25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


இராஜபாளையம்  மற்றும் விருதுநகர்  பகுதிகளில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்த முகாம் பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர்  நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இராஜபாளையம் மற்றும் விருதுநகர் பகுதிகளில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்த முகாம் பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் திருவனந்தபுரம் தெரு மற்றும் விருதுநகர் முத்தால் நகர் கூரைக்குண்டு தொடக்கப்பள்ளியில் (29.11.2025)  வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் பணிகள் (SIR) தொடர்பாக, வெளியூரில் பணிபுரிபவர்கள் தங்களுக்கான படிவங்களைப் பெற்றுக் கொள்வதை எளிதாக்குவதற்காகவும், 2002-ம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்களைக் கண்டறிவதற்கு உதவி செய்வதற்காகவும், படிவங்களை நிரப்புவதற்கும், நிரப்பப்பட்ட படிவங்களை வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் திரும்ப அளிப்பதற்காவும், அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருவதை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S, அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.01.01.2026 தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல்களை திருத்தம் செய்வதற்கான சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகள் விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது.

வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடுவீடாகச் சென்று கணக்கெடுப்புப் படிவங்களை வழங்கி வருகின்றனர்.மேலும் திரும்ப பெறப்பட்ட கணக்கெடுப்பு படிவங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.இதுவரை விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம்  வழங்கப்பட்டுள்ள 16,10,778வாக்காளர்களுக்கான கணக்கெடுப்புப் படிவங்களில் 13,37,911 படிவங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

தற்போது, வெளியூர்களில் பணிபுரிபவர்கள் தங்களுக்கான படிவங்களைப் பெற்றுக் கொள்வதை எளிதாக்குவதற்காகவும், 2002-ம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்களைக் கண்டறிவதற்கு உதவி செய்வதற்காகவும், படிவங்களை நிரப்புவதற்கும், நிரப்பப்பட்ட படிவங்களை வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் திரும்ப அளிப்பதற்காகவும், அந்தந்த வாக்குச்சாவடிமையங்களில் 28.11.2025 வெள்ளிக் கிழமை முதல் 30.11.2025 ஞாயிற்றுக் கிழமை ஆகிய 3 தினங்களிலும் சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்து
நடத்தப்பட்டு வருகிறது.

எனவே, இதுவரை கணக்கெடுப்புப் படிவங்களைப் பெறாதவர்களும், தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள கணக்கெடுப்புப் படிவங்களைப் பூர்த்தி செய்து அளிக்காதவர்களும் இச்சிறப்பு முகாம்களைப் பயன்படுத்திபடிவங்களை பெற்று பூர்த்தி செய்துதிரும்பக் கொடுத்து உங்களது பெயர் வரைவு வாக்காளர் பட்டியல் 2026-இல் இடம் பெறுவதை உறுதி செய்யும்படிமாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News