முகம் பளிச்சென்று இருக்க...
தினமும் காலையில் எழுந்ததும், சிறிது தேங்காய் எண்ணெய் எடுத்து, நன்கு குழைத்து முகத்தில் தடவி, பத்து நிமிடம் கழித்து பயத்தம்மாவை கொண்டு முகம் கழுவினால் முகம் நன்கு பளபளப்பாகும். முகப்பருக்கள் தோன்றாது. தினமும் இதை செய்து வந்தால் நிச்சயம் நம் அழகு கூடும்.
உதடு கருமை நீங்க இரவு சில சொட்டுகள் தூய தேங்காய் எண்ணையை உதடுகளின் மேல் தடவி நன்கு மசாஜ் செய்து அப்படியே உறங்கிவிட வேண்டும். பகலில் அவ்வப்போது பீட்ரூட் சாறு எடுத்து உதடுகளின் மேல் பூசி கழுவ வேண்டும்.
கண்கள் பொலிவுற கண்களின் மீது வட்ட வடிவத்தில் நறுக்கிய வெள்ளரிக்காய் துண்டுகளை வைத்து ரிலாக்ஸாக கண்களை மூடி சிறிது நேரம் படுத்துப் பாருங்கள். மனதுடன் கண்களும் புத்துணர்ச்சி பெறும்.
0
Leave a Reply