இந்தியப் பங்குச்சந்தையில் குவிந்த வெளிநாட்டு முதலீடு.
இந்தியப் பங்குச்சந்தையில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் (FPI) புதிய சாதனை படைத்துள்ளனர்.
நவம்பர் 2 முதல் 20ஆம் தேதி வரை, இந்திய நிறுவனங்களின் பங்குகளில் சுமார் ₹1.22 லட்சம் கோடியை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முதலீடு செய்துள்ளனர்.
ஒரே மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த முதலீடு, இந்தியப் பங்குச்சந்தை வரலாற்றில் இதுவரை பதிவான மிகப்பெரிய வெளிநாட்டு முதலீடாகக் கூறப்படுகிறது.
இந்தியப் பொருளாதாரம் மற்றும் பங்குச்சந்தை மீதான சர்வதேச முதலீட்டாளர்களின் ஆர்வத்தை இந்த முதலீடு வெளிப்படுத்துகிறது.
0
Leave a Reply