25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் மூலம் நடத்தப்படவுள்ள பாரத ஸ்டேட் வங்கியின் SBI Junior Associate  தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகளில் விருப்பமுள்ள தேர்வர்கள் பங்கேற்கலாம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் மூலம் நடத்தப்படவுள்ள பாரத ஸ்டேட் வங்கியின் SBI Junior Associate தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகளில் விருப்பமுள்ள தேர்வர்கள் பங்கேற்கலாம்.

விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னார்வப் பயிலும் வட்டம் வாயிலாக பாரத ஸ்டேட் வங்கி (State Bank of India) அறிவிப்பு செய்யப்பட்டுள்ள SBI Junior Associate  (9,124 காலிப்பணியிடங்கள்) தேர்விற்கான இலவசப் பயிற்சி  வகுப்பு  03.09.2026 (வியாழக்கிழமை) முதல் அலுவலக வளாகத்தில் நடைபெற உள்ளது.
அலுவலகத்தில் அனைத்து போட்டித் தேர்வுகளுக்கான  புத்தகங்கள் அடங்கிய நூலகம் மற்றும் Wifi வசதியுடன் கணினி ஆய்வகம் உள்ளது. இலவசப் பயிற்சி வகுப்பு திறன் வாய்ந்த பயிற்றுநர்களை கொண்டு நடத்தப்படவுள்ளது. இலவசப் பாடக்குறிப்புகள் வழங்கி பாடவாரியானத் தேர்வுகள் மற்றும் முழுமாதிரித் தேர்வுகள் நடைபெறும்.

மேலும், மெய்நிகர் கற்றல் இணையதளம் மூலம் அரசு போட்டித்தேர்வுகளுக்கான மின்பாடக் குறிப்புகள், காணொளி வகுப்புகள், மாதிரித் தேர்வுகள் மற்றும் வினாத்தாள்களை இலவசமாகப் பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும், புதிய வேலைவாய்ப்பு அறிவிப்புகள், தேர்வு அறிவிக்கைகள் மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் தகவல்களும் வழங்கப்படுகின்றன. தொலைதூரப் பகுதிகளில் உள்ள இளைஞர்களும் எங்கிருந்தும், எப்போது வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளும் வகையில் இத்தளம் செயல்படுகிறது. www.tamilnaducareerservices.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து இச்சேவைகளைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

SBI Junior Associate பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விருப்பம் உடையவர்கள்  studycirclevnr@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாகவும் அல்லது விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேரடியாகவும் பதிவு செய்யலாம்.எனவே, SBI –Junior Associate தேர்விற்குத் தயாராகும் தேர்வர்கள் இப்பயிற்சி வகுப்பில் கலந்துக்கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.  

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News