25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


திருகாக்கரையப்பன் கோயில்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

திருகாக்கரையப்பன் கோயில்.

மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் ஒருவரான வாமனர், கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகிலுள்ள திருக்காக்கரையில் திருகாக்கரையப்பன் என்னும் பெயரில் கோயில் கொண்டிருக்கிறார். இவரை வழிபட்டால் முன்வினை பாவம் தீரும். இங்குள்ள தாயார் பெருஞ்செல்வ நாயகியை தரிசித்தால் பணம் சேரும்.

அசுர குலத்தில் பிறந்த மகாபலிச்சக்ரவர்த்தி தன் செல்வத்தை தர்மம் செய்தார். இதனால் தன்னை விட தர்மம் செய்பவர் யாருமில்லை என்ற அகந்தை ஏற்பட்டது.

அகந்தை அழிந்தால் தன்னை வந்தடையும் தகுதி மகாபலிக்கு கிடைக்கும் என எண்ணினார் மகாவிஷ்ணு. அதற்காக குள்ள வடிவில் 'வாமனர்' என்ற பெயரில் பூலோகம் வந்தார். மகாபலியிடம் தானமாக மூன்றடி மண் கேட்டார்.

"குள்ளமான தங்களின் காலடியால் மூன்றடி மட்டும் கேட்கிறீர்களே. இன்னும் அதிகமாக கேட்கலாமே" என்றார் மகாபலி.

வந்திருப்பவர் மகாவிஷ்ணு என்பதை அறிந்த அசுரகுரு சுக்ராச்சாரியார், 'தானம் அளிக்காதே' என மகாபலியைத் தடுத்தார். ஆனால் குருநாதரையும் மீறி மகாபலி சம்மதித்தார். உடனே விஸ்வரூபம் எடுத்த மகாவிஷ்ணு ஓரடியால் பூமியையும், இன்னொரு அடியால் ஆகாயத்தையும் அளந்து விட்டு, "மூன்றாவது அடிக்கு நிலம் எங்கே " எனக் கேட்டார். அகந்தை அடங்கிய மகாபலி, "பகவானே ... என் தலையைத் தவிர வேறு இடமில்லை" என பணிந்தார். அவரைத் தன் காலால் பூமிக்குள் அழுத்தி மகாவிஷ்ணு ஆட்கொண்டார். இந்த சம்பவம் நடந்த இடம் எர்ணாகுளம் அருகிலுள்ள காக்கரை. இங்கு

பெருமாள் திருக்காக்கரையப்பன் (வாமனர்) என்ற பெயரில் நின்ற கோலத்தில் இருக்கிறார் . பெருஞ்செல்வ நாயகி தனி சன்னதியில் இருக்கிறார்.

கோயிலுக்கு வெளியே பகவதி, சாஸ்தா, சுந்தர யக்க்ஷி, கிருஷ்ணர், நாகர் சன்னதிகள் உள்ளன.

பரசுராமர் இக்கோயிலை உருவாக்கினார். மகாபலி பூஜித்த சிவலிங்கம் உள்ளது. கோயில் வாசலில் மகாபலியின் சிம்மாசனம் உள்ளது. இங்கு பக்தர்கள் விளக்கேற்றுகின்றனர்.

கேரள பாணியில் ஓடு வேய்ந்த வட்ட வடிவக் கோயில் இது. முன் மண்டபத்தில் வாமனரின் மரச்சிற்பம் உள்ளது. திவ்ய தேசங்களில் ஒன்றான இங்கு தமிழ்க் கல்வெட்டுகள் உள்ளன. 9 முதல் 12ம் நூற்றாண்டு வரை சேர மன்னர்கள் திருப்பணி செய்துள்ளனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News