25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


மாவட்டத்தில் 218 நகர்ப்புற நியாய விலைக்கடைகள் மூலம் 25,000 கிலோ வெங்காயம் கிலோ ரூ.35-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மாவட்டத்தில் 218 நகர்ப்புற நியாய விலைக்கடைகள் மூலம் 25,000 கிலோ வெங்காயம் கிலோ ரூ.35-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

விருதுநகர் மாவட்டம், மல்லாங்கிணறு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில் உள்ள நியாயவிலைக்கடைகளில் பொதுமக்களுக்கு கிலோ ரூ.35/- விலையில் வெங்காயம் விற்பனை செய்யப்படும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.தமிழ்நாடு அரசு ஏழை எளிய நடுத்தர மக்களின் நலனை கருத்தில் கொண்டு, வெங்காய விலை ஏற்றத்தை உடனடியாக கட்டுப்படுத்தும் வகையில் பொதுமக்களுக்கு நியாயமான விலையில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் பொதுமக்களின் அன்றாட தேவையை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையத்தின் மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்ட 25,000 கிலோ வெங்காயம், மாவட்டத்தில் உள்ள 218 நகர்ப்புற நியாய விலைக்கடைகள் மூலம் இன்று முதல்(03.09.2026) குடும்ப அட்டைதாரர்களுக்கு கிலோ ரூ.35/- என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மாவட்டத்தில் உள்ள நகர்ப்புற நியாய விலைக்கடைகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் வட்டாரம் வாரியாக வெங்காயம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, அருப்புக்கோட்டை வட்டாரத்தில் 28 நியாய விலைக்கடைகளுக்கு 3,200 கிலோ, காரியாபட்டி வட்டாரத்தில் 11 கடைகளுக்கு 1,200 கிலோ, இராஜபாளையம் வட்டாரத்தில் 53 கடைகளுக்கு 6,150 கிலோ, சாத்தூர் வட்டாரத்தில் 7 கடைகளுக்கு 650 கிலோ, சிவகாசி வட்டாரத்தில் 49 கடைகளுக்கு 6,450 கிலோ, திருவில்லிபுத்தூர் வட்டாரத்தில் 31 கடைகளுக்கு 3,450 கிலோ, வத்திராயிருப்பு வட்டாரத்தில் 17 கடைகளுக்கு 1,650 கிலோ மற்றும் விருதுநகர் வட்டாரத்தில் 22 கடைகளுக்கு 2,250 கிலோ என மொத்தம் 218 நகர்ப்புற நியாய விலைக்கடைகளுக்கு 25,000 கிலோ வெங்காயம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

எனவே, நகர்ப்புற பகுதி குடும்ப அட்டைதாரர்கள் தங்களுக்கான நியாய விலைக்கடைகளில் கிலோ ரூ.35/- என்ற விலையில் வெங்காயத்தை பெற்றுக்கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இந்த ஆய்வின் போது, மல்லாங்கிணறு பேரூராட்சி செயல் அலுவலர், கூட்டுறவு பணியாளர்கள், அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News