உலக செஸ் சாம்பியன்ஷிப் இன்று தொடக்கம்.
உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி இன்று சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் தொடங்குகிறது. இதில் நடப்பு உலக சாம்பியனான இந்தியாவின் டி. குகேஷ் மீண்டும் பட்டம் வெல்வாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
சர்வதேச செஸ் கூட்டமைப்பான FIDE சார்பில் நடைபெறும் இத்தொடரில், இந்தியாவின் குகேஷ், உஸ்பெகிஸ்தானின் ஜாவோகிர் சிந்தாரோவுடன் பலப்பரீட்சை நடத்துகிறார்.
கேண்டிடேட்ஸ் தொடரில் சிறப்பாக விளையாடி தகுதி பெற்ற சிந்தாரோவுக்கு எதிராக குகேஷ் தனது உலக சாம்பியன் பட்டத்தைத் தக்கவைத்துக் கொள்ளும் நோக்கில் களமிறங்குகிறார்.
நீண்ட நேரம் நடைபெறும் கிளாசிக்கல் முறையில் மொத்தம் 14 சுற்றுகள் நடத்தப்படும். முதல் 40 நகர்த்தல்களை 120 நிமிடங்களுக்குள் மேற்கொள்ள வேண்டும். முதலில் 7.5 புள்ளிகளைப் பெறும் வீரர் உலக சாம்பியன் பட்டத்தை வெல்வார்.
சர்வதேச அளவிலான நெருக்கடியான போட்டிகளை எதிர்கொண்டு அனுபவம் பெற்றுள்ள குகேஷ், மீண்டும் தனது திறமையை நிரூபித்து உலக சாம்பியன் பட்டத்தைத் தக்கவைப்பாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
0
Leave a Reply