தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள் மற்றும் திட்டங்கள்.
நவம்பர் 11 முதல் 19 வரை தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள் மற்றும் திட்டங்கள்.
தொழில் துறை -
ஹவாசின் மற்றும் சியோன் ஹூவா சம்மிட் ஆகிய நிறுவனங்களுடன் ரூ.1,370 கோடி புதிய முதலீடுகளுக்கான விருப்பம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழில் தொடங்குபவர்களுக்கு 21 நாட்களில் அனுமதி அளிப்பது உள்ளிட்ட 10 முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளன .
திருப்பூர் மற்றும் கரூர் ஜவுளித் துறை ஆய்வுகளுக்கு தலா ரூ.25 லட்சம் ஒதுக்கி, உள்ளூர் தொழில்களுக்கு கைகொடுத்துள்ளது தமிழக வெற்றிக்கழக அரசு.
அடிப்படை கட்டமைப்பு -
சென்னையில் ரூ.1,401.75 கோடியில் 6,157 அடுக்குமாடிக் குடியிருப்புகள்.
வீட்டுவசதி வாரிய ஒதுக்கீடுதாரர்களுக்கு ரூ.18.45 கோடி வட்டித் தள்ளுபடி.
2026-27ஆம் ஆண்டிற்கான விரிவான சாலை மேம்பாட்டுத் திட்டத்திற்கு ரூ.6,513.18 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கல்வி -
போட்டித் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களின் கனவை நனவாக்க 'வெற்றி நூலகம் திறப்பு.
கௌரவ விரிவுரையாளர்களுக்கு மாதம் ரூ.5,000 ஊதிய உயர்வு.
செவித்திறன் குறைபாடுடைய மாணவர்களுக்கு ரூ.64 லட்சத்தில் மெய்நிகர் கற்றல் திட்டம்.
ஆலந்தூர் அரசுக் கல்லூரிக்கு ரூ.22.10 கோடியில் புதிய கட்டடம்.
0
Leave a Reply