25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
கால மாற்றத்தால் வீழ்ச்சியடையும் ராஜபாளையம் வெல்ல உற்பத்தி: கரும்பு சாகுபடியைக் குறைக்கும் விவசாயிகள். >> வத்திராயிருப்பு & மேற்குத் தொடர்ச்சி மலையில் தொடர் மழை: நெல் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி. >> ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >>


கனிம வளங்கள் கடத்தலை தடுத்திட சிறப்பு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

கனிம வளங்கள் கடத்தலை தடுத்திட சிறப்பு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

விருதுநகர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக அனுமதியின்றி கனிம வளங்களை   கடத்துதல் மற்றும் விதிமுறைகளை மீறிக் கனிம வளங்களைப் பயன்படுத்துதல் போன்ற செயல்பாடுகளை முற்றிலுமாகத் தடுக்கும் பொருட்டு பல்வேறு முன்னெடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு, தீவிர கண்காணிப்பிற்காக விருதுநகர் மாவட்டம் முழுவதும் குழுக்கள்  நியமனம் செய்யப்பட்டுள்ளது.இதன் அடிப்படையில், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 10 வட்டங்களுக்கும், ஒரு வட்டத்திற்கு 4 குழுக்கள் வீதம் மொத்தம் 40 சிறப்புக் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. வட்டாட்சியர்/துணை வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர், சிறப்புச் சார்பு ஆய்வாளர் (Special Sub-Inspector) மற்றும் உதவிச் செயற்பொறியாளர் ஆகியோர் அடங்கிய இக்குழுவினர் மாவட்டம் முழுவதும் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் தீவிரக் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இக்குழுவினர் மேற்கொண்ட சோதனைகளில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதனடிப்படையில் சிவகாசி வட்டத்தில் கடந்த 14.11.2026 அன்று சிவகாசி வருவாய் வட்டாட்சியர் தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட சோதனையில், உரிய அனுமதிச் சீட்டின்றி 2 யூனிட் கிராவல் மண் ஏற்றி வந்த TN 04 9675 என்ற பதிவெண் கொண்ட டிப்பர் லாரி கண்டறியப்பட்டுப் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, வாகனம் திருத்தங்கல் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.அதேபோல் வத்திராயிருப்பு வட்டத்தில் கடந்த 17.11.2026 அன்று வத்திராயிருப்பு வட்டக் குழுவினர் மேற்கொண்ட ஆய்வின் போது, சட்ட விரோதமாக இருப்பு வைக்கப்பட்டிருந்த 120 மணல் மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டு, வழக்கு பதிவு செய்யப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்ட மணல் மூட்டைகள் வத்திராயிருப்பு வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

 அதேபோல் விருதுநகர் வட்டத்தில் கடந்த 17.11.2026 அன்று விருதுநகர் வட்டக் குழுவினர் சட்டவிரோத கனிமக் கடத்தல் தடுப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போது, அனுமதியின்றிக் கனிமம் ஏற்றி வந்த TN 48 BH 3339 என்ற பதிவெண் கொண்ட லாரி பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு, வாகனம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மாவட்ட நிர்வாகம் சார்பில் சட்டவிரோத கனிமக் கடத்தலைத் தடுக்கப் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மிகுந்த கண்காணிப்புடன் விருதுநகர் மாவட்டம் முழுவதும் பல்வேறு துறைகளைச் சார்ந்த அலுவலர்கள் குழுக்களாக நியமனம் செய்யப்பட்டு, சட்டவிரோத மணல் கடத்தல் பணிகளை தடுக்க 24 மணிநேரமும் சுழற்சி முறையில் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். அனுமதியின்றி கொண்டுவரப்படும் கனிமங்கள் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்படும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, காவல் துறையினர் மூலம் வழக்குப் பதிவு செய்யும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. மேலும், மாவட்டத்தில் சட்டவிரோதமாக மணல் கடத்தப்படும் நிலையானது முற்றிலும் அகற்றப்படும் நோக்கில் விருதுநகர் மாவட்ட நிர்வாகம் மிகுந்த விழிப்புடன் செயல்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News