தெலுங்கில் பிரியா பவானி சங்கருக்கு முதல் வெற்றி!
தமிழில் தொடர்ந்து படங்களில் நடித்து வரும் பிரியா பவானி சங்கர், தெலுங்கிலும் இதுவரை மூன்று படங்களில் நடித்திருந்தாலும் பெரிய வெற்றி எதுவும் கிடைக்கவில்லை.
இந்நிலையில், சமீபத்தில் வெளியான ‘இருமுடி’படம் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத் தந்துள்ளது. சிவா நிர்வானா இயக்கத்தில் ரவி தேஜா நடித்துள்ள இப்படம் அப்பா–மகள் உறவை மையமாகக் கொண்ட கதையாக உருவாகியுள்ளது.
10 வயது சிறுமியின் தாயாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். இந்த வெற்றி மூலம் தெலுங்கு சினிமாவிலும் அவருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
0
Leave a Reply