25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


தேசிய யூத் தடகளம்: 2 தங்கம் உட்பட 9 பதக்கங்களை வென்ற தமிழகம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தேசிய யூத் தடகளம்: 2 தங்கம் உட்பட 9 பதக்கங்களை வென்ற தமிழகம்.

லூதியானா: பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் நடைபெற்ற 21வது தேசிய யூத் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், தமிழகம் 2 தங்கம், 4 வெள்ளி, 3 வெண்கலம் என மொத்தம் 9 பதக்கங்களை வென்று அசத்தியது.

18 வயதுக்கு உட்பட்டோருக்கான இப்போட்டியில், தமிழகத்தின் சார்பில் 21 வீரர்கள், 16 வீராங்கனைகள் என மொத்தம் 37 பேர் பங்கேற்றனர்.

ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் தமிழகத்தின் சாம்ராஜ், 10.46 வினாடிகளில் இலக்கை கடந்து தங்கப் பதக்கம் வென்றார். பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் மிர்த்திகா, 11.78 வினாடிகளில் பந்தயத்தை நிறைவு செய்து தங்கம் கைப்பற்றினார்.

பெண்களுக்கான 200 மீட்டர் ஓட்டத்தில் தமிழகத்தின் சகாய ஜெமிமா, 24.54 வினாடிகளில் வந்து வெள்ளிப் பதக்கம் வென்றார். இத்தொடரில் அவர் வென்ற இரண்டாவது பதக்கம் இதுவாகும். முன்னதாக 400 மீட்டர் ஓட்டத்தில் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார்.

பெண்களுக்கான 100 மீட்டர் தடை ஓட்டத்தில் ராஜஸ்ரீ, 14.23 வினாடிகளில் பந்தயத்தை நிறைவு செய்து வெள்ளிப் பதக்கம் பெற்றார். நீளம் தாண்டுதலில் மிருனிஷா, 5.69 மீட்டர் தாண்டி வெள்ளிப் பதக்கம் வென்றார்.

ஆண்களுக்கான உயரம் தாண்டுதலில் சக்திவேல், 2.07 மீட்டர் உயரம் தாண்டி வெண்கலப் பதக்கம் வென்றார். 110 மீட்டர் தடை ஓட்டத்தில் கிரிபால் கார்த்திக் வெண்கலம் கைப்பற்றினார்.

இதன்மூலம் தமிழக அணி, 2 தங்கம், 4 வெள்ளி, 3 வெண்கலம் என மொத்தம் 9 பதக்கங்களுடன் தொடரை நிறைவு செய்தது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News