25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


அய்யனார் கோவில் நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்கு தடை. ஒத்துழைக்காத பொதுமக்கள். யாருக்கு நஷ்டம்?.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

அய்யனார் கோவில் நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்கு தடை. ஒத்துழைக்காத பொதுமக்கள். யாருக்கு நஷ்டம்?.

தொடர்மழையால் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.வெள்ள நீர் ஆற்றில் செல்வதை கண்டுகளித்து குளித்து மகிழ சிவகாசி, விருதுநகர், சேத்தூர் போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்து பெண்கள் குழந்தைகள் உள்ளிட்ட குடும்பத்தினருடன், இராஜபாளையம் அய்யனார் கோயில், அணைத்தலை ஆறு, ராக்காச்சி அம்மன் கோயில் பகுதிகளில் இரண்டு நாளாக குவிந்து வருகின்றனர்.

ஆற்றில் வெள்ளப்பெருக்கு அபாயம் மற்றும் கன மழையால் வனத்துறையினர் ஆற்றில் குளிக்க தடை விதித்துள்ளனர். இந்நிலையில் சுற்றுலா பயணிகள் வனத்துறையினரின் தடையை மீறி குளிக்க முற்பட்டு வருகின்றனர். தடுப்பவர்களிடம் தொடர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.இராஜபாளையத்தில் வனத்துறையினரின் உத்தரவை மீறி வனப்பகுதி ஆறுகளில் விபரீதம் தெரியாமல் குளிப்பதற்காக குவியும் சுற்றுலா பயணிகளை கண்காணித்து கட்டுப்படுத்த முடியாத நிலைக்கு வனத்துறையினர் ஆளாகியுள்ளனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News