25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
கால மாற்றத்தால் வீழ்ச்சியடையும் ராஜபாளையம் வெல்ல உற்பத்தி: கரும்பு சாகுபடியைக் குறைக்கும் விவசாயிகள். >> வத்திராயிருப்பு & மேற்குத் தொடர்ச்சி மலையில் தொடர் மழை: நெல் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி. >> ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >>


OZEMPIC, WEGOVY, MOUNJARO உள்ளிட்ட GLP-1 மருந்துகளால் பார்வை பாதிப்பு ஏற்படும் அபாயம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

OZEMPIC, WEGOVY, MOUNJARO உள்ளிட்ட GLP-1 மருந்துகளால் பார்வை பாதிப்பு ஏற்படும் அபாயம்.

உடல் பருமன் மற்றும் நீரிழிவு நோய்க்கான சிகிச்சையில் பயன்படுத்தப்படும் OZEMPIC, WEGOVY, MOUNJARO உள்ளிட்ட GLP-1 வகை மருந்துகள் தொடர்பாக அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகமான FDA எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த மருந்துகளின் பயன்பாட்டுடன், அரிதான கண் பாதிப்பான NAION (Non-Arteritic Anterior Ischemic Optic Neuropathy) தொடர்புடையதாக இருக்கலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தப் பாதிப்பால் பார்வை நரம்புக்குச் செல்லும் ரத்த ஓட்டம் தடைபட்டு, திடீர் பார்வை இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. சிலருக்கு பாதிப்பு நிரந்தரமாகவும் இருக்கலாம்.

இதுதொடர்பான எச்சரிக்கையை மருந்துகளின் லேபிள்களில் இடம்பெறச் செய்ய FDA வலியுறுத்தியுள்ளது.

மருத்துவரின் ஆலோசனையின்றி இந்த மருந்துகளைப் பயன்படுத்தவோ, ஏற்கெனவே பயன்படுத்தி வருபவர்கள் திடீரென நிறுத்தவோ வேண்டாம். பார்வையில் திடீர் மாற்றம் ஏற்பட்டால் உடனடியாக கண் மருத்துவரை அணுகவும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News