25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


ஈட்டி எறிதல் போட்டியில் தமிழக வீரர் மனோஜ் குமார் தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஈட்டி எறிதல் போட்டியில் தமிழக வீரர் மனோஜ் குமார் தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார்.

இந்திய தடகள கூட்டமைப்பு சார்பில் இந்திய தடகள சீரிஸ் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் 15-வது தொடர் உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில் நேற்று நடைபெற்றது.

ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் தமிழக வீரர் மனோஜ் குமார் அபாரமாக செயல்பட்டு தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். தனது 5-வது முயற்சியில் அதிகபட்சமாக 77.82 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து முதலிடம் பிடித்தார்.

ஆர்மி அணியின் பிபின் 73.94 மீட்டர் தூரத்துடன் வெள்ளிப் பதக்கமும், உத்தரகாண்டைச் சேர்ந்த விகாஷ் 73.07 மீட்டர் தூரத்துடன் வெண்கலப் பதக்கமும் வென்றனர்.

ஆண்களுக்கான குண்டு எறிதலில் ராஜஸ்தானின் ராம் சந்திர மாலி 15.91 மீட்டர் தூரம் எறிந்து தங்கப் பதக்கம் வென்றார். தமிழக வீரர் பாலாஜி 15.83 மீட்டர் தூரத்துடன் வெள்ளிப் பதக்கமும், பஞ்சாப் வீரர் மால்கீட் சிங் 15.74 மீட்டர் தூரத்துடன் வெண்கலப் பதக்கமும் பெற்றனர்.

ஆண்களுக்கான 400 மீட்டர் ஓட்டத்தில் கேரளாவைச் சேர்ந்த மிஜோ சாக்கோ குரியன் 46.89 வினாடிகளில் இலக்கை கடந்து தங்கப் பதக்கம் வென்றார். தொடர்ந்து 200 மீட்டர் ஓட்டத்திலும் 21.41 வினாடிகளில் ஓடி வெள்ளிப் பதக்கம் கைப்பற்றினார்.

ஆண்களுக்கான நீளம் தாண்டுதலில் தமிழகத்தின் தருண் விகாஷ் 7.48 மீட்டர் தூரம் தாண்டி வெள்ளிப் பதக்கம் வென்றார். இதே தூரத்தை பதிவு செய்த சரண் வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News