சையது மோடி பாட்மின்டன்: 'ஹாட்ரிக்' பட்டம் வெல்லுமா காயத்ரி - திரீசா ஜோடி.
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில், 'சூப்பர் 300' அந்தஸ்து பெற்ற சையது மோடி இந்தியா சர்வதேச பாட்மின்டன் தொடர் இன்று தொடங்குகிறது.
இந்தத் தொடரில் இந்தியாவின் முன்னணி நட்சத்திரங்களான பி.வி. சிந்து, லக்சயா சென், ஸ்ரீகாந்த், சாத்விக் சாய்ராஜ் - சிராக் ஷெட்டி ஜோடி உள்ளிட்டோர் பங்கேற்கவில்லை.
பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் காயத்ரி கோபிசந்த் - திரீசா ஜாலி ஜோடி களமிறங்குகிறது. தொடர்ந்து மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம் வெல்லும் முனைப்பில் இந்த ஜோடி காத்திருக்கிறது.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் மாளவிகா, தேவிகா சிஹாக், தான்வி சர்மா, உன்னதி ஹூடா, இஷாராணி பரூக், அஷ்மிதா, மான்சி சிங், ஆகர்ஷி காஷ்யப், அனுபமா உள்ளிட்ட இந்திய வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் தருண், மிதுன் மஞ்சுநாத், சங்கர் முத்துசாமி உள்ளிட்டோர் இந்தியா சார்பில் களமிறங்குகின்றனர்.
0
Leave a Reply