லண்டன் ஸ்குவாஷ் கிளாசிக்: அனாஹத், ரமித் டான்டன் 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்.
லண்டனில் நடைபெற்று வரும் கிளாசிக் ஸ்குவாஷ் தொடரில் இந்திய வீரர், வீராங்கனைகள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
பெண்களுக்கான முதல் சுற்றில் இந்தியாவின் அனாஹத் சிங், எகிப்தின் மரியம் மெட்வாலியை எதிர்கொண்டார். வெறும் 11 நிமிடங்கள் நீடித்த இந்தப் போட்டியில் அபாரமாக விளையாடிய அனாஹத் சிங் 2-0 என்ற கணக்கில் (11-3, 11-2) வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
ஆண்களுக்கான முதல் சுற்றில் இந்தியாவின் ரமித் டான்டன், கத்தாரின் அப்துல்லா அல்-தாமிமியை எதிர்கொண்டார். இதில் ரமித் டான்டன் 2-0 என்ற கணக்கில் (11-6, 11-7) வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்குள் நுழைந்தார்.
மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் வீர் சோட்ரானி, சுவிட்சர்லாந்தின் யானிக் வில்ஹெல்மியை எதிர்கொண்டார். இதில் வீர் சோட்ரானி 0-2 (9-11, 9-11) என்ற கணக்கில் தோல்வியடைந்தார்.
0
Leave a Reply