காமாட்சி விளக்கின் மகத்துவம்.
காமாடசி அம்மன் உலக மக்களின் நலனுக்காக தவம் இருந்தவர். அவர் அப்படி தனது பிள்ளைகளின் நன்மைக்காக தவம் இருந்ததால் சகல தெய்வங்களும் காமாட்சி அம்மனுக்குள் அடங்கியது ஆகையால் காமாட்சி அம்மனை வழிபட்டால் அனைத்து தெய்வங்களையும் வழிபட்ட பலன் கிடைத்துவிடும் என்பது நம்பிக்கை.
அதனால்தான் திருமணங்களில் மணமக்கள் கையில் காமாட்சி விளக்கை ஏந்திக்கொண்டு வலம்வர சொல்லுகிறார்கள். மேலும், புகுந்த வீட்டிற்குச் செல்லும் மணப்பெண்ணை, முதலில் காமாட்சி விளக்கை ஏற்ற சொல்கிறார்கள்.
மேலும் காமாட்சி விளக்கினை ஏற்றுவதால் குலதெய்வத்தின் ஆசியுடன் குலம் தழைத்து வளரும் என்பதும் நம்பிக்கை.
0
Leave a Reply