோவில், சோழபுரம் விக்கிரம பாண்டீஸ்வரர் கோவில், அயன் கொல்லங்கொண்டான் வீரபாண்டீஸ்வரர் கோவில், இளந்திரை கொண்டான் காலாஹஸ்தீஸ்வரர் கோவில் உள்பட பல்வேறு சிவன் கோவில் களில் பிரதோஷம் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். 

Jun 21, 2025

ராஜபாளையம் எ.கா.த தர்மராஜா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 18 வயதிற்குட்பட்ட பள்ளி மாணவிகளுக்கான கூடை பந்து போட்டிகள்

ராஜபாளையம் எ.கா.த தர்மராஜா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 18 வயதிற்குட்பட்ட பள்ளி மாணவிகளுக்கான கூடை பந்து போட்டிகள் மின்னொளி போட்ட களாக நடைபெறுகிறது.கும்பகோணம், துாத்துக்குடி, திண்டுக்கல், சேலம், விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாணவிகள், பயிற்றுநர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.JUNE 20 - 22 ,காலை, மாலை மூன்று நாட்கள் நடைபெறும் போட்டிகள் லீக், புள்ளி அடிப்படையில் நடைபெறுகின்றன. பள்ளியின் மேனேஜிங் டிரஸ்டி கிருஷ்ணம ராஜு தலைமை வகித்தார். தலைமை ஆசிரியை செண்பகவள்ளி வரவேற்றார். ராஜபாளையம் டி.எஸ்.பி., பஸினா பீவி போட்டிகளை வைத்தார். துவக்கி வெற்றி பெறும் அணிகளுக்கு கோப்பை, சான்றிதழ், ரொக்க பரிசு வழங்கப்படும் என போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

Jun 06, 2025

ஸ்ரீவில்லிபுத்தூர், வைத்தியநாத சுவாமி கோயிலில் திருக்கல்யாண உற்ஸவம்.

ஸ்ரீவில்லிபுத்துார்  மடவார் வளாகம் வைத்திய நாத சுவாமி கோயிலில் திருக்கல்யாண உற்ஸவம் நேற்றிரவு நடந்தது. நேற்று இரவு 7:00 மணிக்கு மேல் திருக்கல்யாண மேடையில் எழுந்தருளிய வைத்தியநாத சுவாமி, சிவகாமி அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்து திருக்கல்யாண  வைபவத்தை பட்டர்கள் நடத்தினர். திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்திருந்தது. நாளை (ஜூன் 8)காலை 8:30 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. 

1 2 3 4 5 6 7 8 9 10 ... 15 16

AD's



More News